ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Intimate Hygiene : இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

Intimate Hygiene : இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

இன்டிமேட் வாஷ்

இன்டிமேட் வாஷ்

நீங்கள் பயன்படுத்தும் இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளின் pH லெவல் என்னவென்று பார்க்க வேண்டும்.அந்தரங்கப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் தூய்மை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்தரங்க உறுப்புகள் தூய்மையாகவும் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம், நலம் மற்றும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக பல விதமான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தரங்கப் பகுதிகள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாகவும் இருக்க, இன்டிமேட் வாஷ் என்று ஹைஜீன் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளன. இது, அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் கெட்ட வாடை, அரிப்பு ஆகியவற்றை குறைத்து, தொற்று ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

ஆனால், இவ்வாறு அந்தரங்கப் பகுதிகளில் யூஸ் செய்யும் பொருட்களும் உங்களை பாதிக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளின் pH லெவல் என்னவென்று பார்க்க வேண்டும்.அந்தரங்கப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும்; குறிப்பாக மாதவிடாய் காலத்தில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு அதிகரித்துள்ளது இதற்காக பல்வேறு நிறுவனங்களுமே பல பிராண்டுகள் பல விதமான தயாரிப்புகளை வழங்குகின்றன.

அந்தரங்க பகுதியில் இருந்து வெளிப்படும் வாடை இயல்பானது தானா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்காகவே, நல்ல நறுமணமுள்ள பல விதமான இன்டிமேட் வாஷ் புராடக்ட்களை பல பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பெண் உறுப்புகள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், அடர் நிறத்தில் இருக்க கூடாது, பளிச்சென்று இருக்கவேண்டும் என்பதற்காகவும் பலவிதமான பொருட்களை டீனேஜ் பெண்களும் இளம்பெண்களும் வாங்கி வருகிறார்கள். சரும நிறத்தை மேம்படுத்தும் மெருகூட்டும் வெண்மையாக்கும் கிரீம்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது.

இவ்வாறு அந்தரங்க பகுதிகளை பராமரிக்கும் பொருட்களை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் இது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்கள் அதிக ரசாயன கலவை இல்லாமலும், இதில் இருக்கும் ph அளவு எவ்வளவு என்பதையும் சரிபார்க்க வேண்டும். நாம் பயன்படுத்தும் ஷாம்பூ சோப்புகளில்கூட கெமிக்கல்கள் உள்ளன; இதனால்தான் பலரும் ஆர்கானிக் தயாரிப்புகள் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

Also Read : தினசரி வாழ்க்கை முறையில் இந்த 5 பழக்கங்களை மாற்றிக்கொண்டால் கருப்பை புற்றுநோயை தடுக்கலாம்..!

இந்நிலையில் அந்தரங்க உறுப்புகளை பயன்படுத்தக்கூடிய இன்டிமேட் பொருட்களில் சல்பேட் பாரபன் உள்ளிட்ட எந்தவிதமான ரசாயனங்களும் இருக்க கூடாது, மிகவும் மைல்டான பொருளாகத்தான் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை பயன்படுத்தினால் அது உங்கள் சருமத்தை வறண்டதாக மாற்றக்கூடாது.

கற்றாழை, வீட் ஜெர்ம், டீ ட்ரீ ஆயில், கேலண்டுல்லா, கேமொமில் ஆகியவை அந்தரங்க உறுப்புகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற உட்பொருட்கள் ஆகும். இவற்றால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது மற்றும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் தொற்று ஏற்படுவதையும் தடுப்பதற்கு உதவும்.

அடுத்ததாக pH அளவு. நம்முடைய உடலில் pH அளவு இருக்கிறது, அது அதிகமானாலோ குறைந்தாலோ உடலின் அசிடிட்டி மற்றும் ஆல்கலைன் சமநிலை பாதிக்கப்படும். அந்தரங்க பொருட்கள் மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கு நீங்கள் எந்த பொருட்களை பயன்படுத்தினாலும் pH அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆண்களுக்கு சராசரியாக 5 –5.5 வரையிலான pH உள்ள பொருட்களை பயன்படுத்தலாம். பெண்களுக்கு அதைவிட குறைவான அளவில், 3 – 3.5 pH அளவு உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அந்தரங்க பகுதிகளில் நீங்கள் கிரீம் அல்லது லோஷன் அல்லது வாஷ் என்று எது பயன்படுத்துவதற்கு முன்பும், சில மணி நேரங்களுக்கு பின்பும் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Intimate Hygiene, Women Health