ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிசேரியன் செய்தவர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்..?

சிசேரியன் செய்தவர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்..?

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

சிசேரியனுக்குப் பிறகு கர்ப்பம் ஆவது என்பது முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடத்துக்குள் ஏற்படும் கர்ப்பத்தை குறிக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பெரும்பாலான கர்ப்பிணிகள் தங்களின் முதல் பிரசவம் சுகப் பிரசவமாக வேண்டும் அறுவை சிகிச்சை தவிர்க்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தாலும் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களால் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது சிசேரியன் செய்து குழந்தையை பெற்றெடுப்பது மிகவும் சகஜமாகி விட்டது.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பது சிசேரியன் அல்லது சி-செக்ஷன் என்று கூறப்படுகிறது. முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், இரண்டாவது குழந்தையை நார்மல் டெலிவரியில் பெற முடியுமா என்பது பல தாய்மார்களின் கேள்வி. அதே போல, இரண்டு குழந்தைகள் விரும்பும் பெற்றோர், இரண்டாம் குழந்தையைப் பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது பற்றி சந்தேகம் இருக்கிறது. அதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அறுவை சிகிச்சையால் ஏற்படும் விளைவுகள் எப்போது முழுமையாக குணமாகும்?

பொதுவாக உடலில் எந்தவித பாதிப்பு அல்லது காயம் ஏற்பட்டாலும் அது குணமாக குறிப்பிட்ட கால அளவு தேவை உதாரணமாக சருமத்தில் ஏற்படும் காயம் குணமாக ஏழு நாட்கள் வரை ஆகலாம். அதே போல சிசேரியன் என்பது பெண்ணின் வயிற்று பகுதியை கட் செய்து, குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

எனவே அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம், திசுக்கள் மற்றும் தசைகள் ஆகிய அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்த ஒரு பெண்ணின் உடல் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 – 5 மாதங்கள் ஆவது ஆகும்.

இதனால்தான் மகப்பேறு மருத்துவர்கள் சிசேரியன் செய்த பெண்கள் ஆறு மாதம் வரை மிகவும் கவனமாக உடலை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேற்புறத்தில் இருக்கும் சருமம் இரண்டு வாரங்களில் முழுவதுமாக குணமாகி விட்டாலும் கர்ப்பப்பையில் இருக்கும் யூட்ரின் தசை நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது எனவே அது சரியாவதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.

சிசேரியனுக்குப் பிறகு கர்ப்பமாவது எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும்?

முதல் டெலிவரி சிசேரியனாக இருந்தால் அடுத்த டெலிவரியும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அதே நேரத்தில் சி செக்ஷன் ஆன பிறகு உடனடியாக கர்ப்பமடைவது இத்தகையான ஆபத்துகளை உண்டாக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் இந்த தொற்றுகளால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கக் கூடும்..!

சிசேரியனுக்குப் பிறகு கர்ப்பம் ஆவது என்பது முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடத்துக்குள் ஏற்படும் கர்ப்பத்தை குறிக்கிறது. ஏற்கனவே கூறியுள்ளது போல கர்ப்பம் மற்றும் பிரசவ நேரத்தில் யூட்ரின் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த பாதிப்பு இரண்டாவதாக கர்ப்பம் ஏற்படும் பொழுது எதிர்பாராத அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளது. உதாரணமாக யூட்ரின் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் ஸ்கார் டிஷ்யூவால் கர்ப்பப்பையில் இருந்து தாயின் வயிற்று பகுதிக்குள் குழந்தை ஸ்லிப் ஆகும் அபாயத்தை ஏற்படுத்தும்.

இதனால் இன்டெர்னல் ப்ளீடிங் எனப்படும் உள்ளுறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கே ஆபத்து உண்டாகும். சிசேரியன் வழியாக குழந்தை பெற்ற பிறகு, இரண்டாவது குழந்தையை இயற்கையாக வஜைனல் டெலிவரியாக பெற விரும்பும் பெண்களுக்கு, அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முறையான கவுன்சிலிங் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருப்பதும்... ஓய்வு எடுப்பதும் ஆபத்தா..? பதில் இதோ...

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து மயக்கம் தெளிந்த பிறகு தான் வலியும் வேதனையும் தெரியும். ஆனால் நார்மல் டெலிவரியில் குழந்தை பிறப்பு என்பதை முழுக்க முழுக்க வலி நிறைந்ததாக இருக்கும். எனவே இதைப் பற்றி முழுமை யாக அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே யூட்ரின் பாதிப்பு இருந்திருந்தால், அது அதிகப்படியான ரத்த இழப்பை ஏற்படுத்தும். தொற்று பாதிப்பு, தீவிரமான ரத்தப் போக்கு, அடிப்பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு பாதிப்பு உள்ளிட்ட அபாயங்கள் உள்ளன.

சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், உரிய கவுன்சிலிங் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்குத் திட்டமிட வேண்டும். இதற்கு முதல் குழந்தை பிறந்து குறைந்த பட்சம் இரண்டு வருட காலமாவது காத்திருக்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Baby, Pregnancy care