Home /News /lifestyle /

உடல் மற்றும் மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அறிகுறிகளும்... சிகிச்சைகளும்...

உடல் மற்றும் மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அறிகுறிகளும்... சிகிச்சைகளும்...

PTSD

PTSD

ஏதேனும் ஒரு நிகழ்வை பார்த்து இருந்தாலோ அல்லது எதிர்கொண்டிருந்தாலும் அது மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை தான் போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் என்று கூறுகிறார்கள்.

  • News18
  • Last Updated :
உடல் மற்றும் மன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது தான் Trauma என்று கூறப்படுகிறது. Trauma வில் இருந்து வெளிவருவதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை தேவைப்படும். உதாரணமாக, விபத்தில் சிக்கிக் கொண்டு மீண்டு வருவது, அல்லது பெரிய விபத்தை நேரில் பார்ப்பது, நெருங்கியவர்களின் பிரிவு, இறப்பு, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு, நஷ்டம், கருச்சிதைவு ஆகியவை இத்தகையான மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏதேனும் ஒரு நிகழ்வை பார்த்து இருந்தாலோ அல்லது எதிர்கொண்டிருந்தாலும் அது மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை தான் போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் என்று கூறுகிறார்கள்.

என்ன காரணங்களுக்காக டிராமா ஏற்படுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாழ்க்கை என்பது நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரண்டின் கலவையாக ஏற்ற இறக்கமாகத்தான் காணப்படும். வாழ்க்கையில் நான் விரும்பும் எல்லாமே கிடைப்பதும், நல்ல விஷயங்கள் நடப்பதுமாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்காது. அதுமட்டுமின்றி எது நல்லது என்று தெரிந்து கொள்வதற்கு சில மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுபோல வாழ்க்கையை சிறப்பாக இருக்க என்றால் கசப்பான அனுபவங்களையும் பெற வேண்டும்.

ஆனால் ஒரு சில கசப்பான அனுபவங்களை யாருமே எதிர்கொள்ளக் கூடாது என்ற அளவுக்கு மிக தீவிரமான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. உதாரணமாக நெருக்கமான உறவின் மரணம் அல்லது விபத்து ஆகியவற்றைக் கூறலாம். இதனால் ஏற்படும் விளைவு நீண்டகாலத்திற்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பட்ட சம்பவத்தால் பாதிப்பு அடைந்த பின்னர், அந்த சம்பவம் நடந்து முடிந்த நீண்ட நாட்களுக்கு இதன் விளைவுகள் இருக்கும்.எதனால் ஏற்படுகிறது?

ஒரு சிலருக்கு சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர்கள் வயதான பின்பும் நினைவில் வந்து அவ்வப்பொழுது PTSD இன் அறிகுறிகளை வெளிப்படுத்தும். உதாரணமாக,

* குழந்தைப்பருவ பாலியல் துன்புறுத்தல்
* பாலியல் வன்புணர்வு
* உறவினர்களால் கொடுமை
* வீட்டில் துன்புறுத்தப்படுதல்
* போர் பாதிப்பு, இயற்கை பேரழிவு
* விபத்து
* நெருங்கியவர்களின் இழப்பு

உங்கள் வேலை மட்டுமல்ல... உலக அளவில் உள்ள மிகவும் மன அழுத்தமான வேலைகளை பற்றி தெரியுமா..?

மோசமான சம்பவத்தின் அல்லது நிகழ்வின் பாதிப்புதான் PTSD ஆக இருந்தாலும், பாதிக்கப்பட்டும் நபர் எதிர்கொள்ளும் மற்ற அனுபவங்கள் அவரின் மன நிலையை மோசமாக்குகின்றன. உதாரணமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத இயலாமை, அல்லது grief என்று சொல்லப்படும் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத வருத்தம் ஆகியவை நீண்ட காலத்திற்கு மாறாது.PTSD ஆல் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஏதேனும் ஒரு சம்பவத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டு இருந்தால், அதன் விளைவுகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, சிறுவயதில் வீட்டில் கொடுமை, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு சின்ன நினைவு ஒரு ஸ்பார்க்காக தோன்றி, தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை மற்றும் சந்தோஷமான மனநிலையை முழுவதுமாக கெடுத்துவிடும். சிறு வயதில் அல்லது கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது நிகழ்வது போன்ற ஒரு விளைவை ஏற்படுத்தும்.

இதற்கான தீர்வு என்பது ஒரு தனிநபர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது எந்த மாதிரியான விஷயங்கள் அவரின் மனநிலையை பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போன்ற சிகிச்சை முறைகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Anxiety, Stress

அடுத்த செய்தி