Home /News /lifestyle /

தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் ஆண்களா..? பெண்களா..? - ஆய்வு என்ன சொல்கிறது?

தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் ஆண்களா..? பெண்களா..? - ஆய்வு என்ன சொல்கிறது?

உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றுசேரக் கிடைக்கப் பெறுவது உடலுறவில்தான். இதை முறையான நேரத்தில் முழு கவனத்துடன் செய்தால்தான் அதன் உச்சகட்ட இன்பத்தை முழுமையாகப் பெற முடியும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றுசேரக் கிடைக்கப் பெறுவது உடலுறவில்தான். இதை முறையான நேரத்தில் முழு கவனத்துடன் செய்தால்தான் அதன் உச்சகட்ட இன்பத்தை முழுமையாகப் பெற முடியும்.

பாலியல் உறவில் நாட்டம் கொண்டவர்கள் ஆண்கள் 83 சதவீதம் பெண்கள் 52 சதவீதம் இருந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    லண்டனில் நடைபெற்ற ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தாம்பியத்திய வாழ்க்கை ஆரோக்கியமற்றதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    எம்.பி.சி பப்ளிக் ஹெல்த் என்ற இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு 12, 132 ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 17 சதவீத ஆண்கள் பாலியல் உறவில் ஆரோக்கியம் குறைவாக இருந்தால் பெண்கள் 47.5 சதவீதமாக இருக்கின்றனர் என்று குறிப்பிடுள்ளது.

    மேலும் பாலியல் உறவின் ஆரோக்கியம் என்பது குடையைப் போன்றது. பல வகையால் உடல் நல ஆபத்துகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக பாலியல் உறவால் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs), திட்டமிடப்படாத கர்ப்பம், பாலியல் செயல்பாட்டில் பிரச்சினைகள் மற்றும் பாலியல் வற்புறுத்தல் போன்ற பிரச்னைகளைக் கொண்டது என ஆய்வின் தலைவர் ஆலிசன் பார்கெஸ் கூறியுள்ளார்.

    மேலும் இந்த ஆய்வில் சில கேள்விகளை வகுத்து அதன் அடிப்படையில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் பாலியல் உறவில் நாட்டம் கொண்டவர்கள் ஆண்கள் 83 சதவீதம் பெண்கள் 52 சதவீதம் இருந்துள்ளனர். மேலும் 29 சதவீதம் பாலியல் உறவில் நாட்டமின்மை பிரச்னை பெண்களுக்கே அதிகம் இருந்துள்ளது.
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி