நீர்க்கட்டிகள் எனும் பி.சி.ஓ.எஸ் பிரச்னை: அறிகுறிகள், சிகிச்சை குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..

நீர்க்கட்டிகள் எனும் பி.சி.ஓ.எஸ் பிரச்னை: அறிகுறிகள், சிகிச்சை குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..
பி.சி.ஓ.எஸ்
  • News18
  • Last Updated: September 17, 2020, 3:22 PM IST
  • Share this:
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் அல்லது பி.சி.ஓ.எஸ் என்பது பெண்களின் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் ஹார்மோன் கோளாறு ஆகும். இதனால் வளர்சிதை மாற்றம் முதல் இனப்பெருக்க சிக்கல்கள் வரை உருவாகும். ஒவ்வொரு ஐந்து இந்திய பெண்களில் ஒருவருக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் அல்லது பி.சி.ஓ.எஸ் பிரச்னை ஏற்படுகிறது.

பாலி என்ற சொல்லுக்கு பல என்று பொருள். இது கருப்பைகளுக்குள் உருவாகும் பல நீர்க்கட்டிகள் (திரவத்தால் நிரப்பப்பட்ட குமிழ்கள்) காரணமாக ஏற்படுகிறது. ஆரோக்கியமான பெண்களின் உடல்களில் கருப்பைகள் ஒவ்வொரு மாதமும் கரு முட்டையை வெளியிடுகின்றன.

இது ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் பிரசவ காலங்களில் வெளியேறுகிறது. ஆனால் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு கரு முட்டை தாமதமாக உருவாகலாம் அல்லது உருவாகாது அல்லது மாற்றாக இருக்கலாம். இதனால் வழக்கமான மாதவிடாய் சுழற்சியின் போது சிக்கல்கள் ஏற்படுவதால் மாதவிடாய் பாதிக்கப்படுகிறது.
காரணங்கள் :

பி.சி.ஓ.எஸ் ஏற்படுவதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதில் ஆய்வுகள் வேறுபடுகின்றன. இருப்பினும் பொதுவான காரணங்களாக மரபணு மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என கூறப்படுகிறது. பி.சி.ஓ.எஸ்ஸை மரபணுக்களுடன் தொடர்புபடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெல்த்லைன் படி, ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் பி.சி.ஓ.எஸ் ஐ ஏற்படுத்துகின்றன.எனவே அனைத்துமே பரம்பரை பரம்பரைக்காக தாய் குழந்தையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. மற்ற ஆராய்ச்சியாளர்கள் வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். மேலும் உடல் பருமன் பி.சி.ஓ.எஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் உணவு ஏற்றத்தாழ்வுகளும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மாதவிடாய் ஒழுங்கில்லாமல் இருக்கிறதா? லாக்டவுன் காலத்தில் பி.சி.ஓ.எஸ் குறித்து அதிர்ச்சித் தகவல் தருகிறது ஆய்வு..

அறிகுறிகள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களில் அதிக அளவு ஆண்ட்ரோஜன்கள் அல்லது ஆண் ஹார்மோன்கள் உள்ளன. நோயின் வெளிப்புற மற்றும் உள் விளக்கக்காட்சிகளில் பெரும்பாலானவை ஆண்ட்ரோஜன்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) உடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் :

- ஒழுங்கற்ற/தவறவிட்ட அல்லது தாமதமான மாதவிடாய். இந்த சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது

- வலிமிகுந்த மாதவிடாய் நாட்கள்

- பல்வேறு உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சி

- முகப்பரு

- ஆண்களுக்கு இருப்பது போல வழுக்கை

- தோலில் கருப்பு திட்டுகள், குறிப்பாக கழுத்தின் பின்புறம்எச்சரிக்கை :

பி.சி.ஓ.எஸ்-க்கு சிகிச்சையளிக்கப்படாத அல்லது தாமதமாக சிகிச்சையளிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் தவறவிட்ட / ஒழுங்கற்ற காலங்கலில் கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் (பி.சி.ஓ.எஸ் என்பது பெண்களின் கருவுறாமைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்). மேலும் இது வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும், ஸ்லீப் அப்னியா, மற்றும் சில சந்தர்ப்பங்களில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் அல்லது உங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு இந்த அறிகுறிகள் காட்டினால், அவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் இந்த விஷயங்களைக் கடைபிடித்தால் தீர்வு கிடைக்குமா..?

சிகிச்சைகள் :

பி.சி.ஓ.எஸ்ஸை கட்டுப்படுத்த பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. அதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டதும் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், கருவுறுதல் மருந்துகள், மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகளின் ஒன்று அல்லது கலவையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதன் தீவிரம் அதிகரித்தால் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இருப்பினும் சில நடவடிக்கைகளை வீட்டில் எடுக்கலாம், குறிப்பாக வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய மருத்துவரால் அறிவுறுத்தப்படுகின்றன. எனவே ஒருவர் முன்பே விழிப்புடன் இருக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading