மாலாவும் , கணவர் சுரேஷூம் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இருவருமே ஐடி துறையில் பணிபுரிகிறார்கள். மாலா தன்னுடைய முதல் கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இருக்கிறார்.
சுரேஷ் தான் ஆரம்பித்தார்.
"டாக்டர் ! மாலா நல்லா தான் இருக்கா.
ஆனா ஒரு சந்தேகம். மாலாவுக்கு பசிச்சுக்கிட்டே இருக்கு. ஒரு நாளைக்கு ஐந்து தடவை, ஏழு தடவை கூட சாப்பிடறா டாக்டர்! . இவளுடைய சாப்பாடு இரண்டு மடங்கு ஆயிடுச்சு. ஏதாவது பிரச்னையா? சுகரா இருக்குமா? இப்படி சாப்பிடுவதால் வெயிட் ரொம்ப அதிகமாயிட்டா, பேபி வெயிட் ரொம்ப ஜாஸ்தி ஆகுமா?
என் ஆலோசனை:
கர்ப்ப காலத்தில் ஏராளமான ஹார்மோன் மாற்றங்கள் கர்ப்பிணி தாயின் உடலில் ஏற்படுகின்றன. அவை உடலில் ஏற்படும் ரத்த அளவு அதிகரித்தல், நுரையீரல் மற்றும் ஜீரண உறுப்புகளின் வேலை அதிகரிப்பு, இதயத்தின் வேலை அதிகரிப்பு போன்ற மாற்றங்களுக்கு காரணமாகின்றன. இதற்கு ஏற்றார் போல தேவைப்படும் கூடுதலான கலோரிகளுக்கு ஏற்ப பசியை அதிகமாக்குகின்றன. முக்கியமாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரான் ஹார்மோன்கள் , மிகவும் சிறிதாக நூறு கிராமுக்குள்ளாக இருக்கும் கர்ப்பப்பையை ஒரு கிலோவுக்கும் அதிகமாக அளவு வளர்ச்சி அடைய வைக்கின்றன. ஒரே ஒரு செல்லில் இருந்து உருவாகும் கரு முழுமையாக வளர்ச்சி அடைந்து 3 கிலோ அளவுள்ள முழு குழந்தையாக தேவையான எல்லா சத்துக்களும் தாயின் உடலிலிருந்தே பெறப்படுகிறது.
அதற்கு தேவையான அளவு கலோரிகளை பெற ,உடலில் உள்ள பசி தூண்டும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், நம் பசியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கிறது.
Also Read : பெண்குயின் கார்னர் 63 | கர்ப்ப காலத்தில் சுகர் வருமா? டெஸ்ட் தேவையா?
ஒவ்வொருவருடைய உடல் வாகைப் பொறுத்து சிலருக்கு மிக அதிகமாகவும் சிலருக்கு மீடியமாகவும் பசி இருக்கலாம். ஆனால் பொதுவாக முதல் மூன்று மாதங்களில் வாந்தி , குமட்டலால் அந்த அளவுக்கு உணவு உண்பதற்கு முடியாமல் போகலாம். நான்காவது மாதத்தில் இருந்து பசி அதிகமாக இருப்பதையும் அதிகமான அளவு உணவு உண்பதையும் நம்மால் தெளிவாக காண முடியும். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் தேவைக்குரிய மாற்றமே. இதைக்கண்டு பயப்படத்தேவையில்லை.
மாலா.. " டாக்டர் ! இனிமே நான் நிம்மதியாக சாப்பிடலாம், ரொம்ப தேங்க்ஸ்! என்று விடைபெற்றார்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Pregnancy changes, Pregnancy diet, பெண்குயின் கார்னர்