கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள சுணக்கம்?

கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள சுணக்கம்?

மாதிரி படம்

இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பு மருந்துகளும் இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனோ தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டு நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து தான் கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும். இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பு மருந்துகளும் இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள முன்வரவில்லை.
தமிழகத்தில் நான்கு வாரங்கள் முன்பாக 2 லட்சத்து 46 ஆயிரத்து 218 பேர் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். ஆனால் இவர்களில் தற்போது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 704 பேர் தான் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 514 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவில்லை.

நான்கு வாரங்கள் முன்பு வரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கூட்டு நோயுடனான 45 முதல் 60 வயதிலானவர்களுக்கு தடுப்பூசி மார்ச் 1ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மார்ச் 28ம் தேதிக்கு பிறகே இரண்டாவது டோஸ் வழங்கப்படும்.எனவே தற்போது இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்பவர்கள் அனைவரும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள். அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தொடக்கம் முதலே சுகாதாரப் பணியாளர்களிடம் சுணக்கம் இருந்து வருகிறது.

தமிழகத்தில் முதல் நாளான ஜனவரி 16ம் தேதி  2783 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஆனால் இவர்களில் 1154 பேர் மட்டுமே உரிய நாளில் நான்கு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டனர். அதே நிலை தற்போதும் தொடர்கிறது.

முதல் டோஸ் போட்டுக் கொண்டாலே போதும் என தவறான நம்பிக்கை காரணமாக இரண்டாவது டோஸ் போடாமல் இருக்கக் கூடாது. இரண்டு டோஸ் போட்டுக் கொண்டால் தான் தடுப்பூசிக்கான முழு பலன் கிடைக்கும் என தொற்று நோய் நிபுணர் ராம் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மீண்டும் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டது போன்று உச்ச பாதிப்பு ஏற்படலாம். எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே நம் கையில் இருக்கும் சிறந்த வழியாகும் என அவர் தெரிவிக்கிறார்.
Published by:Ramprasath H
First published: