ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

விந்தணுக்கள் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்குமா..? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிகள்..!

விந்தணுக்கள் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்குமா..? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிகள்..!

விந்தணு ஒவ்வாமை

விந்தணு ஒவ்வாமை

பாலியல் உணர்வின் போது உச்சமடைந்து சில துளிகள் உடலில் படும் அப்போது இதுபோன்ற ஒவ்வாமை ஆண், பெண் இருவருக்கும் ஏற்படலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒருவர் விந்தணுக்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் , அவருக்கு விந்தணு சருமத்தில் பட்டாலே அலர்ஜியாகிவிடும் என்பதால் 10 வருடங்களுக்கு மேலாக பாலியல் உறவில் ஈடுபடாமல் இருப்பதாக மருத்துவ இதழ் இன்றில் தகவல் வெளியானது. இந்த பாதிப்புக்கு Post-orgasmic illness syndrome என்று பெயர்.

  பாலியல் உணர்வின் போது உச்சமடைந்து சில துளிகள் உடலில் படும் அப்போது இதுபோன்ற ஒவ்வாமை ஆண், பெண் இருவருக்கும் ஏற்படலாம்.

  அப்படி அலர்ஜியாகும்போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

  • அரிப்பு, எரிச்சல், வீக்கம்
  • சொறி, சருமம் சிவப்பாக மாறுதல்
  • ஆண்குறி சருமத்தில் தடிப்பு மற்றும் வலி

  பெண்களுக்கு... பெண்ணுறுப்பை சுற்றிலும் அரிப்பு, தடிப்பு இருக்கலாம். உட்பகுதிகளிலும் அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு விந்தணுக்களின் பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மயக்கம், மூச்சுத்திணறல், மனப்பதட்டம் , இரத்த அழுத்தம் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

  அலர்ஜி இருப்பதை எப்படி கண்டறியலாம்..?

  நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால் விந்தணு ஒவ்வாமை இருக்கலாம். ஆண்களுக்கு சுய இன்பம் காணும்போதே விந்தணு சருமத்தில் பட்டு அலர்ஜியை கண்டறியக்கூடும். இதை உறுதி செய்த பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

  Also Read : UTI பிரச்சனைக்கு மருந்து கண்டுபிடிப்பு : ஆய்வாளர்கள் தகவல்..!

  எப்படி தவிர்க்கலாம்..?

  பாலியல் உறவின்போது ஆணுறை பயன்படுத்துங்கள்.

  சுய இன்பத்தின் போதும் உடலில் விந்தணு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை முறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Sex, Skin allergy, Sperm