இளைஞர்களிடம் அதிகரிக்கும் திடீர் மாரடைப்பு - அறிகுறிகளும், தவிர்க்கும் வழிகளும்

இதய பாதிப்பு

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவில், 30-40 வயதுடயவர்களில் திடீர் கார்டியாக் அரெஸ்ட் (sudden cardiac arrest ) ஏற்படுவதில் 13% அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
எந்த வயதிலும் யாரையும் தாக்கி மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது கார்டியாக் அரெஸ்ட். உடலுழைப்பு இன்றி பெரும்பாலும் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, நீரிழிவு நோய், மது மற்றும் புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு காரணங்களால் இளவயதினர் மத்தியில் திடீர் கார்டியாக் அரெஸ்ட் அதாவது இதய நிறுத்தம் என்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவில், 30-40 வயதுடயவர்களில் திடீர் கார்டியாக் அரெஸ்ட் (sudden cardiac arrest ) ஏற்படுவதில் 13% அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் இதய நோய் பாதிப்பு ஹிஸ்ட்ரி இல்லாதவர்களையும் கூட தாக்குகிறது இந்த திடீர் கார்டியாக் அரெஸ்ட்.

திடீர் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதய செயல்பாடு முற்றிலும் நிற்பது, சுவாசம் மற்றும் நினைவிழப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் இதயத்தை மீண்டும் இயங்க வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதயத்தை திறம்பட பம்ப் செய்யும் நடைமுறையில் ஏற்படும் தடையின் விளைவாக திடீரென இதயம் ரத்த ஓட்டத்தை இழக்க நேரிடுகிறது.



பொதுவாக நம் இதய துடிப்பு மின் தூண்டுதல்களால் (electrical impulses) கட்டுப்படுத்தப்படும். இந்த மின் தூண்டுதல்கள் அவற்றின் பேட்டர்னை மாற்றும் போது, ​​இதய துடிப்பு ஒழுங்கற்றதாகி, அசாதாரண ரித்ததுடன் இதயம் துடிக்கும் அரித்மியா நிலைக்கு வழிவகுக்கும். ஒருகட்டத்தில் இதயத்தின் ரிதம் நிறுத்தப்படும் போது, ​​கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இதய துடிப்பு முற்றிலும் நின்றுவிடும். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட நபருக்கு மிக விரைவாக சிகிச்சையை துவங்குவது மிக முக்கியமானது. ஏனென்றால் கார்டியாக் அரெஸ்ட் சில நிமிடங்களில் மூளை பாதிப்பு அல்லது மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஆபத்து காரணிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள்:

குடும்பத்தினரில் வேறு யாருக்காவது திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருப்பது, புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், உடல்செயல்பாடு குறைந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட இன்னும் பல காரணங்கள் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளாக உள்ளன. பதற்றம், மார்பு வலி, மயக்கம், மூச்சு திணறல், திடீரென அதிக வியர்வை, பலவீனம், தலைச்சுற்றல், தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு உள்ளிட்டவை கார்டியாக் அரெஸ்ட்டிற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.



சிபிஆர்:

திடீர் கார்டியாக் அரெஸ்ட்டை நிர்வகிப்பதற்கான முதல் படி CPR (Cardiopulmonary Resuscitation) ஆகும். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட நபருக்கு உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை பராமரிக்க கையை கொண்டு மார்பை நன்றாக அழுத்துவது உள்ளிட்ட நுட்பங்களின் கலவை CPR. கார்டியாக் அரெஸ்ட்டின் போது மூளை மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளுக்கு இதயத்தால் ரத்தத்தை அனுப்ப முடியாததால் அந்த வேலையே செய்ய CPR முறை செய்யப்பட வேண்டும். இது மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது.

கார்டியாக் அரெஸ்ட்டிற்கான சிகிச்சைகள் :

டிஃபிபிரிலேஷன் (Defibrillation):

டிஃபிபிரிலேஷன் என்பது உயிருக்கு ஆபத்தான இதய டிஸ்ரித்மியாக்களுக்கான சிகிச்சையாகும். பொதுவாக இது மார்பு சுவர் வழியே இதயத்திற்கு எலெக்ட்ரிக் ஷாக் வழங்குவதை உள்ளடக்குகிறது. இந்த டிஃபிபிரிலேஷன் செயல்முறை இதயத்தின் குழப்பமான ரிதத்தை சிறிது நேரத்தில் நிறுத்துகிறது. இது பெரும்பாலும் வழக்கமான இதய ரிதம் மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்க உதவும் வகையில் தங்கள் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் இதய நிலையை நிர்வகிக்க ஐ.சி.டி (இம்ப்லாண்டபிள் கார்டியோவர் டிஃபிபிரிலேட்டர்) பரிந்துரைக்கப்படலாம்.



எமெர்ஜென்சி ரூம் சிகிச்சை:

இதய பாதிப்புகள் ஏற்பட்ட நோயாளி எமெர்ஜென்சி ரூமிற்குள் அனுமதிக்கப்பட்டவுடனே அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்கள் நிலைமையை சரி செய்யவும், ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் அல்லது இதயத்தில் ஏற்பட்டிருக்கும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கவும் விரைந்து பணியாற்றுகிறார்கள். ஹார்ட் ரிதத்தை நிலையானதாக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும்.

நீண்ட கால சிகிச்சை:

தீவிர நிலையில் இருந்து நோயாளி குணமடைந்த பிறகு, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதற்கான காரணத்தைத் தீர்மானிக்க உதவும் பிற சோதனைகளை செய்வது குறித்து மருத்துவர் விவாதிப்பார். மேலும் தொடர்ந்து இதய கோளாறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நடைமுறைல் இருக்க கூடிய சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.

இதய ஆரோக்கிய பராமரிப்பு:

தொற்று பரவல் காரணமாக தற்போது ஏராளமான இளம்வயதினர் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். உட்காரும் இடத்தை விட்டு சிறிது நேரம் கூட எழுந்திருக்காமல் பணியை தொடர்வதால் ஏராளமான உடல்நல கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதில் ஒன்று தான் இதய கோளாறுகள். மிகவும் அபாயகரமான இதய பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல்செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் தேவையான மாற்றங்களை செய்வது நிச்சயமாக இதய நோய் அபாயம் ஏற்படுவதை வெகுவாக குறைக்க உதவும்.

புகைப்பிடிப்பதை போலவே இந்த 5 பழக்கங்களும் மிகவும் ஆபத்தனாது : எச்சரிக்கும் மருத்துவர்கள்

எண்ணெய், சர்க்கரை, அதிக கொழுப்பு உணவை முடிந்தவரை தவிர்த்து தானியங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் ஒமேகா 3 நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்க்க வேண்டும். அதே போல உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 30-45 நிமிடங்கள் நடைபயிற்சியோ அலல்து உடற்பயிற்சியோ செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

அதிக மனஅழுத்தம் இதயத்தை பாதிக்கும் என்பதால் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் தினசரி குறைந்தது அரைமணி நேரம் யோகா (பிராணயாமா மற்றும் தியானம்) பயிற்சியில் ஈடுபடலாம். புகைபழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்டவை தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்த்து இதஹ்யம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
Published by:Sivaranjani E
First published: