பீரியட்ஸால் ஏற்படும் சருமத் தடிப்புகளை எப்படி கையாளுவது? நடிகை டாப்ஸி கொடுத்த மெசேஜ்..

பீரியட்ஸால் ஏற்படும் சருமத் தடிப்புகளை எப்படி கையாளுவது? நடிகை டாப்ஸி கொடுத்த மெசேஜ்..

டாப்சி

இளம்பெண்கள் மற்றும் பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அதிக தொழில்நுட்பங்கள் இல்லை.

  • Share this:
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் காரணமாக அனைத்தும் எளிதில் நமக்கு கிடைக்கிறது. என்னதான் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும், இளம்பெண்கள் மற்றும் பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அதிக தொழில்நுட்பங்கள் இல்லை என நடிகை டாப்ஸி பன்னு தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் மாதவிடாய் சுகாதாரம் பற்றி நமக்கு புரியாத போது ஏற்படும் பல சிக்கல்களை விவரித்தார். மேலும் பெண் பிறப்புறுப்பு பகுதி தொடர்பான பிரச்சினைகள் இயல்பாக்கப்பட்டு பெண்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். வீடியோவின் தொடக்கத்தில், தனது நண்பரின் டீனேஜ் உறவினரை எப்படி சந்தித்தார் என்பதையும், பீரியட்ஸ் ஆரம்பத்தில் அந்த பெண் எப்படி உணர்ந்தார் என்பதையும் விளக்கியிருந்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, "அந்த பெண் எங்களிடம் மன்னிப்புக் கோரிவிட்டு, பின்பு மோசமாக நடப்பதை நான் கண்டேன். அதனை கண்டு மிகுந்த கவலையால் நான் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று என் தோழியிடம் கேட்டேன். அதற்கு என் தோழி, "அவளுக்கு இப்பொது மாதவிடாய் காலம். இந்த நாட்களில் அவளுக்கு பீரியட் ராஷஸ் ஏற்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அதைக் கையாள அவள் கற்றுக் கொள்வாள்." என்று பதிலளித்திருந்தார். நாம் எப்படி பீரியட் ராஷஸை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கண்டு நான் திகைத்தேன்,” என்று நடிகை டாப்ஸி கூறினார். 
View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)


மேலும் நாம் ஏன் பீரியட் ராஷஸை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டோம்? என்று கேள்வி எழுப்பினார். சிறுமி பருவத்தில் இருந்து ஒரு பெண்ணாக மாறுவதற்குள் இந்த பீரியட் ராஷஸ் நம்மில் நீண்டகால சேதத்தை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் மீளமுடியாத பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நடிகை தெரிவித்தார். நாம் உபயோகிக்கும் வழக்கமான சானிட்டரி பேட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை அதிக சதவீத பிளாஸ்டிக், மற்றும் குறைந்த உறிஞ்சுதல் திறன் கொண்டவை. அதிலும் பிறப்புறுப்பு தோல் என்பது, பெண் உடலின் மற்ற பாகங்களை விட மிக முக்கியமான பகுதியாகும்.

உடல் எடை அதிகரிக்க இது கூட காரணமாக இருக்குமா..? மக்களே உஷார்..

அதில் மேற்கண்ட மோசமான விளைவுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டால், அந்த பகுதியில் "நிறமாற்றம்" மற்றும் "டார்க் பாட்சஸ்" ஆகியவை ஏற்படக்கூடும் என்று அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இவை தீராத உடல் வலி, தோல் நிறமாற்றத்தின் சங்கடம் மற்றும் இறுதியில் நிரந்தர டார்க் பாட்ச்சஸ் ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நாம் அதை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டது தான் வருத்தமளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ பதிவில், பெண்களுக்கும், நமது கிரகத்திற்கும் ஏற்ற சில நல்ல தயாரிப்புகளை பயன்படுத்தும்படி அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அதில், " இன்றைய காலகட்டங்களில் ராஷஸ் மிகவும் பொதுவான பிரச்சினையாக இருக்கலாம். நாம் அதை கிட்டத்தட்ட இயல்பானதாக மாற்றியதால், அதற்கான தீர்வுகளை காணும் யோசனையை கைவிட்டு விட்டோம். இந்த சிக்கலை அப்படியே விட்டுவிடாதீர்கள், உங்களை நீங்களே கைவிட்டுவிடாதீர்கள்! ”என்று குறிப்பிட்டிருந்தார்.

மாதவிடாய் சுகாதாரம் என்பது நாட்டில் ஒரு பெரிய பிரச்சினையாகும். ஏனென்றால் அதில் அதிக விழிப்புணர்வும், கல்வியும் இல்லை. இதன் விளைவாக, பல இளம்பெண்கள் இந்த துன்பம் சாதாரணமானது என்று நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையில் இல்லை என்று டாப்ஸி பன்னு கூறுகையில், இதற்கான தீர்வினை விரைவில் காண முடியும் என நம்பப்படுகிறது. நடிகையின் இந்த வீடியோ பதிவு நெட்டிசன்கள் பாராட்டைப் பெற்று வருகிறது.

 
Published by:Sivaranjani E
First published: