• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கழுத்து கருப்பு.. உடனடி தீர்வுக்கு யோசிக்காமல் இதை செய்யுங்கள்!

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கழுத்து கருப்பு.. உடனடி தீர்வுக்கு யோசிக்காமல் இதை செய்யுங்கள்!

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கழுத்து கருப்பு.

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கழுத்து கருப்பு.

பெரும்பாலும் மெலஸ்மா கர்ப்பிணி பெண்களுக்கு ஹோர்மோன்கள் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகிறது.

  • Share this:
    கர்பக்காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான கழுத்து கருப்பை போக்குவதற்கான எளிமையான தீர்வு இதோ உங்களுக்காக.

    கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மிகச் சிறந்த காலக்கட்டமாகும். அந்த நேரத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை சரும கோளாறு மட்டுமே. தலை முதல் கால் வரை ஏகப்பட்ட மாற்றங்களை சந்திக்க நேரிடும். மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் அவர்கள் கூறுவதும் இதையே தான். டெலிவரி ஆனதும் எல்லா சரி ஆகிவிடும். இருந்தாலும் பெண்கள் தங்கள் முகம், கால்களில் ஏற்படும் மாற்றத்தை சற்று வெறுப்புடனே ஏற்றுக்கொள்கிறார்கள்.

    இனியும் அந்த கவலை வேண்டாம். கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராகுங்கள். கூடவே இந்த டிப்ஸ்களையும் ஃபோலோ செய்ய மறவாதீர்கள். கர்ப்ப காலத்தில் தோல் அழற்சி, வறண்ட சருமம் மற்றும் எடை அதிகரிப்பு, நிற மாற்றம் போன்ற தோல் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த தோல் பிரச்சனைகளில் ஒன்று தான் மெலஸ்மா கழுத்து மற்றும் முகத்தில் கருப்பு திட்டுக்கள் போன்று தோன்றுவது. இது பெரும்பாலும் 50 முதல் 75 சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிறது. பெரும்பாலும் மெலஸ்மா கர்ப்பிணி பெண்களுக்கு ஹோர்மோன்கள் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நீங்கள் அதிகம் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுங்கள், அதாவது கீரை வகைகள், ஆரஞ்சு, கோதுமை, கோதுமை பிரட் மற்றும் முழு தானிய வகைகளை உண்ணலாம். கூட சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். கற்றாழை நடுவில் இருக்கும் ஜெல் பகுதியை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி காயவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    also read ..பாக்கியலட்சுமி எழில் பற்றி பலருக்கும் தெரியாதவை!

    முகத்தில் ஏற்பட்ட நிற மாற்றத்திற்கு அல்லது புள்ளிகளுக்கு நீங்கள் எந்த வித பீல் மாஸ்க், பிளீச், அல்லது மற்ற கெமிக்கல் உள்ள கிரீம்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. இந்த நேரத்தில் இதுப்போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வது முற்றிலும் தவறு என்கிறார்கள் மருத்துவர்கள். முடிந்த அளவு நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: