முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

கருத்தரித்தல்

கருத்தரித்தல்

நீங்கள் 20களின் முற்பகுதியில் இருக்கும்போது, மிகவும் ஆரோக்கியமானவர், ஆனால் கருவுறுதலோ பொதுவாக 30 வயதிற்குள் குறையத் தொடங்குகிறது. இதனால் 35 வயதிற்கு பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு மேலும் கணிசமாக குறைக்கிறது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

இப்போதெல்லாம் குழந்தைகள் கூட “ரொம்ப டிப்ரஷனா இருக்கு” என்ற வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு நாம் வாழும் வாழ்க்கை மன அழுத்தம் நிரம்பிய ஒன்றாக மாறி வருகிறது.

கருவுறுதலை ஊக்குவிக்க ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை பராமரிப்பது தம்பதிகளின் பொறுப்பாகும். தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் எளிமையான சில மாற்றங்கள் மற்றும் சில முயற்சிகள் வெற்றிக்கு வழிவகுக்கும். மருத்துவர்களின் இந்த குறிப்புகளைப் படியுங்கள்

ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் கிடைக்கக்கூடிய சிறந்த அனுபவமும் சலுகையும் பெற்றோராக இருப்பதுதான். ஆனால் எல்லா தம்பதியினரும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சிலர் விரைவில் கர்ப்பமாகலாம், ஆனால் சிலருக்கு அது தள்ளிப் போகலாம்.சிலர் இதனால் சிரமங்களையும் அனுபவிக்கலாம்.

நீங்கள் 20களின் முற்பகுதியில் இருக்கும்போது, மிகவும் ஆரோக்கியமானவர், ஆனால் கருவுறுதலோ பொதுவாக 30 வயதிற்குள் குறையத் தொடங்குகிறது. இதனால் 35 வயதிற்கு பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு மேலும் கணிசமாக குறைக்கிறது.

டெல்லியில் உள்ள ஃபர்ஸ்ட் ஸ்டெப் IVF கிளினிக்கின் கருத்தரிப்பு மற்றும் IVF சேவைகளின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரிதி குப்தா, HT லைஃப் ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், “கருவுறுவதற்கு முயற்சிக்கும் போது தம்பதிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் எளிமையான மாற்றங்களும் மேலும் முயற்சிகளும் வெற்றியை தரும்" என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும் தம்பதிகளுக்கான சில குறிப்புகளை அவர் பரிந்துரைத்தார்:

1. முதலில், உங்கள் மருத்துவரை அணுகவும்

இது கணவன் மனைவி இருவருக்கும் பொருந்தும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கர்ப்பத்திற்கு தயாராக இருப்பதாகவும் நீங்கள் நம்பினாலும், உங்கள் தற்போதைய உடல்நலம், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் medical history ஆகியவற்றை கேட்டு, உங்கள் கருத்தரிப்பு திட்டங்களை பாதிக்கக்கூடிய கூறுகள் ஏதேனும் உள்ளதா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

2. கருவுறுதல் சவால்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் :

நீங்கள் கர்ப்பமாக முயற்சித்தாலும் அல்லது எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற முயற்சித்தாலும், கருவுறாமை சோதனையில் (infertility testing) பல நன்மைகள் உள்ளன. கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை இதன் மூலம் உடனடியாக கண்டறியலாம்.

பெண்களுக்கான கருவுறுதல் சோதனைகள் பொதுவாக உங்கள் , AMH அளவுகள், கருப்பை ஹார்மோன் குறிப்பான், FSH அளவுகள் ஆகியவற்றைக் கண்டறிய ஆன்ட்ரல் ஃபோலிக்கிள் எண்ணிக்கையை (AFC) அளவிடுகிறது.

ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!

ஆண்களுக்கு, கருவுறுதல் வல்லுநர்கள் பொதுவாக டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவைச் சரிபார்க்க ரத்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள், ஏதேனும் தொற்றுநோய்களை கண்டறிய சிறுநீர் பரிசோதனை, விந்தணு இயக்கம், எண்ணிக்கை மற்றும் தரத்தை தீர்மானிக்க விந்து பகுப்பாய்வு ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

3.வழக்கமான உடலுறவு

உங்கள் உடலுறவின் போது சரியான இடைவெளிகளை எடுத்துக்கொள்வது கருத்தரிக்கும் முயற்சிகளில் முக்கியமானது. பொதுவாக, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்வது சிறந்தது, ஏனெனில் அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது அதிக நேரம் உடலுறவு கொள்வது விந்தணுவின் அளவையும் தரத்தையும் குறைக்கும்.

அண்டவிடுப்பிற்கு(ovulation) சில நாட்களுக்கு முன்புதான் கர்ப்பம் தரிக்க உகந்த நேரம், ஏனெனில் அந்த நேரத்தில் விந்தணுக்கள் உடலில் பல நாட்கள் உயிர்வாழும் அதேசமயம் ஒரு பெண்ணின் கருமுட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழ முடியும்.

4.உங்கள் சுழற்சிகளைப் பின்பற்றுங்கள்

நீங்கள் கர்ப்பமாகி, வழக்கமான மாதவிடாய் சுழற்சிகளைப் பெற விரும்பினால், கருமுட்டை வெளிப்படுவதற்கு முந்தைய நாள் உடலுறவு கொள்வதற்கு சிறந்த நாளாகும்.

உங்கள் இனப்பெருக்க அமைப்பையும், எப்போது கருத்தரிக்க வேண்டும் என்பதையும் கண்டறிவதற்கு, நீங்கள் எப்போது கருமுட்டையை வெளியிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் பாதியில், அதாவது ஒரு புதிய மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சுமார் 12 முதல் 14 நாட்களுக்கு முன்பு உங்கள் கருப்பை ஒரு முட்டையை (அல்லது முட்டைகளை) வெளியிடுகின்றன, இது அண்டவிடுப்பு (ovulate) என அழைக்கப்படுகிறது.

வளமான கருத்தரிக்கும் வாய்ப்பு என்பது தோராயமாக ஏழு நாட்கள் நீடிக்கும், இதில் அண்டவிடுப்பிற்கு முந்தைய ஐந்து நாட்கள், அண்டவிடுப்பின் நாள் மற்றும் அண்டவிடுப்பின் அடுத்த நாள் ஆகியவை அடங்கும்.

மருத்துவர் மனு குப்தாவின் கூற்றுப்படி, கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. மேலும் இதுகுறித்து பேசும் அவர் “ஆண் மலட்டுத்தன்மை என்பது பல்வேறு காரணிகளால் தற்போது அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இருப்பினும், மலட்டுத்தன்மையற்ற ஆண்களில் 90 சதவிகிதம் பேருக்கு, சமகால அறிவியல் வளர்ச்சியின் காரணமாக குழந்தையை கருத்தரிக்கும் திறன் உள்ளது. மலட்டுத்தன்மையை தடுக்க உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் சரிசெய்யலாம் மேலும் சில காரணங்களுக்கான நீங்கள் சிகிச்சைகளைப் பெறலாம். கருவுறுதலை ஊக்குவிக்க ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை பராமரிப்பது தம்பதிகளின் பொறுப்பாகும்”.

அவர் குறிப்பிடும் கருத்தரிக்க முயற்சிப்பவர்களுக்கான உதவிக்குறிப்புகளின் பட்டியல்

1.சிகரெட், ஆல்கஹால் வேண்டாம்

ஆல்கஹால் மற்றும் புகையிலை நுகர்வு ஆண் மற்றும் பெண் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பகலில் அதிகம் சிகரெட் புகைக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண்கள் விந்தணுக்களின் தரம் குறைவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு புகைப்பழக்கத்தால் பாதிக்கப்படலாம், கூடுதலாக, குடிப்பழக்கமும் உங்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம். அதிக குடிப்பழக்கம் பெண்களில் கருப்பை இருப்பு, சுழற்சி கட்டுப்பாடு மற்றும் அண்டவிடுப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆண்களில் விந்தணு வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களை இது குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2.ஆரோக்கியமான எடை வரம்பைப் பராமரிக்கவும்

உடல் பருமன் மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம் மேலும், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். நீங்கள் அதிக எடையுடனோ அல்லது எடை குறைவாகவோ இருந்தால், அது பெண்களைப் பொறுத்தவரை அண்டவிடுப்பைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும் ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு உற்பத்தியைப் பாதிக்கும் ஹார்மோன்களையும், உடல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உருவாக்கலாம். நீங்கள் எந்த அளவு ஆரோக்கியமான எடையுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு கருத்தரித்தல் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

துணையுடன் சண்டையிட்ட பின் எத்தனை நாட்கள் ஆனாலும் பேசாமல் இருப்பீங்களா? நீங்கள்தான் இதை படிக்கனும்

3.ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்

கர்ப்பம் தரிப்பது பற்றி யோசிக்கும் தம்பதிகள் தங்கள் அன்றாட நடைமுறைகளையும் எடுத்துக் கொள்ளும் உணவையும் மதிப்பீடு செய்ய வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது முக்கியம், அதில் உடற்பயிற்சி மற்றும் நன்றாக சாப்பிடுவது ஆகியவை அடங்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா -3 எண்ணெய்கள், புரதங்கள், முதலியன நிறைந்த உணவை உண்ணுங்கள்.

காஃபின், செயற்கை இனிப்புகள், கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும். பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

4. மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்

இன்றைய காலத்தில் மன அழுத்தமில்லாத வாழ்க்கை என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது, ஆனால் கருத்தரிக்கும் நேரத்தில், மனதை தளர்வாகவும், அமைதியாகவும் வைத்திருப்பது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது, மேலும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் இது அதிகரிக்கிறது என்பதியே மருத்துவ ஆய்வுகள் காட்டுகிறது. மன அமைதி விந்தணு செயல்பாட்டை பாதிக்கும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் (ROS) உற்பத்தியைக் குறைக்கிறது.

மேலும் மருத்துவர் மனு குப்தா கூறுகையில், “கருவுறுதல் உடனடியாக நடக்கவில்லை என்றால், அது சற்று கடினமாகதாக இருக்கலாம், ஆனால் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் 35 வயதிற்குட்பட்டவராக இருந்து, ஒரு வருடத்திற்கும் மேலாக கருத்தரிக்க முயற்சிப்பவராக இருந்தாலோ, அல்லது 35 வயதை தாண்டியவராக இருந்து ஆறு மாதங்களாக முயற்சி செய்து கொண்டிருந்தாலோ, ஏதும் தவறாக இருக்க வாய்ப்பில்லை.

அதேநேரம் வேறு ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்பதால், உங்கள் மருத்துவரை அணுகி சிக்கலைத் தீர்க்க வேண்டும். ஒரு சான்றளிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த கருவுறுதல் நிபுணர் கர்ப்பமாகாமல் இருப்பதற்கான காரணங்களை உங்களுக்கு விளக்க முடியும். மருத்துவ முன்னேற்றத்துடன், IVF, IUI போன்ற கருவுறாமை சிகிச்சைகள் உள்ளன, அவை குழந்தையின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு பரிந்துரைக்கப்படலாம்.”

First published:

Tags: Fertility possibilities, Pregnancy care