2015ஆம் ஆண்டு. பிரேசிலில் உள்ள மகப்பேறு மருத்துவமனை.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகள் அளவில் சிறிய தலையுடன் பிறக்கின்றன. ஆங்கிலத்தில் மைக்ரோகேபாலி( microcephaly) என்று கூறுவார்கள். 2013இல் பிரான்சில் அதிகளவு பாதிப்பை உண்டாக்கிய ஜிகா வைரஸ் ஆக இருக்கலாம் என்று பரிசோதனை செய்தனர். முடிவுகள் ஜிகா வைரஸ் தொற்று அவர்களுக்கு வந்து சென்றதை முடிவு செய்தன. (IgM antibodies)
சிறிய தலையுடன் பிறந்த குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்த போது சில குழந்தைகளுக்கு வலிப்பு நோயும், மூளைத்திறன் குறைபாடும் கண்கள் மற்றும் செவித்திறன் குறைபாடும் காணப்பட்டது. இதை பிறவியில் மைந்த ஸிகா வைரஸ் கூட்டு அறிகுறிகள் ( congenital zika virus syndrome) என்று அழைப்பர்.
கர்ப்பமான பெண்களுக்கு எந்த நோய் தொற்று தாக்கினாலும் நஞ்சுக்கொடி, தன்னைத்தாண்டி கர்ப்பத்தில் இருக்கும் பிஞ்சுக் குழந்தையை நோய் அணுகுவதற்கு அனுமதிக்காது. ஆனால் ஒரு சில வைரஸ்கள் தந்திரமாக வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதித்து அதற்கும் குறை உண்டாகின்றன. கருச்சிதைவு, குறைப்பிரசவம், வயிற்றுக்குள்ளேயே குழந்தை உயிர் இழத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் உண்டாக்கலாம்.
இந்த வைரஸை பரப்பும் முக்கியமான காரணி கொசு . மலேரியா மற்றும் டெங்கு நோயை பரப்பும் அதே கொசு வகை . பகல் நேரத்தில் அதிகமாக கடிக்கும். நல்ல நீரில் முட்டையிடும். அதிகளவு வீடுகளில் இருக்கக்கூடியது.
நோய்த்தொற்று ஒரு வாரம் வரை நீடிக்கலாம். அவரிடமிருந்து மற்றவருக்கு எச்சில் ரத்தம் உடல் உறுப்பு தானம் உடலுறவு இவற்றின் மூலமாக மற்றவருக்கு பரவலாம். தாய்ப்பால் மூலமாகவும் பரவும்.
கொசு கடித்து 2 வாரங்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏற்படலாம். ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகளோடு கொடிய நோய் தொற்று உண்டாகிறது. காய்ச்சல் ,உடல் வலி, சோர்வு, தோலில் தடிப்புகள் , மூட்டு வலி
போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
வெகு சிலருக்கு நரம்புகளை பாதித்து முடக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குல்லியன் பாரி சென்றோம் என்ற நோயையும் இந்த வைரஸ் உண்டாக்கக்கூடும்.
ஜிகா தொற்றை உறுதிசெய்ய NAT மற்றும் RT PCR சோதனைகள் ரத்தம் மற்றும் சிறுநீரில் செய்யப்படுகின்றன.
சிறுநீர் மற்றும் விந்தணுவில் ஆறு மாதங்கள் வரை இந்த வைரஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நோய்த்தொற்று அறிகுறி உடையவர்கள், மற்றும் நோய்த் தொற்று இருக்கும் பகுதிகளிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
இதற்கென்று தனிப்பட்ட மருந்துகள் தடுப்பூசிகள் கிடையாது என்பதால் பொதுவாக காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் பாரசிட்டமால் மாத்திரைகள் சத்தான உணவு மற்றும் ஓய்வு மட்டுமே போதுமானது.
நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி நல்ல நீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீரில் செடிகள் வைத்து வளர்க்கப்படும் பாத்திரங்கள் போன்றவற்றை கொசுப்புழு இல்லாமல் நீரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு, கொசு வலை, மற்றும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவித்தல் போன்றவற்றின் மூலமாக கொசுக்கடியைத் தவிர்க்கலாம்.
கேரளாவில் 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லையில் இருப்பவர்கள் முக்கியமாக கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஸிகா பரிசோதனை செய்யப்படுகிறது.
கருப்பை நீர்க்கட்டிகளுக்கு வாழ்க்கை முறைதான் காரணமா..? அப்போ இதையெல்லாம் மாத்திக்கோங்க..!
சுத்தம் பேணுவோம். கொசுக்களை ஒழிப்போம் . ஜிகாவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Zika Virus