Home /News /lifestyle /

கால்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்... ஆண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!

கால்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்... ஆண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு ஏற்படும். அத்துடன் சிறுநீர் கழித்து முடித்ததும் அளவுக்கு அதிகமான சோர்வு உருவாக்கூடும். இந்த புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவது மேம்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய் என அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு வகை சுரப்பியான புரோஸ்டேட்டில் உருவாவதால் தான் இந்த புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. வயதானவர்களை மட்டுமல்ல இளம் வயது ஆண்களையும் தாக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய், அவர்களுடைய கால்களையும் பாதிக்கக்கூடிய என்பது தெரியுமா?... ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகளை கவனிப்பதன் மூலமாக புரோஸ்டேட் புற்றுநோயால் தாக்கப்பட்டவர்கள் கால்கள் பாதிக்கப்படுவதை அறிந்து கொள்ளலாம்...

கால்களில் பரவுவதற்கான அறிகுறிகள்:

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் உள்ள வால்நட் வடி சிறிய சுரப்பி புரோஸ்டேட் என அழைக்கப்படுகிறது. இது விந்துவை உருவாக்க உதவுகிறது. இந்த புற்றுநோய் உருவாவதற்கான உறுதியான காரணம் என்ன என்பதற்கான தெளிவான பதில் இல்லை என்றாலும், புரோஸ்டேட்டில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரும்போது புரோஸ்டேட் புற்றுநோய் உருவாவதாக நம்பப்படுகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சைலன்ட் கில்லரான இந்த நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி ஆபத்தை அதிகரிக்கூடும் என்பது தான்.

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு ஏற்படும். அத்துடன் சிறுநீர் கழித்து முடித்ததும் அளவுக்கு அதிகமான சோர்வு உருவாக்கூடும். இந்த புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவது மேம்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. எலும்புகளில் வலி, சோர்வு, காரணமில்லாமல் உடல் எடை குறைவது ஆகியன இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.



புரோஸ்டேட் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ் பெரும்பாலும் நிணநீர் கணுக்கள் மற்றும் எலும்புகளில் ஏற்படுகிறது. உடலின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பரவக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய், அது பரவக்கூடிய பகுதியைப் பொறுத்து சில அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் கால்களில் பரவும் போது ஒருவர் தவறவிடக்கூடாத சில அறிகுறிகள் உள்ளன.

கால்களில் வீக்கம் ஏற்படுவது, புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகள் கால்களுக்கு பரவுவதைக் குறிக்கிறது. புற்றுநோய் நிணநீர் மண்டலங்களுக்கு பரவியிருந்தால், அது கால்களில் பெரிய வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

30 வயதுக்கு பின் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இந்த விஷயங்கள் அவசியம்..!

ஆண்கள் புறக்கணிக்கக் கூடாத சில அறிகுறிகள்:

புற்றுநோய் செல்கள் நிணநீர் திரவத்தை வெளியேற்றுவதை நிறுத்தும் போது, அந்த பகுதிகளில் திரவம் சேருவது அதிகரிப்பதால், காலில் வீக்கம் ஏற்படலாம். கால்களில் காணப்படும் இந்த வகையான வீக்கம் லிம்போடிமா என அழைக்கப்படுகிறது.



அறிகுறிகள் :

1. இடுப்பு, மார்பு அல்லது உங்கள் கால்களில் வலி மற்றும் உணர்வின்மையை உணருதல்.

2. புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக கீழ் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படலாம்.

எலும்புகளையும் பாதிக்கும் குடல் புற்றுநோய்... எச்சரிக்கும் 3 அறிகுறிகள் என்னென்ன..? 

3. அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகு சோர்வாக உணருதல், சிறுநீருடன் விந்து அல்லது ரத்தம் வெளியேறுதல், விந்து வெளியேறுவதில் சிரமம் ஆகியன ஆண்கள் தவிர்க்கக்கூடாத முக்கிய அறிகுறிகள் ஆகும்.

புரோஸ்டேட் புற்றுநோய் கால்களில் மட்டுமல்ல, எலும்புகள், குடல்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல்களுக்கும் பரவக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Prostate cancer

அடுத்த செய்தி