தினசரி உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்பது அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் விஷயம் ஆகும். ஆனால், நீண்ட நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது என்பது புகைப்பிடித்தலுக்கும் மேலான உடல் நல பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை கேள்விபட்டது உண்டா? அதை உறுதி செய்யும் வகையில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தியுள்ளது.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோயால் இறக்கும் அபாயம் அதிகம். மேஜை, கம்ப்யூட்டர் திரைகளுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு வேலை செய்வது உடலுக்கு நலனுக்கு நல்லதல்ல. நகரும்போது அல்லது ஓடும்போது செலவாகும் ஆற்றலை விட உட்கார்ந்து இருக்கும்போது குறைவான ஆற்றலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், உடல் பருமன், அடிவயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது அதிகரிக்கும் எனத் தெரிவிக்கும் ஆய்வுகள், கடுமையான நீரிழிவு நோய், இதயநோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றன.
சைமன் ஃப்ரேசர் யூனிவர்சிட்டி தனது சமீபத்திய ஆய்வில் நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல கோளாறுகள் மற்றும் தீவிரமான பாதிப்புகளை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் 21 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். 11 ஆண்டுகளுக்கு மேல் மக்களின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆய்வின் முடிவுப்படி ஒரு நாளைக்கு 6 – 8 மணி நேரம் வரை அமர்ந்து கொண்டே இருப்பவர்களில் 1 12 – 13 சதம் வரை மத்திம வயதிலேயே இறப்பு மற்றும் தீவிரமான நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவே ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களில் 20 சதவிகிதத்தினர் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாமா கார்டியாலஜி எந்த என்ற ஜர்னலில் இந்த ஆய்வு விவரங்கள் முழுவதுமாக பகிரப்பட்டுள்ளது.
சைமன் ஃப்ரேசர் யூனிவர்சிட்டியின் நல்வாழ்வு அறிவியலின் ஆசிரியரான ஸ்காட் லியர் மற்றும் சீனா பெய்ஜிங்கில் உள்ள சீன மருத்துவ அகாடெமியின் வேய் லீ ஆகிய இருவராலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நடுத்தர வயதிலேயே மரணம் மற்றும் கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நோய் பாதிப்பு ஏற்பட்டு விரைவில் இறப்பு மற்றும் தீவிர நோய்களுக்கு ஏற்படுவது ஆகிய இரண்டுமே குறைவான வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மிகவும் பரவலான பிரச்சனையாக காணப்படுகிறது.
இந்த வகை இரத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு நிச்சயம் வருமா..? என்ன காரணம்..?
நாள் முழுவதும் அமர்ந்தே இருந்தாலும் உடற்பயிற்சி செய்வார்கள் செய்பவர்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அல்லது ஆபத்து குறைந்து. ஆனால் எட்டு மணிநேரத்திற்கு மேல் அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்களும் உடலுக்கு உழைப்பு என்பதே இல்லாதவர்களுக்கும் இந்த ஆபத்து 50% அதிகரிக்கிறது.
நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே உடல் உழைப்பு இல்லாதவர்கள் உலகம் முழுவதிலும் ஏற்படும் மரணங்களில் 8.8 சதவிகிதம் அளவுக்கு இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. புகை பிடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 10.66% இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை என்பது அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது.
8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு நாளைக்கு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கத்தால் இறப்பவர்களுக்கு இணையான பாதிப்பை எதிர்கொள்வதாகவும், உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார். பகல் நேரங்களில் குறைவாக உட்கார்தல் அல்லது படுத்துறங்குதலை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health issues