Home /News /lifestyle /

நீங்கள் இரவில் ஆந்தை போல தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருப்பவரா..? எச்சரிக்கும் புதிய ஆய்வு..!

நீங்கள் இரவில் ஆந்தை போல தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருப்பவரா..? எச்சரிக்கும் புதிய ஆய்வு..!

தூக்கமின்மை

தூக்கமின்மை

Health Care | வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக பெரும்பாலானோரை பாதித்துள்ள ஒன்றாக இருக்கிறது தூக்க சுழற்சி. பொதுவாக இரவு 9 - 10 மணிக்கும் தூங்க தொடங்கி காலை 6 மணிக்கு எழும் நபர் இயல்பான தூக்க சுழற்சியை கொண்டவராக குறிப்பிடப்படுகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக பெரும்பாலானோரை பாதித்துள்ள ஒன்றாக இருக்கிறது தூக்க சுழற்சி. பொதுவாக இரவு 9 - 10 மணிக்கும் தூங்க தொடங்கி காலை 6 மணிக்கு எழும் நபர் இயல்பான தூக்க சுழற்சியை கொண்டவராக குறிப்பிடப்படுகிறார்.

ஆனால் வேலைபளு அல்லது பிற தேவையற்ற பழக்கங்கள் காரணமாக இயல்பான தூக்க சுழற்சியை தொலைத்த பலரும் night owls அதாவது இரவு ஆந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது இரவில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருந்தது காலை மிகவும் தாமதமாக எழுந்திருக்கும் நபர்களே night owls ஆவார்கள்.

இதனிடையே இப்படி இரவில் ஆந்தை போல நீண்ட நேரம் விழித்திருக்கும் நபர்களுக்கு, இரவு நன்றாக தூங்கி காலை குறித்த நேரத்திற்குள் எழும் நபர்களை விட டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயங்கள் அதிகம் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.நமது செயல்பாட்டு முறைகள் மற்றும் தூக்க சுழற்சிகள் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Experimental Physiology-ல் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆராய்ச்சி ஒருவரது விழிப்பு / தூக்க சுழற்சிகள் வளர்சிதை மாற்றத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் ஆற்றல் ஆதாரங்களுக்கான உடலின் விருப்பத்தை மாற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்ற வேறுபாடுகள் சேமிப்பு மற்றும் ஆற்றல் பயன்பாட்டிற்காக செல்கள் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சுதலை ஊக்குவிக்க ஒவ்வொருவரும் இன்சுலினை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதோடு தொடர்புடையது. இயல்பான தூக்க சுழற்சியை பின்பற்றி காலை சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் early birds என குறிப்பிடப்படுகிறார்கள்.

Read More : இளமையிலேயே முதுமையை உணர்கிறீர்களா..? இந்த 4 வகையான நடைப்பயிற்சிகளை டிரை பண்ணுங்க...


இரவு நீண்ட நேரம் விழித்திருந்தது காலை தாமதமாக எழுந்திருப்பவர்களின் உடலில் ஆற்றலுக்காக கொழுப்பை பயன்படுத்துவதற்கான திறன் குறைகிறது. இதன் மூலம் பயன்படுத்தப்படாத கொழுப்புகள் உடலில் தேங்கி டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதே நேரம் night owls நபர்களை விட early birds நபர்கள் பகலில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆற்றலுக்காக அதிக கொழுப்பை பயன்படுத்தி கொள்வார்கள். early birds மற்றும் night owls நபர்கள் இடையே கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் காணப்படும் வேறுபாடுகள், உடலின் சர்க்காடியன் ரிதம் (விழிப்பு/தூக்க சுழற்சி) நம் உடல்கள் இன்சுலினை பயன்படுத்தும் விதம் பாதிக்கப்படுவதை தங்கள் ஆய்வு காட்டுவதாக ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் மாலின் கூறி உள்ளார்.



அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்பாளர்களை இரு குழுக்களாக பிரித்து அவர்களின் க்ரோனோடைப் அடிப்படையில் வகைப்படுத்தினர். அவர்கள் உடல் நிறை மற்றும் உடல் அமைப்பை மதிப்பிட அட்வான்ஸ்டு இமேஜிங்கை பயன்படுத்தினர். அத்துடன் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அளவிட இன்சுலின் சென்சிட்டிவிட்டி மற்றும் மூச்சு மாதிரிகளை பயன்படுத்தினர். பங்கேற்பாளர்களின் அன்றாட நடவடிக்கை முறைகளை மதிப்பிட ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டனர்.

ஆய்வில் பங்கேற்ற நேரத்தில் இவர்கள் கலோரி மற்றும் ஊட்டச்சத்து கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர். ஆய்வு முடிவுகளில் தாக்கத்தை குறைக்க ஒர் இரவில் விரதம் இருந்தனர். பின்னர் பங்கேற்பாளர்களுக்கு ஏரோபிக் ஃபிட்னஸ் லெவல் பரிசோதனை செய்யப்பட்டது. early birds மற்றும் night owls-களுக்கு இடையிலான வளர்சிதை மாற்ற விருப்பத்தின் இந்த மாற்றத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறி உளளர்கள் ஆய்வளர்கள்.

முடிவில் early birds-கள், night owls-களை விட ஓய்வு மற்றும் உடற்பயிற்சியின் போது ஆற்றலுக்காக அதிக கொழுப்பை பயன்படுத்துகின்றனர் எனபதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இன்சுலின் சென்சிட்டிவிட்டி அதிகமாக இருந்தது. மறுபுறம் night owls நபர்களுக்கு ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க அவற்றின் உடலுக்கு அதிக இன்சுலின் தேவைப்படுகிறது. மேலும் இவர்களின் உடல்கள் ஆற்றல் மூலமாக கொழுப்புகளை எடுத்து கொள்வதை விட கார்போஹைட்ரேட்டுகளை விரும்புவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Health, Lifestyle, Sleep

அடுத்த செய்தி