Home /News /lifestyle /

நீரிழிவு ரெட்டினோபதி - முன்னெச்சரிக்கையை முதன்மையாக கொண்டது

நீரிழிவு ரெட்டினோபதி - முன்னெச்சரிக்கையை முதன்மையாக கொண்டது

Diabetic Retinopathy | நீரிழிவு நோய் மற்றும் உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இருதய நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது4  நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்தால், இறுதி நிலையானா சிறுநீரக நோய் 80% உலக அளவில் ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள 40-60 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் கால் மற்றும் கீழ் மூட்டு பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் - வலிமிகுந்த புண்கள் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் எனப்படும் நாள்பட்ட நிலை ஏற்படுவதன் மூலம், அது அவர்களின் சீரான இயக்கத்தை4 கடுமையாக பாதிக்கிறது

Diabetic Retinopathy | நீரிழிவு நோய் மற்றும் உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இருதய நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது4 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்தால், இறுதி நிலையானா சிறுநீரக நோய் 80% உலக அளவில் ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள 40-60 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் கால் மற்றும் கீழ் மூட்டு பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் - வலிமிகுந்த புண்கள் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் எனப்படும் நாள்பட்ட நிலை ஏற்படுவதன் மூலம், அது அவர்களின் சீரான இயக்கத்தை4 கடுமையாக பாதிக்கிறது

Diabetic Retinopathy | நீரிழிவு நோய் மற்றும் உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இருதய நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது4 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்தால், இறுதி நிலையானா சிறுநீரக நோய் 80% உலக அளவில் ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள 40-60 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் கால் மற்றும் கீழ் மூட்டு பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் - வலிமிகுந்த புண்கள் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் எனப்படும் நாள்பட்ட நிலை ஏற்படுவதன் மூலம், அது அவர்களின் சீரான இயக்கத்தை4 கடுமையாக பாதிக்கிறது

மேலும் படிக்கவும் ...
    NetraSuraksha ஆன்லைன் சுய பரிசோதனையை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள்

    இத்தனை நாளாக நாம் நம்பி வந்த கட்டுக்கதைகள் என்னவென்றால் உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள், இனிப்புகளை அதிகம் உண்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வரும் என்பது.இருப்பினும், உண்மைகள் வேறு கதையைச் சொல்கின்றன. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அட்லஸ் 20211-யின் படி:

    • 20-79 வயதுடைய சுமார் 537 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2030 ஆம் ஆண்டில் 643 மில்லியனாகவும், 2045 ஆம் ஆண்டில் 784 மில்லியனாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • 1.2 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் (20 வயதுக்குட்பட்டவர்கள்) டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • 2021 ஆம் ஆண்டில் பிரசவ காலத்தில் மட்டும் 21 மில்லியன் குழந்தைகள் ஹைப்பர் கிளைசீமியாவால் பாதிக்கப்பட்டு பிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


    இந்தியாவில் இந்த எண்களை பார்ப்பது அத்தனை எளிது அல்ல.அட்லஸ்-யின் படி, 2021 இல் இந்தியாவில் 74 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை 2030 இல் 93 மில்லியனாகவும், 20451 இல் 124 மில்லியனாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்தியாவில் கிட்டத்தட்ட 39.3 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது அறியாமல்1 நீரிழிவு நோயாளிகளாக இருப்பதாக தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது ஒரு மிகைப்படுத்தப்படாத சிந்தனை, குறிப்பாக நீரிழிவு நோய், பெரும்பாலும், நகர்ப்புற நோய்.இந்தியர்கள் பெரும்பாலும் அதிக அளவில் நகர்ப்புறங்களிலும், அதோடு அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களாக உள்ளனர் - அது பெரும்பாலும் நமது அலுவலக பணி காரணமாக. டைப் II நீரிழிவு நோய் வாழ்க்கை முறை நோயாகக் கருதப்படுகிறது, எனவே இது முற்றிலும் தடுக்கக்கூடியது. இதில் அவர்களுக்கு சரியான நேரத்தில அதை பற்றிய தகவல் மற்றும் முறையான சிகிச்சை மட்டுமே தேவைபடுகிறது.உண்மையில், இன்றைய பெரும்பாலான மருத்துவர்கள் நீரிழிவு நோய் இருப்பது சீக்கிரம் தெரிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்துவிட்டால், அதில் இருந்து மீண்டுவரலாம் என நம்புகிறார்கள்.

    எனவே ஒரு சிறிய தகவலுடன் ஆரம்பிக்கலாம், நீரிழிவு என்பது நம் உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டுசெல்வது. இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் மற்றும் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடல் பயன்படுத்த அது உதவுகிறது.

    நீரிழிவு நோயில் மூன்று வகைகள் உள்ளன: கர்ப்பகால நீரிழிவு நோய் (தாய்மார்களுக்கு சில சமயங்களில் இது கர்ப்ப காலத்தில் உருவாகிறது), டைப் I நீரிழிவு நோய் (பொதுவாக குழந்தை பருவத்தில் வெளிப்படுகிறது, மேலும் மரபணு பண்புகளைக் கொண்டுள்ளது) மற்றும் டைப் II (தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை நோய், இது சுமார் 90% நீரிழிவு நோயாளிகளைக் கொண்டுள்ளது).

    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் எடுப்பது , மங்கலான பார்வை, ஆற்றல் இல்லாமல் இருப்பது, சோர்வு, நிலையான பசி மற்றும் சில நேரங்களில் திடீர் எடை இழப்பு மற்றும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்4. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.நீரிழிவு நோய் உங்களை சோர்வடையச் செய்யப் போவதில்லை.இது உடலுக்கு உண்மையான தீங்கு செய்ய வழிவகுக்கும்.

    நீரிழிவு நோய் மற்றும் உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இருதய நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது4  நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்தால், இறுதி நிலையானா சிறுநீரக நோய் 80% உலக அளவில் ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள 40-60 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் கால் மற்றும் கீழ் மூட்டு பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் - வலிமிகுந்த புண்கள் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் எனப்படும் நாள்பட்ட நிலை ஏற்படுவதன் மூலம், அது அவர்களின் சீரான இயக்கத்தை4 கடுமையாக பாதிக்கிறது

    எதுவாயினும், நீரழிவு நோய் மிகவும் அச்சமூட்டும், அதோடு மிகவும் சிக்கலான நிலையாக கருதப்படும் நீரிழிவு ரெட்டினோபதி ஏற்பட வழிவகுக்கும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனமான தேசிய கண் நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர்களின்நோய்2 நீரிழிவு நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கிறது.தந்திரமான பகுதி என்னவென்றால், நோயின் ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளும் இருக்காது. சிலர், தொலைதூரப் பொருட்களைப் பார்க்கும் போது அல்லது படிக்கும் போது தங்கள் பார்வையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கிறார்கள்.ஆனால் இது வருவதும் போவதுமாக இருக்கும். பிந்தைய கட்டங்களில், விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் இரத்தம் வரத் தொடங்குகின்றன, பிறகு மிதக்கும் புள்ளிகளை உருவாக்குகின்றன, மேலும் சில தீவிர நிகழ்வுகளில், மொத்தமாக பார்வையும்2 போகிறது.

    அதனால்தான் ஸ்கிரீனிங் முக்கியமானது, உண்மையில், நீரிழிவு ரெட்டினோபதிக்கான வழக்கமான ஸ்கிரீனிங் கொள்கையை நடைமுறைப்படுத்திய 8 ஆண்டுகளுக்குள், இங்கிலாந்தில்4 வேலை செய்யும் வயதினரிடையே பார்வையின்மைக்கு இது முக்கிய காரணமாக இல்லை என தெரியவந்துள்ளது.  வேல்ஸில், வழக்கமான ஸ்கிரீனிங் செயல்படுத்தப்பட்டதிலிருந்து பார்வைக் குறைபாட்டிற்கான4f புதிய சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் 40-50% வரை குறைந்துள்ளன.

    எனவே, ஸ்கிரீனிங் வேலைகளை நாங்கள் அறிவோம். ஆனால் நீங்கள் கலந்து கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.இந்தியா (2019), தேசிய நீரிழிவு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி கணக்கெடுப்பின்-படி, நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 90% பேர் நீரிழிவு ரெட்டினோபதிக்கான3 கண் பரிசோதனை மதிப்பீட்டிற்குச் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

    இதுவே Network18-யை 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா என்ற முயற்சியை நோவார்டிஸ் இந்தியாவுடன் இணைந்து தொடங்க தூண்டுகோலாக அமைந்தது, இது குறிப்பாக நீரிழிவு ரெட்டினோபதி மீது அதிக கவனம் செலுத்துகிறது.இது நவம்பர் 27, 2021 அன்று தொடங்கப்பட்டது,அதில் முதலாவது முயற்சியானது நீரிழிவு ரெட்டினோபதி நோய் குறித்து தொடர் வட்டமேசை விவாதத்துடன் இந்த முயற்சி தொடங்கியது அதில் முதலாவது விவாத நிகழ்ச்சி, அதே நாள் மாலை 6 மணிக்கு CNN news18 இல் ஒளிபரப்பப்பட்டது. இதை நீங்கள் YouTube, News18.com மற்றும் https://www.facebook.com/cnnnews18/.- யில் பார்க்கலாம். 

    (அ)

    நவம்பர் 27, 2021 அன்று தொடங்கப்பட்டது, இந்த முயற்சியானது நீரிழிவு ரெட்டினோபதி நோய் குறித்து தொடர் வட்டமேசை விவாதத்துடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டது, இதை நீங்கள் YouTube, News18.com மற்றும் https://www.facebook.com/cnnnews18/.  இல் பார்க்கலாம்.

    வரும் வாரங்களில் இன்னும் இரண்டு வட்டமேசை அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த போராட்ட முயற்சியில்  மருத்துவ சமூகம், அதன் சிந்தனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் உதவியையும் பெறுகிறோம். இன்னும் பல விளக்க வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை News18.com-யில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    இந்த முன்முயற்சியின் நோக்கம் எளிதானது: உங்களுக்குத் தேவையான தகவலை வழங்குவது, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் ஒரு எளிய, வலியற்ற கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதன், மூலம் இது வரும் ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.

    நீரிழிவு ரெட்டினோபதியின் சுய பரிசோதனையை இங்கே தொடங்கவும் , மேலும் சில காலமாக நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்யவில்லை என்றால், இரத்தப் பரிசோதனையையும்  செய்துகொள்ளவும்.நீரிழிவு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதியால் சுற்றியுள்ள எண்களைப் பார்ப்பது கடினம், குறிப்பாக இந்திய நகரங்களில் அலுவலகம் செல்வோருக்கு, ஆனால் குறைந்தபட்சம் அவற்றைப் பார்க்க நம் கண்களைப் பயன்படுத்தும் பாக்கியம் நமக்கு உள்ளது. அதனால் அப்படியே வைத்துக்கொள்வோம் 

    நேத்ரா சுரக்ஷா  - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா என்ற முன்முயற்சிப் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு  News18.com-மை  பின்தொடரவும், மேலும் நீரிழிவு ரெட்டினோபதிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராகுங்கள்.

    1. IDF அட்லஸ், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, 10-வது பதிப்பு, 2021

    2. https://www.nei.nih.gov/learn-about-eye-health/eye-conditions-and-diseases/diabetic-retinopathy 

    3. தேசிய பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு கணக்கெடுப்பு 2015-2019, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு. டாக்டர் ராஜேந்திர பிரசாத் கண் மருத்துவ அறிவியல் மையம், எய்ம்ஸ், புது தில்லி

    4. IDF அட்லஸ், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, 9-வது பதிப்பு, 2019

    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Health, Healthy Lifestyle

    அடுத்த செய்தி