அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியன் தலைநகரான டெல்லி மிக அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை சந்தித்து வருகிறது. முக்கியமாக டெல்லியில் காற்று அதிக அளவில் மாசடைந்து வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருகிறது என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபட்ட இடத்தில் வசிக்கும் ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் இருந்த தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போது மாசுபட்ட சுற்றுசூழலில்வாழும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது உடலில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரணுக்களின் தரத்தை குறைக்கிறது. இந்த நாள் உயிரணுக்கள் கருமுட்டை தாக்கி கருவறுதலை நிகழ்த்துவதற்கு போதுமான வலிமையை பெற்றிருப்பதில்லை என்று கூறுகின்றனர். மேலும் இவ்வாறு ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இயற்கையிலேயே உடலுறவில் ஆர்வம் குறையும் என ஐவிஎஃப் குரூப்பின் தலைவரும், நிறுவனமான டாக்டர் குஞ்சன் குப்தா கோவில் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசடைவதால் உடலில் ஹார்மோன்கள் சமநிலை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். நாம் சுவாசிக்கும் காற்றின் தரமானது உயிரணுக்கள் உற்பத்தியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
Also Read : பாதாம் போன்ற நட்ஸ் வகைகள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் : ஆய்வில் தகவல்!
“உடலில் டெஸ்ட் ரோஸ் டோன் அளவு குறையும்போது, இயற்கையாகவே உடலுறவின் மீது நாட்டம் குறையும். ஒரு ஆண் ஆரோக்கியமாக இருந்தாலும், அவர் சுவாசிக்கும் காற்றில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் டீசல் புகை ஆகியவை அதிக அளவில் கலந்து இருந்தால், அது அவர்களின் உயிரணுக்களின் தரத்தில் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் ஆண்மை குறைவு ஏற்படலாம் என்றும் டாக்டர் குஞ்சன் குப்தா கோவில் தெரிவித்துள்ளார்.
உயிர் அணுக்கள் எண்ணிக்கை எப்படி அதிகரிப்பது?
சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதை நம்மால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நம் வாழ்க்கையில் முறையில் சில மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் கருவுறுதலுக்கு தேவையான அளவு உயிரணுக்களை உற்பத்தியை செய்ய முடியும் என்று டாக்டர் குஞ்சன் குப்தா கோவில் தெரிவித்துள்ளார். அதில் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தரம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆண்மை குறைவு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Low Sperm Count, Male infertility, Pollution