Home /News /lifestyle /

இந்த 2 ஊட்டச்சத்துகளில் அக்கறை செலுத்தாததுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் - ஊட்டச்சத்து நிபுணர்கள்

இந்த 2 ஊட்டச்சத்துகளில் அக்கறை செலுத்தாததுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் - ஊட்டச்சத்து நிபுணர்கள்

உணவு

உணவு

இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப நம்முடைய உணவு முறைகளில் நாம் மாற்றம் செய்து வருகிறோம். இது ஒரு போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்காது என்பதை யாரும் நினைவில் கொள்வதில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தைத்தரும் புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைத் தான் புறக்கணித்துவருகிறோம் என்றும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்

இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப நம்முடைய உணவு முறைகளில் நாம் மாற்றம் செய்து வருகிறோம். இது ஒரு போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்காது என்பதை யாரும் நினைவில் கொள்வதில்லை. உயிர்வாழ்வதற்குப்போதுமான அளவு புரத உணவுகளை உட்கொண்டாலும் எல்லா வகையான புரதங்களிலும் நம் உடலுக்குத் தேவையாக ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான தசையை உருவாக்கவோ ஆரோக்கியமாகவே வாழ முடியாது. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான புரத உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாரச்சத்து குறைபாடு. இன்றைய சூழலில் பலருக்கு நார்ச்சத்து குறைபாடு அதிகளவில் உள்ளது. நமது உணவில் உள்ள நார்ச்சத்துகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உள்ளது என தெரிவிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது என்கிறார்கள். மேலும் செரிமானத்திற்கு எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. நார்ச்சத்து குறைபாட்டினால் தேவையில்லாத உடல் உபாதைகளுக்கும் நாம் ஆளாக நேரிடுகிறோம். எனவே புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் தான் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை நமக்கு அளிக்கிறது.



ஆனால் இதுப்போன்று நம்முடைய உணவு முறையில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாறுபட்ட உணவு மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவது தான். குறிப்பாக பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவது ஒரு புறம் இருந்தாலும் இந்த செயல்பாட்டால் நம்முடைய ஆரோக்கியத்தை ஒரு போதும் தியாகம் செய்யக்கூடாது. எனவே மேக்ரோ-நியூட்ரியன்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை முறையாக உட்கொண்டு, ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.

அன்றாட உணவில் இந்த 4 மசாலாக்களை சேர்த்தால் போதும்... நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கவலையே வேண்டாம்...

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூற்றுப்படி மைக்ரோநியூட்ரியன்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் என்னென்ன, அவை எப்படி உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது என நாம் தெரிந்துக்கொள்வோம். கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் போன்ற உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இந்த உணவுகள் அனைத்தும் மேக்ரோநியூட்ரியன்கள் ஆகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நுண்ணுட்டச்சத்துக்கள். மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க இவ்விரு சத்துள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.



குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் படி, Hidden Hunger என்று சொல் பிரபலமானதாக உள்ளது. இது ஒருவரின் உடலுக்குத் தேவையாக அத்தியாவசிய மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் இடைவெளியை அன்றாடம் உட்கொள்வதைக் கண்டறியும் முறையாகும். இதன்படி சமீப காலங்களாக வைட்டமின்கள் ஏ மற்றும் டி, மற்றும் இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வழக்கமான உணவு முறையில் இடம் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே இனிவரும் காலங்களிலாவது ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகளை நிச்சயம் பயன்படுத்தாவிடில், உடல் ஆரோக்கியம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்து செயல்படவேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fiber rich, Protein Deficiency

அடுத்த செய்தி