• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா கவலை இல்லை… இதய நோய் உள்ளவர்களுக்கு ஆய்வில் வந்த நல்ல செய்தி..!

கொரோனா கவலை இல்லை… இதய நோய் உள்ளவர்களுக்கு ஆய்வில் வந்த நல்ல செய்தி..!

இதய நோய்

இதய நோய்

தடுப்பூசிகளைச் பற்றி வளம் வரும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை மக்கள் நம்பினாலும், இதய நோயாளிகள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது மிக முக்கியம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. இந்த நோய் பாதிப்பால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எளிதில் பாதிக்கப்பட்டுவருவதால் முதன்மையாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் அவர்கள் உள்ளனர்.

அதேபோல, இருதய நோய், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு ஆய்வுகளின்படி, இருதய நோய் பாதிப்புடன் கொரோனா வைரஸ் இணைவது மிகவும் ஆபத்தானது. இதனால் மரணங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய தொற்றுநோய்களின் காரணமாக மிக மோசமான நிலையில் உள்ளனர். திடீர் மரணங்கள் மற்றும் கடுமையான தொற்றுநோய்களுக்கு தொடர்ந்து பயந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்பு மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாவது அலையின் போது, ​ கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் மரணங்கள், மிகவும் பொதுவான பின்விளைவுகளில் ஒன்றாக மாறியது.

எனவே, இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசிகளைச் பற்றி வளம் வரும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை மக்கள் நம்பினாலும், இதய நோயாளிகள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது மிக முக்கியம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், கோவிட் -19 தடுப்பூசி இதய நோய்கள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பானதா? என்ற கேள்வி உங்களில் எழலாம்.கோவிட் -19 தடுப்பூசியால் ஏற்படும் சில பாதகமான விளைவுகளில் கில்லன்-பாரே நோய்க்குறிகள், அதிகரித்த இரத்தக் கட்டிகள், மாரடைப்பு (இதய தசையின் வீக்கம்) அல்லது அனாபிலாக்ஸிஸ் (ஒரு ஆன்டிஜெனுக்கு கடுமையான ஒவ்வாமை ) ஆகியவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆவணப்படுத்தப்பட்டவை என்னவென்றால், குறிப்பிடப்பட்ட பக்க விளைவுகள் பெரும்பாலானவை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு சில வாரங்கள் தோன்றும். ஆனால் அவை நீண்ட கால அறிகுறியாக இருக்காது.

கால்சியம் சத்து குறைபாட்டை கண்டறிவது எப்படி..? உணவுகள் மூலம் சரிசெய்ய டிப்ஸ்

பக்க விளைவுகள், அதனால் ஏற்படும் அபாயங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மாதத்திற்கு பிறகு தோன்றியதற்கான சில சான்றுகளும் இருக்கின்றன. எனவே, அவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்தால் நன்றாக நிர்வகிக்க முடியும். ஆனால் நம் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை கடுமையாக பாதிக்கும் எந்த பக்க விளைவுகளையும் தடுப்பூசி ஏற்படுத்தாது. மேலும், மக்களில் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய கடுமையான பக்க விளைவுகள், அறிக்கையிடப்பட்ட சராசரியை விடக் குறைவு. உதாரணமாக, தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, தொற்றுகளால் குல்லியன்-பாரே நோய்க்குறி உருவாகும் அபாயம் 17 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, இதய நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, மிகவும் முக்கியமானவை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் கொரோனா மாறுபாடுகள், அதனால் ஏற்படும் தீவிர பாதிப்பு அபாயத்தில் நாம் இருக்கிறோம். அதிலும் இதய நோயாளிகள் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களில் ஒருவராக இருப்பதால், அவர்கள் தடுப்பூசி மருந்துகளை விரைவில் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசிகள் எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தகுதி அளவுகோல்கள் பொருந்தும் ஒவ்வொருவரும் தடுப்பூசி மருந்துகளைப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பாக இருதய ஆபத்து காரணிகள், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை விட வைரஸ் பரவலால் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் எனவே அவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் 18-24 வயதுக்குட்பட்டவர்களுக்கு காத்திருக்கும் அபாயம்.!
 தடுப்பூசிக்கு பின் ஏற்படும் சில பொதுவான விளைவுகளில் காய்ச்சல், சோர்வு, தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை ஏற்படும். கூடுதலாக, ஊசி போடப்பட்ட இடத்தில் வலியும் இருக்கும். ஒரு நபர் ஆரோக்கியமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே இருதய நோய் உள்ளவராக இருந்தாலும், தடுப்பூசியின் பக்க விளைவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இதய நோயாளியாக இருப்பவர்களுக்கு மட்டும் வேறுமாதிரியான அறிகுறிகள் வரலாம் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொடர்ச்சியான மருத்துவ சோதனை செய்வது அவசியம்.


அதேபோல, ஒரு நபர் ஆரோக்கியமாக இருந்தாலும் அல்லது இதய நோய் உள்ளவராக இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வைரஸ் தொற்று அவர்களை பாதிக்காது என்று சொல்லமுடியாது. தடுப்பூசி போடுவதால் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு குறையும். இருப்பினும், புதிய மாறுபாடுகளின் பரவலால் தற்போதைய காலங்களில் முன்னேற்ற நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது. எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு உடல் ரீதியான சமூக விலகல், முகக்கவசம் அணிவது, கை சுகாதாரத்தை பராமரிப்பது மற்றும் அனாவசியமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது மிகவும் முக்கியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: