பற்களைச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காட்டினால் கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்து..!

புற்றுநோய் மட்டுமல்லாது, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களும் உண்டாகும்.

news18
Updated: September 10, 2019, 6:00 PM IST
பற்களைச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காட்டினால் கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்து..!
பற்கள்
news18
Updated: September 10, 2019, 6:00 PM IST
பற்களைப் பராமரிப்பதில் பலருக்கும் அலட்சியம் இருக்கலாம். அப்படி பற்களைத் துலக்குவதிலும், பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டினால் 75 சதவீதம் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் குயின் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 4,69,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்களில் 4,069 பேருக்கு புற்றுநோய் செல்கள் உருவாவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் கணைய புற்றுநோய், இரைப்பைக் குடல் உள்ளிட்ட உறுப்புகளில் புற்றுநோய் உருவாகியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களை ஆறு வருடங்களாக கண்காணித்து இந்த ஆய்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
பற்களின் ஆரோக்கியம் இழத்தல், ரத்தக் கசிவு, வாய் புண்கள், உறுதியற்ற பற்கள் என இதுபோன்ற பிரச்னைகள் இருப்பின் அவர்கள் நிச்சயம் பரிசோதனை செய்வது அவசியம் என எச்சரிக்கிறது ஆய்வு.

புற்றுநோய் மட்டுமல்லாது, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களும் உண்டாகும் என ஆராய்ச்சியாளர் ஹைடீ WT ஜோர்டாவோ கூறியுள்ளார்.

மேலும் அவர், கல்லீரல் என்பது பாக்டீரியாகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. ஆனால் கல்லீரலையே தாக்கும் ஹெபடிடிஸ் சிரோசிஸ் , புற்றுநோய் செல்கள் நுழைந்தால் அவை கல்லீரலிலேயே தங்கி அரிக்கத் தொடங்கு எனக் கூறியுள்ளார்.

Loading...

பார்க்க :

பற்களில் மஞ்சள் கறை இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப் பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் பல் மருத்துவர் நிலாயா ரெட்டி..

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...