Home /News /lifestyle /

உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழித்துவிட்டால் கரு தங்காதா..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்

உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழித்துவிட்டால் கரு தங்காதா..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்

கர்ப்பம், உடலுறவு சார்ந்த கட்டுக்கதைகள்

கர்ப்பம், உடலுறவு சார்ந்த கட்டுக்கதைகள்

கர்ப்பம், உடலுறவு சார்ந்த பல கட்டுக்கதைகளை நாம் அப்படியே நம்பி வருகின்றோம். இந்த பதிவில் கர்ப்ப காலத்தில் உடலுறவு குறித்த 5 முக்கிய கட்டுக்கதைகளை பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு விழிப்படைவோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் பாலியல் கல்வி என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் பலரும் தனது உடல் ரீதியான மாற்றங்கள் குறித்தும், உடலுறவு, மாதவிடாய், கர்ப்பம் போன்றவற்றை குறித்த விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் பாலியல் சார்ந்த தவறான செய்திகளும், நம்பிக்கையும் தான் இங்கு அதிகம் உலா வருகிறது.

இதன் காரணமாக, திருமணமான தம்பதிகளுக்கு கூட பல்வேறு சிக்கல்கள் உண்டாகுகிறது. குறிப்பாக கர்ப்பம், உடலுறவு சார்ந்த பல கட்டுக்கதைகளை நாம் அப்படியே நம்பி வருகின்றோம். இந்த பதிவில் கர்ப்ப காலத்தில் உடலுறவு குறித்த 5 முக்கிய கட்டுக்கதைகளை பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு விழிப்படைவோம்.

கட்டுக்கதை 1: கருத்தடை முறைகள் கர்ப்பத்தைத் தடுப்பதில் 100% பயனுள்ளதாக இருக்கும்.

ஆணுறை அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட பிறப்பு கட்டுப்பாடு முறைகள் கர்ப்பத்தை முற்றிலும் தடுக்க முடியாது. அதாவது, பிறப்பு கட்டுப்பாடு சாதனங்களை சரியாக பயன்படுத்தினாலும், கர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து வகையான பிறப்பு கட்டுப்பாடுகளிலும் தோல்வி விகிதங்களும் உள்ளது. இருப்பினும், ஆணுறைகள் கர்ப்பத்தைத் தடுப்பதில் 98% பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



கட்டுக்கதை 2: உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தைத் தடுக்கும்

பெண்ணின் பிறப்புறுப்புக்குள் விந்தணுக்கள் நுழைந்திருந்தால், சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தைத் தடுக்காது. மேலும் இது பாலியல் தொடர்பான நோய்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்காது. இருப்பினும், உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது சிறுநீர் குழாயிலிருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுவதன் மூலம் நோய்த்தொற்றுக்கான ஆபத்தை கணிசமாகக் குறைக்கிறது.

பெண்களே உடல் நலத்தை பாதுகாக்க உதவும் இந்த 5 ஆப்ஸ் பற்றி தெரியுமா? 

கட்டுக்கதை 3: ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்வது கர்ப்பத்தைத் தடுக்கும்

குறிப்பிட்ட நிலையில் உடலுறவு செய்வதால் கர்ப்பமாவதை தடுக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. விந்தணு பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் எந்தவொரு குறிப்பிட்ட நிலையும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை உயர்த்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



கட்டுக்கதை 4: புல் அவுட் முறை கர்ப்பத்தைத் தடுக்கும்

உடலுறவின் போது விந்தணு வெளியே வரும் நிலையில், ஆணுறுப்பை வெளியே எடுத்து விட்டால் கர்ப்பம் தரிக்க முடியாது என்பதை பலர் நம்புகின்றனர். ஆனால், சிலருக்கு முன்கூட்டியே விந்தணு வெளியாகி விடுவதால் இது போன்ற நிலையில் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. எனவே எல்லா நேரங்களிலும் இது போன்ற புல் அவுட் முறைகள் செயல்படுவதில்லை.

கர்ப்ப காலத்தில் அதிகமாக முதுகு வலிக்கிறதா? இந்த 5 ஆசனங்கள் செய்தல் வலியைப் போக்க உதவும்!

கட்டுக்கதை 5: மாதவிடாய் காலத்தில் நீங்கள் கர்ப்பமாக இயலாது

மாதவிடாய் காலத்தில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது உண்மைதான். என்றாலும், மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்து கொள்ளும்போது, சில சமயங்களில் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உடலுறவு என்றாலே ஆணுறை பயன்படுத்துவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy Risks, Sex

அடுத்த செய்தி