பெரியவர்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் ஏன் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து?

நெயில் பாலிஷ் ரீமூவரை ஜூஸ் எனவும், பாடி லோஷனை தயிர் எனவும் நினைத்துக் குடித்துவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்

news18
Updated: June 18, 2019, 5:01 PM IST
பெரியவர்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் ஏன் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து?
பெரியவர்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து
news18
Updated: June 18, 2019, 5:01 PM IST
சிறுவர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ, லோஷன், நெயில் பாலிஷ் போன்றவற்றை உங்கள் வீட்டுச் சிறுவர்கள் பயன்படுத்துகிறார்கள் எனில் உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் அவை உங்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்ளினிகல் பீடியாட்ரிக்ஸ் ஜர்னலில் வெளியிட்டுள்ள இந்த ஆய்வை ஐந்து வயதிற்குக் குறைவான 64,600 மேற்பட்ட சிறுவர்களிம் நடத்தியுள்ளனர். குழந்தைகளுக்கு அந்தப் பொருட்களில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்கத் தெரியாது. மேலும் அந்தப் பொருட்களில் உள்ள இரசாயனத்தின் வீரியமும் அவர்களுக்குத் தெரியாது. கண்களைப் பறிக்கும் வண்ண நிறங்களில் வடிமைக்கப்படிருக்கும் அந்த பொருட்கள் அவர்களை வெகுவாக கவரும். அதன் நறுமணம் அவர்களுக்கு உண்ணத் தூண்டும். இதனால் அவற்றை உண்ணவோ, குடிக்கவோ செய்வார்கள்.

உதாரணமாக நெயில் பாலிஷ் ரீமூவரை ஜூஸ் எனவும், பாடி லோஷனை தயிர் எனவும் நினைத்துக் குடித்துவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என ரெபேகா மெக் ஆடம்ஸ் குறிப்பிடுகிறார். இவர் இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியராகவும். குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவராகவும் இருக்கிறார்.
அவ்வாறு இந்த இரசாயனம் நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமம் பாதுகாப்புப் பொருட்களை விழுங்கிவிட்டால் 75.7 சதவீதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கண்களின் படும்படி வைத்தால் 19.3 சதவீதம் சருமம் அல்லது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
நகப் பராமரிப்புப் பொருட்கள் 28.3 சதவீதமும், தலை முடிப் பராமரிப்புப் பொருட்கள் 27.0 சதவீதமும், சருமப் பராமரிப்புப் பொருட்கள் 25.0 சதவீதமும், வாசனைத் திரவியங்கள் 12.7 சதவீதமும் பாதிப்பை உண்டாக்கும் எனப் பட்டியலிட்டுள்ளது. மொத்தத்தில் 86.2 சதவீதம் அவை விஷமாக மாறும் தன்மை கொண்டதாக இருக்கின்றன என்கிறது ஆய்வு.

Loading...

”எப்போதும் இந்தப் பொருட்களை எளிதில் எட்டக் கூடிய வகையில் வீட்டில் வைக்கிறோம். இது குழந்தைகள் எடுப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பதால் இனி கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு” மெக் ஆடம்ஸ் குறிப்பிடுகிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...