முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மூன்று வேளையும் பீட்சாவை மட்டுமே சாப்பிட்டு 30 நாளில் 3.5 கிலோ உடல் எடையை குறைத்த நபர்..! எப்படி தெரியுமா.?

மூன்று வேளையும் பீட்சாவை மட்டுமே சாப்பிட்டு 30 நாளில் 3.5 கிலோ உடல் எடையை குறைத்த நபர்..! எப்படி தெரியுமா.?

பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்

பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்

"30 நாள் முடிவில் என் உடல் மெலிந்து போய் இருந்தது. இணையதளத்தில் என்னை பின்தொடர்பவர்கள் ஆச்சரியாக பார்த்தனர். காரணம் கேட்டபோது நடந்ததை விளக்கினேன்." என அந்த நபர் கூறினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர். காலையில் நடைபயிற்சி, ஜாக்கிங், ஜிம் என பெரும்பலான ஆண், பெண் இருவரும் தங்களின் உடலை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் டயட் வகை உணவுகளை பின்பற்றி சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் டயட் உணவுகளுக்காக பிடித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர்.

இந்நிலையில் பிடித்த உணவை சாப்பிட்டே உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி விழிப்புணர்வை இளைஞர் ஒருவர் செய்து காட்டியுள்ளார். அதாவது அவருக்கு பிடித்த உணவான பீட்சாவை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு உடல் எடையை குறைத்துள்ளார் அந்த இளைஞர். இவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருவதோடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

30 நாட்களில் வெறும் பீட்சா சாப்பிட்டே உடல் எடையை குறைத்தது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்...

வடக்கு அயர்லாந்தில் உள்ள பாங்கூரை சேர்ந்தவர் ரியான் மெர்சர். இவருக்கு வயது 34. இவர் தனிநபர்களுக்கு உடற்பயிற்சிகளை எவ்வாறு செய்வது என்பது பற்றி சொல்லி கொடுத்து வருகிறார். இந்நிலையில் உடல் எடை குறைப்பதற்காக, பலரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை தவிர்த்து பிடிக்காத டயட் உணவுகளை உண்டு உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவதை கண்டு மிகுந்த கவலை அடைந்த ரியான், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தினார்.

அதை எவ்வாறு செய்வது என்பதை யோசித்தவர், அவருக்கு பிடித்த பீட்சாவை ஒரு மாதம் உண்ண முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 30 நாட்கள் ரியான் மெர்சர் காலை, மாலை, இரவு என 3 வேளையும் தனக்கு மிகவும் பிடித்த பீட்சாவை மட்டுமே உணவாக சாப்பிட்டுள்ளார். தினமும் 10 துண்டுகள் பீட்சாவை மட்டும் அவர் சாப்பிட்டு வந்த நிலையில் ஒரு மாதத்தில் அதாவது வெறும் 30 நாளில் 3.5 கிலோ கிராம் எடையை அவர் குறைத்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ளா ரியான் மெர்சர், உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் தங்களுக்கு பிடித்த உணவை கைவிட்டு தவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு பீட்சா மிகவும் பிடித்த உணவாகும். இதனால் 30 நாளும் பீட்சா சாப்பிட முடிவு செய்தேன். எனது உடலுக்கு தினமும் தேவையான கலோரிகளை கருத்தில் கொண்டு நானே பீட்சா தயாரித்தேன் என தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் முதலாவது உடல் எடையை குறைக்க பிரத்யேக உணவுகளை பின்பற்ற வேண்டாம், மற்றொன்று சரியான கலோரிகளை கணக்கிட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டு தினசரி உடற்பயிற்சிகளை செய்தாலே உடல் எடையை குறைக்கலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, நான் தின்பண்டங்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் £2 அல்லது £3 செலவழித்தேன், என்று அவர் மேலும் கூறினார். குறிப்பாக, அவரது எடை குறைப்பு சவாலின் கடினமான பகுதி ஜிம்மிற்கு செல்வது அல்ல, மாறாக அவரது உணவை தயார் செய்வது. உணவு நேரம் மற்றும் அவர் மாதம் முழுவதும் அதை ருசித்து மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

Also Read : பீட்ஸா சாப்பிட நாவூறுகிறதா..? ஈசியாக மைக்ரோவேவ் ஓவன் இல்லாமலேயே செய்ய இதோ வழிகள்..!

30 நாள் முடிவில் என் உடல் மெலிந்து போய் இருந்தது. இணையதளத்தில் என்னை பின்தொடர்பவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். காரணம் கேட்டபோது நடந்ததை விளக்கினேன். இது பலருக்கும் உத்வேகம் கொடுப்பதாக தெரிவித்தனர் என அவர் கூறினார். இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில் பலர் இவருக்கு ஆதரவாகவும், சிலர் இவரின் இந்த செயலுக்கு எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Diet tips, Viral News, Weight loss