ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிமோனியா பாதிப்பு.! அறிகுறிகள் என்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி.?

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிமோனியா பாதிப்பு.! அறிகுறிகள் என்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி.?

நிமோனியா

நிமோனியா

நிமோனியா நுரையீரலின் செயல்படும் திறனை குறைத்து விடுவதால் சுவாசிப்பதில் சிரமத்தோடு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் மற்றும் குளிரால் அவதிப்படும் நிலை உண்டாகிறது. நிமோனியா தீவிரமானால் ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று போகும் அபாயமும் உண்டு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடலில் இருக்கும் நுரையீரல்கள் ப்ளூரா எனப்படும் மெல்லிய சவ்வினால் மூடப்பட்ட பஞ்சு போன்ற உறுப்புகளாகும். 90% காற்றால் நுரையீரல்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் இவற்றில் 10% மட்டுமே திட திசு (சாலிட் டிஷ்யூ) உள்ளன. சுவாச மண்டலத்தின் ஒரு பகுதியான நுரையீரல்கள் நாம் சுவாசிக்கும் போது உள்ளே இழுக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உள்வாங்கி ரத்தத்தில் கலப்பது, நம் உறுப்புக்கள் பயன்படுத்திய கார்பன் டை ஆக்சைடு கலந்த காற்றை ரத்தத்தில் இருந்து பிரித்து வெளியேற்றுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்கிறது.

நாம் காற்றை சுவாசிக்கும் போது அதில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள் நுரையீரலைத் தாக்கி நோயை ஏற்படுத்துகின்றன. இதில் தீவிர சுவாச நோயாக பார்க்கப்படுகிறது நிமோனியா. நுரையீரல்களில் அல்வியோலி எனப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் தொற்று ஏற்பட்டு தான் நிமோனியா பாதிப்பு உண்டாகிறது. நீர்க்குமிழிகள் போல காணப்படும் இந்த அல்வியோலி காற்றுப் பைகளில் தொற்றால் வீக்க நிலை ஏற்படும். மேலும் அந்த இடத்தில் அதிக நீர் அலல்து சீழ் கோர்த்து கொண்டு ஒருகட்டத்தில் காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் போகும்.

இது சுவாசத்தை சிரமமாக்குகிறது மற்றும் ஆக்ஸிஜன் உள்செல்வதை கட்டுப்படுத்துகிறது. இந்த நிலை தான் நிமோனியா எனப்படுகிறது. நிமோனியா நுரையீரலின் செயல்படும் திறனை குறைத்து விடுவதால் சுவாசிப்பதில் சிரமத்தோடு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் மற்றும் குளிரால் அவதிப்படும் நிலை உண்டாகிறது. நிமோனியா தீவிரமானால் ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று போகும் அபாயமும் உண்டு. வென்டிலேட்டர் ட்ரீட்மென்ட் தேவைப்படலாம், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

அறிகுறிகள் :

நிமோனியாவின் அறிகுறிகள் சிலநேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடியவை..

- அதிக சளியுடன் கூடிய இருமல்

- காய்ச்சல் அதிகமாக இருப்பது

- தலைவலி

- பசியின்மை

- குமட்டல் மற்றும் வாந்தி

- இருமும் போது அல்லது சுவாசிக்கும் போது மார்பு பகுதியில் வலி ஏற்படுவது

- குளிர்வது அல்லது அதிகமாக வியர்ப்பது

- உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், நடக்காத போதும் மூச்சுத் திணறல் ஏற்படுவது

- அதீத சோர்வை உணர்வது

பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் அல்லது ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் நிமோனியா தொற்று ஏற்பட கூடும். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கும் நெருங்கிய நபர்களுக்கும் தும்மல் அல்லது இருமல் மூலம் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகம். சிறு குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.

பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படாமல் தடுக்க முதல் ஆறு மாதங்களுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் பெரிதும் உதவுகிறது. வளர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்கள் டயட்டில் ஆரோக்கியமான, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வகையில் மினரல்ஸ், வைட்டமின்ஸ் அடங்கிய உணவுகளை சேர்ப்பது நிமோனியாவை எதிர்த்து போராடும் திறன்களை உடல் பெற உதவும்.

வைட்டமின் சி:

நிமோனியாவிற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின் சி-யின் பங்கு இன்றியமையாதது. நிமோனியாவை குணப்படுத்தவும் வைட்டமின் சி உதவுகிறது. ஆரஞ்சு தவிர எலுமிச்சை, பெர்ரி மற்றும் கிவி போன்ற பிற சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடலாம். எனினும் உங்களுக்கு தொண்டை புண் பிரச்சனை இருந்தால் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதில் கவனம் தேவை.

Also Read : குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு..! வயதானவர்களை பார்த்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்

தடுப்பு வழிகள்:

நிமோனியாவை நோயை தடுக்க சில நோய்த்தடுப்பு மருந்துகள் இருக்கும் அதே நேரம், உங்களது சுற்றுப்புறத்தில் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்வது, சுத்தமான தண்ணீரை பயன்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் உங்கள் கைகளை தவறாமல் கழுவுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Cough, Lungs health, Pneumonia