மாதவிடாயின்போது எம்மாதிரியான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படும் என்று தெரியுமா?

மாதிரி படம்

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சமீப காலமாகவே அடிவயிறு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அதிக காரணம் கருப்பையில் இருக்கும் குறைபாடுகள் தான். மாதவிடாய் நாட்கள் முடிந்த 15 நாட்களுக்கு பிறகு தொடங்கும் அடிவயிறு வலி படிப்படியாக அதிகரித்து உங்களை சிக்கலில் தள்ளிவிடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    றெக்கை கட்டி பறக்கும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும். அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை மருத்துவச் சொற்களில் 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்கின்றனர். 

    ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது தவறான அணுகுமுறை. வலிக்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

    மாதவிடாய் வயிறுவலி:

    மாதவிடாயின்போது ஏற்படும் வயிறுவலி சாதாரணமானது என்று நினைக்கக்கூடாது. சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். சரியான நேரத்தில் உணவு எடுத்துகொள்ளவும் மாட்டார்கள். எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். மாதவிடாய் நாட்கள் முடியும் வரை இப்படிதான் இருப்பார்கள். கொடுமையான இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும். இந்த வயிறு வலி உபாதை தீர்த்துவிட்டாலே பெருமளவு உபாதையை குறைத்துவிடலாம். அப்படியான வயிறுவலிக்கு தீர்வாக இருக்கும் பொருள்களில் நல்லெண்ணெ, வெந்தயம் முக்கியமானது. 

    எண்டோமெட்ரியோசிஸ்:

    35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சமீப காலமாகவே அடிவயிறு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அதிக காரணம் கருப்பையில் இருக்கும் குறைபாடுகள் தான். மாதவிடாய் நாட்கள் முடிந்த 15 நாட்களுக்கு பிறகு தொடங்கும் அடிவயிறு வலி படிப்படியாக அதிகரித்து உங்களை சிக்கலில் தள்ளிவிடும். ஒரு சிலருக்கு இதில் மாற்றம் இருக்கும். சிலருக்கோ கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருந்தாலும் சிலருக்கு மீண்டும் அடுத்த 16வது நாள் வலி தொடங்கும். இப்படி மாதவிடாய் காலத்தோடு தொடர்புடைய அந்த நேரத்தில் வரக்கூடிய வலிகள் உதிரக்கட்டிகள் என்று சொல்லகூடிய எண்டோமெட்ரியோசிஸ் ஆல் வரக்கூடியதாக இருக்கும். இவை தவிர சிலருக்கு கர்ப்பப்பையில் தொற்று இருந்தாலும், பால்வினை தொற்று இருந்தாலும் கூட அடிவயிறு வலி இருக்கும்.

    ஃபைப்ராய்டு கட்டிகள்:

    கர்ப்பப்பையின் உள்ளோ அல்லது வெளியோ கட்டிகள் இருக்கும். சில நேரங்களில் கர்ப்பப்பை திசுக்களில் கூட கட்டிகள் இருக்கலாம். மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாளில் அடிவயிறு வலிக்கும். அதோடு உதிரபோக்கும் கட்டிகளாக வெளியேறும். இது மாதவிடாயின்போது வரும் வயிறு வலி என்று அலட்சியப்படுத்தினால் கட்டிகள் வளர்ந்து பெரிதாகும். கட்டிகள் பெரிதாகும் போது அவை சிறுநீர்ப்பை, மலக்குடலை அழுத்தி மேலும் அடிவயிறுவலியை அதிகரிக்க தொடங்கும்.

    அடினோமையோசிஸ்:

    ஒருவருக்கு கர்ப்பப்பை வீக்கம் இருந்தாலும் அடிவயிறு வலியும் இருக்கும். கர்ப்பப்பை வால் என்று சொல்லக்கூடிய சுவர்களின் தடிமன் சற்று அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பை சுருங்கும் போது அடிவயிற்றீல் அதிக வலியை உண்டாக்குகிறது. அடி வயிற்றில் தாங்கமுடியாத வலியை உண்டாக்க காரணம் கர்ப்பப்பை வீக்கம் தான் என்பதை உணர்த்தும் அறிகுறியாக கூட இதை சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் முதல் நாளில் தொடங்கும் அடி வயிறு வலியானது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் மேலும் மேலும் படிப்படியாக அதிகரிக்கும். பிறகு வலி இருக்காது. இப்படி மாதவிலக்கு நாளில் மட்டும் வரும் அடிவயிறு வலியை கர்ப்பப்பை வீக்கத்தின் அறிகுறியாக கொள்ளலாம்.

    இந்த நேரங்களில் நீங்கள் செய்யவேண்டியது:

    நீர்ச்சத்துள்ள உணவுகள்: நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.

    துவர்ப்பு உணவுகள்: மாங்கொட்டை, மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.

    Also read... Sexual wellness : திருமணத்தை மீறிய உறவு... கணவன் - மனைவிக்கு பல்லவியின் அட்வைஸ்

    பிஞ்சு காய்கறிகள்: மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும். முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும். எனவே மேற்சொன்ன சிக்கல்களில் இருந்து உங்களை காத்து வளமுடன் வாழுங்கள்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: