Home /News /lifestyle /

கர்ப்பமடைய நினைக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்ற கூடாத உணவு பழக்கங்கள்..

கர்ப்பமடைய நினைக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்ற கூடாத உணவு பழக்கங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள் இவை தான்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள், நல்ல தூக்கம் மற்றும் சீரான உடல்செயல்பாடு உள்ளிட்டவை கருவுற நினைக்கும் பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை. மேற்கண்டவற்றை தவறாமல் பின்பற்றி வருவது தாயாக நினைக்கும் பெண் கர்ப்பமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க பெரிதும் உதவும். இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர்  கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள் பற்றி சில டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ருஜுதா, இது தொடர்பாக போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். நல்ல சிறப்பான உடலுறவைத் தவிர கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் இன்னொரு முக்கிய ஒரு விஷயம், இன்சுலின் சென்சிட்டிவிட்டி. மேலும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்த LBM எனப்படும் மெலிந்த உடல் எடையை அதிகரிக்கும் பாதையை தேர்வு செய்ய வேண்டும். LBM என்பது மொத்த உடல் எடைக்கும், உடலில் இருக்கும் கொழுப்பினுடைய எடைக்கும் உள்ள வித்தியாசமாக வரையறுக்கப்படுகிறது.

இதற்கு கர்ப்பமாக முயற்சிக்கும் ஒரு பெண் என்ன சாப்பிடுகிறார் அல்லது என்ன சாப்பிட கூடாது என்ற விஷயம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்த இன்ஸ்டா போஸ்ட்டில் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் குறிப்பிட்டிருக்கிறார். கர்ப்பமடைய நினைக்கும் பெண்களுக்காக ருஜுதா திவேகர் பரிந்துரைத்துள்ள சில உணவு டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

1. காலை உணவாக பாலில் கலந்து சாப்பிடக்கூடிய சில தானியங்கள்,பழச்சாறுகள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட அனைத்து வகையான ஸ்னாக்ஸ்களையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர யோகர்ட் , பாலாடைக்கட்டி மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட low-fat versions-களை சாப்பிடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

2. பெண்கள் தங்களது தினசரி முக்கிய உணவில் தவறாமல் ஒரு சட்னி இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த அத்தியாவசிய கொழுப்பு நிரம்பிய சைட்டிஷ்கள் வைட்டமின் B12-ஐ உடலில் உருவாக்க உதவுகிறது. எனவே காலை அல்லது மதிய உணவுக்கு ஒரு டீஸ்பூன் ஊறுகாய், மதிய அல்லது இரவு உணவில் 2 - 3 டீஸ்பூன் சட்னி எடுத்து கொள்ளலாம் என்று திவேகர் கூறி இருக்கிறார்.

3. குடல் பாக்டீரியா (gut bacteria), அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் பி வைட்டமின்களின் பல்வேறு விகாரங்களை கொண்டுள்ள தயிரை பெண்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் வலியுறுத்தி இருக்கிறார். கர்ப்பம் தரித்தவுடன் அமிலத்தன்மையைக் கட்டுக்குள் வைத்திருக்க தயிர் உதவும். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் தயிர் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயார் செய்யப்படும் தயிரை பயன்படுத்துவதே சிறந்தது என்று கூறி இருக்கிறார். 
View this post on Instagram

 

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar)


4, தினசரி தவறாமல் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்வது அவசியம். இந்த பழக்கத்தை பெண்கள் தொடர்ந்து பின்பற்றி வருவது புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் இன்சுலின் சென்சிட்டிவிட்டி உள்ளிட்டவற்றிற்கு நல்லது.

Also Read : கர்ப்பகாலத்தில் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்.. மருத்துவரை எப்போது அணுக வேண்டும் ?

5. முக்கியமாக ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கர்ப்பமடைய நினைக்கும் பெண்களுக்கு ருஜுதா திவேகர் அறிவுரை கூறியுள்ளார். சுருக்கமாக சொன்னால் தேவைக்கு அதிகமாக உண்ணாமல் தேவைக்கு சற்று குறைவாக உண்ணும் வழக்கத்தை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார். இந்த பழக்கத்தால் சிறிய அளவிலான உணவு துகள்கள் வயிற்றில் நுழைவதால், நுண்ணூட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் இன்சுலின் ரெஸ்பான்ஸ் மேம்படும். மேலும் தினமும் 3-5 டீஸ்பூன் நெய்யை சேர்க்க மறக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Pregnancy, Pregnancy diet

அடுத்த செய்தி