Home /News /lifestyle /

பெற்றோர்களே... போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் முன் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்...!

பெற்றோர்களே... போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் முன் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்...!

File Image

File Image

  • News18
  • Last Updated :
    தமிழகம் முழுவதும் இன்று 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில், 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் இளம்பிள்ளை வாதம் எனப்படும் அபாயகரமான போலியோ நோயை ஒழிப்பதற்காக 1995-ம் ஆண்டு முதல் ஜனவரி, மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் இந்தியாவில் 2014ம் ஆண்டிலேயே போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதும் அண்டை நாடுகளில் போலியோ தாக்கம் இருப்பதால் போலியோ நோய்க்கிருமி பரவும் அபாயம் உள்ளது.

    இதன்காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன்படி, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.நாடு முழுவதும் 17 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கும், சென்னையில் 7 லட்சம் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள், சத்துணவு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சுற்றுலா தளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 43 ஆயிரத்து 51 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

    குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் இன்று நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு போட வேண்டும். முகாம்களில் சொட்டு மருந்து வைக்கப்பட்டிருக்கும் ப்ரீசர் பாக்ஸ் குளிர்ந்த நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். சொட்டுமருந்து வழங்கும் பணியில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போலியோ வைரஸ் கிருமி எளிதில் பரவி நிரந்தரமாக குழந்தைகளை முடக்குவதுடன் உயிரிழப்புகள் வரை கொண்டு சென்றுவிடும்.

    எனவே. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அருகே உள்ள முகாம்களுக்கு கூட்டிச் சென்று சென்று இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    Published by:Sankar
    First published:

    Tags: Polio vaccine

    அடுத்த செய்தி