முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!

ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Prostate Cancer | புரோஸ்டேட் புற்றுநோயை ஒரு silent killer என்றே கூறலாம், அதன் தீவிரத்தை உடனே அறிவது கடினம். எனினும் ஒரு சில அறிகுறிகளால் கண்டறியலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு வகை சுரப்பி தான் புரோஸ்டேட். இது விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்கிறது. பொதுவாக 40 முதல் 50 வயதானவர்களுக்கு இந்த சுரப்பியின் செயல்திறன் குறையும்.

இந்த சுரப்பியில் உண்டாகும் புற்றுநோய் தான் இந்த புரோஸ்டேட் புற்றுநோய். பொதுவாக இந்த புரோஸ்டேட் புற்றுநோய் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கும். புரோஸ்டேட் புற்றுநோயில் adenocarcinoma of the prostate, transitional cell carcinoma of the prostate, squamous cell carcinoma of the prostate and small cell prostate cancer என பல வகைகள் உண்டு.

புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன.?

புரோஸ்டேட் புற்றுநோயை ஒரு silent killer என்றே கூறலாம், அதன் தீவிரத்தை உடனே அறிவது கடினம். எனினும் ஒரு சில அறிகுறிகளால் கண்டறியலாம்.

புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு ஏற்படும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாவதோடு சிறுநீர் கழித்தபின்னும் கூட உடல் அசதியாகவே இருக்கும். புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புற்றுநோய் செல்கள் தாக்கத்தின் காரணமாக இடுப்பு பகுதியில் வலி ஏற்படும் இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடும். சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த வலி உண்டாவதோடு, வலியுடன் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் மற்றும் சீழ் கலந்து போக வாய்ப்புகள் உள்ளது.

உங்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய காரணிகள் என்ன?

புரோஸ்டேட் புற்றுநோய் எதனால் உண்டாகும் என்று தெளிவாக தெரியவில்லை என்றாலும், நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகளை தற்போது காண்போம். பொதுவாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த நோய் அதிகம் தாக்குகிறது. ரத்த உறவினருக்கு ஏற்கனவே இந்த புரோஸ்டேட் புற்றுநோய் இருந்திருந்தால், மரபணுக்களால் அவர்கள் சந்ததிக்கும் பரவும் அபாயம் உள்ளது.

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இந்த வகை புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

Also Read : ஆண்களே... எப்போதும் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க நினைக்கிறீர்களா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

நீங்கள் எந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்?

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தவிர, கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம். திடீரென சிறுநீரில் மற்றும் விந்துவில் இரத்தம், திடீரென விறைப்புத் தன்மை இல்லாமல் போவது, இடுப்பு பகுதியில் மிகுந்த அளவு வலி, தொடர்ந்து சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, வலியுடன் விந்து வெளியேதல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வதின் அவசியம்

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், நம் உடலில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும்போது மருத்துவரை அணுகுவதை விட, ​​வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். இதுவே மருத்துவர்கள் அறிவுறுத்துவது. ஏனெனில் இந்த பரிசோதனைகள் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. குறிப்பாக புற்றுநோய் போன்ற தீவிர நோயை தொடக்கத்திலேயே கண்டறியலாம்.

Also Read : என்னது... சைக்கிள் ஓட்டுவது ஆண்மையை பாதிக்குமா..? இதற்கு என்னதான் வழி..?

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சுய கண்காணிப்பு மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனை முக்கியமானது. அறிகுறி எந்த அளவு சிறியதாக தோன்றினாலும் அல்லது உணரக்கூடியதாக இருந்தாலும், தாமதமின்றி உடனடியாக சிகிச்சை தேவை. மோசமான நோய்கள் வேகமாக வளர்கின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Also Read : சியா விதைகள் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துமா..? ஆய்வு தரும் பதில்

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மருத்துவரிடம் வழக்கமாக பரிசோதனை செய்து கொள்வது, உங்கள் உடலில் புலப்படும் அறிகுறிகளை கண்காணித்தல், ஆகியவை அவசியமான ஒன்று. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

First published:

Tags: Men's health, Prostate cancer