ஆன்லைனுக்கு மாறும் உடற்பயிற்சி வகுப்புகள்!

பள்ளி வகுப்புகள் தொடங்கி ஒவ்வொன்றாக ஆன்லைன் மயமாகி வருகின்றன. அந்த வரிசையில் உடற்பயிற்சி வகுப்புகளும் ஆன்லைனைக்கு மாறி வருகின்றன.

ஆன்லைனுக்கு மாறும் உடற்பயிற்சி வகுப்புகள்!
கோப்புப்படம்
  • Share this:
ஊரடங்கு தொடங்கியதில் இருந்து இன்று வரை தளர்வு அளிக்கப்படாதவற்றில் உடற்பயிற்சி கூடமும் ஒன்று. பொதுமுடக்கத்திற்கு முன் தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயோ, மொட்டை மாடியிலேயோ பயிற்சி செய்து வருகின்றனர். தினந்தோறும் இவர்களால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. போதுமான உடற்பயிற்சி சாதனங்களும் இல்லை. இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் பயிற்சியைத் தொடங்கி இருக்கின்றனர் உடற்பயிற்சி கூடம் நடத்தியவர்கள்.

பொதுவாகவே எடைக்குறைப்பு செய்பவர்கள், உடல்நல பராமரிப்பு மற்றும் சர்க்கரை வியாதிக்காரர்கள், இதய நோயாளிகள், வயது முதிர்ந்தோர் தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப் பட்டிருப்பதால் வீட்டிலேயே முடங்கி விட்டனர். ஆன்லைன் மூலம் செய்து காட்டப்படும் பயிற்சிகளை இவர்கள் அப்படியே செய்வதால் நல்ல பயன் பெறுவதாக கூறுகிறார்கள் பயிற்சியாளர்கள். இதேபோல் யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா வகுப்புக்கு செல்லாவிட்டாலும் பயிற்சியாளர்கள் ஆன்லைன் மூலம் வழங்கும் அறிவுரைகள் நேரடியாக கிடைப்பது ஓரளவு பலனளிப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்


ஆன்லைனில் உடற்பயிற்சியை சொல்லிக் கொடுப்பதற்கும் யோகா சொல்லிக் கொடுப்பதற்கும் குறிப்பிட்ட கட்டணத்தை உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா நிலையங்கள் வசூலிக்கின்றன.எனினும் இது தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்; உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்பதே பயிற்சியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading