COVID-19 Vaccination : குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..?

தடுப்பூசி

மருத்துவர் ஹிந்துஜா பேசும்போது, கொரோனா காலத்தில் குழந்தைகாக முயற்சி செய்வதை ஒத்திவைப்பது நல்லது எனக் கூறியுள்ளார்.

  • Share this:
இந்தியாவில் தற்போது 18 லட்சத்துக்கும் மேலான ஆக்டிவ் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் உள்ளனர். 2வது அலையானது மிக வேகமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 147 லட்சம் பேர் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். ஏறத்தாழ 25 லட்சம் பேர் இரண்டு நிலை தடுப்பூசிகளையும் செலுதிக்கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துகொள்ளலாமா? தடுப்பூசி ஆண்மைக் குறைப்பாட்டை ஏற்படுத்துமா? போன்ற சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் கர்ப்பிணிகளும், பச்சிளம் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இங்கிலாந்தில் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கொடுக்கும் விளங்கங்களை தெரிந்து கொள்ளலாம்.

சாதாரண பெண்கள்

கர்ப்பம் இல்லாத பெண்கள், குழந்தைக்கு முயற்சி செய்யாத பெண்கள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி எடுத்துகொள்ளலாம். மாதவிடாய் காலமாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள தடையில்லை. 4 முதல் 6 வார இடைவெளியில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 15 நாள் இடைவெளியில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர் ரிஷிகேஷ் பாய் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து பெண்களுக்கு எழும் சந்தேகங்களும், கேள்விகளும்... மருத்துவரின் விளக்கம்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் தாய்மார்கள் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி எடுத்துகொள்ளத் தேவையில்லை மருத்துவர் இந்திரா ஹிந்துஜா பேசும்போது, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் கர்ப்பிணகளுக்கும், பச்சிளம் தாய்மார்களுக்கும் தடுப்பூசிகளை பரிந்துரைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் தாய்மார்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவு எதுவும் வெளியிடப்படாததால் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.



மருத்துவர் ரிஷிகேஷ் பாய் பேசும்போது, கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா? என்பது குறித்து தெளிவான ஆய்வுகள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். அமெரிக்காவில் சில கர்ப்பிணி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் கர்ப்பிணிகள் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது என மருத்துவர் பாய் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு முயற்சி செய்யும் பெண்கள்

மருத்துவர் ஹிந்துஜா பேசும்போது, கொரோனா காலத்தில் குழந்தைகாக முயற்சி செய்வதை ஒத்திவைப்பது நல்லது எனக் கூறியுள்ளார். இந்த பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், அடுத்து வரும் மாதங்களில் குழந்தைக்காக முயற்சி செய்யலாம் என விளக்கம் கொடுத்துள்ளார். ஐ.வி.எப் முறையில் குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள், கருமுட்டைகளை சேகரித்து வைத்துவிட்டு, தடுப்பூசி எடுத்து சில நாட்கள் கழித்தபிறகு அந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் மருத்துவர் ஹிந்துஜா கூறியுள்ளார்.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

பாலூட்டும் தாய்மார்கள்

பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் மிகவும் அவசியம். அதேநேரத்தில் கொரோனா பாதித்த தாய், குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வெர்டிக்கல் பரிசோதனையில் தாயிடமிருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மருத்துவர் ஹிந்துஜா, கிளினிக்கல் சோதனையில் உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



மருத்துவர் ஹிமான்ஷூ பவிஷி (Himanshu Bavishi) பேசும்போது, பச்சிளம் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். இதன்மூலம் தாய் பாதுகாக்கப்படுவார் என்றும், தாயிடமிருந்து குழந்தைக்கு எந்த தொற்றும் பரவாது என்றும் அவர் கூறியுள்ளார். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கூடுதலாக ஆன்டிபாடிகள் கிடைக்கும் என மருத்துவர் ஹிமான்ஷூ பவிஷி தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதித்தால்..

வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டால், கர்ப்பிணிகள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவருக்கு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் கும்தா கூறியுள்ளார். கவலைப்படக்கூடாது எனக் கூறியுள்ள அவர், நாள்தோறும் 4 முறை ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சிறிய அளவிலான நடைப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை மருத்துவரின் அறிவுறிரையின்பேரில் மேற்கொள்ளலாம் என கூறியுள்ள மருத்துவர் கும்தா, அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் முன்கூட்டியே பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்..? அவசியமும்..முக்கியத்துவமும்..!

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கொரோனா வைரஸ் புதிய நோய். இதற்காக மருந்துகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசிகளும் முழுமையாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துபவையாக இல்லை. வருமுன் காப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால், கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துமா?

தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதா? என பலருக்கும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர் பாய், இதுதொடர்பான எந்த தரவுகளும் இல்லை என விளக்கமளித்துள்ளார். ஆண்மைக் குறைபாடு தொடர்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள இருந்தால், தடுப்பூசி எடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு தொடரலாம் என தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி ஆண்மைக் குறைப்பாட்டை ஏற்படுத்துவதில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: