ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வதுதான் பெஸ்ட்..! எப்படி தெரியுமா.?

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வதுதான் பெஸ்ட்..! எப்படி தெரியுமா.?

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வதுதான் பெஸ்ட்.! எப்படி தெரியுமா.?

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வதுதான் பெஸ்ட்.! எப்படி தெரியுமா.?

ஒட்டுமொத்தமாக பகலில் உடற்பயிற்சி செய்பவர்களை ஒப்பிடும் போது மதியம் அல்லது மாலை செய்யப்படும் மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகள் 25% வரை இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நீண்டகால நன்மைகள் அதிகம். தவறாமல் செய்யப்படும் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகள் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலினை சார்ந்திருப்பதை குறைக்கும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தீவிரமான மற்றும் வாழ்க்கையை புரட்டி போடும் நீரிழிவு நோயில் டைப் 1 & டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 நீரழிவு நோயானது பாதிக்கப்பட்டவரின் கணையம் ரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோனை உடலில் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாதபோது இது நிகழ்கிறது. அதுவே டைப் 2 நீரழிவு நோயானது அதிக எடை அல்லது போதுமான உடற்பயிற்சி செய்யாததால் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவுகள், தினசரி உடற்பயிற்சி நீரிழிவு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை தடுக்க உதவும்.

எனினும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதில் ஒரு நாளின் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம் என்பதும் முக்கியத்துவம் பெறுவதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது. இந்த ஆய்வின்படி காலையில் சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி செய்பவர்களை விட நாளின் பிற்பகுதியில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. சரி, இப்போது இந்த ஆய்வை பற்றி பார்க்கலாம்.

ஆய்வு சொல்வதென்ன?!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் Diabetologia என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்விற்காக 775 டச்சு ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த தரவு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 45 - 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

காலை 6 - மதியம் 12, மதியம் 12 - மாலை 6, மாலை 6 - நள்ளிரவு வரை என இவர்கள் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களின் உடற்பயிற்சிகளின் தீவிரம் மிதமானது முதல் வீரியம் கொண்டதாக இருந்தது.

வழக்கமாக காலை நேரத்தை விட மதியம் 12 மணிக்கு பிறகு நள்ளிரவு வரை உடற்பயிற்சி மேற்கொள்ளும் குழுவினர் இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைத்து நீரழிவு அபாயத்திலிருந்து தப்பிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மதியம் 12 - மாலை 6 மணி வரை உடற்பயிற்சி செய்பவர்கள் 18% வரையிலும், மாலை 6 - நள்ளிரவு வரை உடற்பயிற்சி செய்பவர்கள் 25% வரையிலும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைந்ததாக ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பகலில் உடற்பயிற்சி செய்பவர்களை ஒப்பிடும் போது மதியம் அல்லது மாலை செய்யப்படும் மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகள் 25% வரை இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைக்கிறது. இதன் மூலம் ஒரு நாளில் தாமதமாக செய்யப்படும் வழக்கமான உடற்பயிற்சி வயதானவர்களிடையே ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது என்று முடிவு செய்யப்பட்டது. க்ரோனோடைப்பின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் செயல்பாடுகளின் நேரம் உண்மையில் முக்கியமா என்பது குறித்த ஆய்வுகள் தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

டைப் 2 நீரிழிவை வளர்க்கும் ஆபத்து காரணிகள்:

- அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்கள்

- ஆசிய, ஆப்பிரிக்க-கரீபியன் அல்லது கறுப்பு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்

- நெருங்கிய உறவினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது

- 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். தெற்காசிய மக்களைப் பொறுத்தவரை 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்

Also Read : உடற்பயிற்சிக்குப் பின் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..?

நீரிழிவு நோய் அறிகுறிகள்:

- எப்போதும் தாகமாக உணர்வது

- இரவில் அதிகமாக சிறுநீர் கழிப்பது

- பிறப்புறுப்பை சுற்றி அரிப்பு

- காயங்கள் குணமடைய நீண்ட நாட்கள் எடுப்பது

- திடீர் எடை இழப்பு

- மங்கலான பார்வை, அடிக்கடி சோர்வாக உணர்வது

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diabetes, Workout