உங்கள் கவலைகளை எழுதுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்..! - ஆய்வு

மன அழுத்தம் | Stress

உங்கள் பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே பூட்டி வைப்பதால் உங்களுக்கு சைக்கலாஜிக்கல் ரீதியான பிரச்சனைகளை அதிகப்படுத்துமாம்.

  • Share this:
எழுதுவதால் நம் மன அழுத்தம் குறைந்து நம் மனம் ஆரோக்கியம் பெறும் என கார்டிஃப் மெட்ரோபோலியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் எழுதுவதால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என அவருக்கு தெரியவந்துள்ளதாம்.

உங்கள் பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே பூட்டி வைப்பதால் உங்களுக்கு சைக்கலாஜிக்கல் ரீதியான பிரச்சனைகளை அதிகப்படுத்துமாம். ஆனால் எழுதுவதன் மூலம் உங்கள் பிரச்சனைகளை சுதந்திரமாக, எந்த வித சிக்கலும் இன்றி, பாதுகாப்பாக வெளிப்படுத்த முடியும். இதன் காரணமாக உங்கள் மன அழுத்தம் குறையும். பொதுவாக மன அழுத்தம் குறைய மனசு விட்டு பேசுங்கள் என்பார்கள். ஆனால் அப்படி நாம் பேசும் நபர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். நாம் சொல்வதை அவர் யாரிடமும் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கான சாத்தியங்கள் மிக குறைவு. ஆனால் எழுதுவதன் மூலம் அந்த சிக்கல்களை தவிர்க்க முடியும்.

தங்களைப் பற்றி சுய புரிதல் கொள்வது என்பது, நம் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழி. சுய புரிதல் என்பது நம்மை பற்றிய, அல்லது நம் உள்ளே மனதை நோக்கி கவனம் செலுத்துவதாகும். அதாவது நம் எண்ணம், உணர்வுகள், செயல்பாடு உள்ளிட்டவற்றை கவனிப்பதாகும். ஒருவருக்கு தங்களைப் பற்றிய சுய புரிதல் என்பது பல வழிகளில் அவருக்கு உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் நம்பிக்கையை அது அதிகரிக்கும். நம்மை ஊக்குவிக்கும். நம் வேலையில் திருப்தி ஏற்படுத்தி, நம்மை இன்னும் அதிகமாக உழைக்க வைத்து, பணியில் நல்ல நிலமைக்கு கொண்டு செல்லும்.



மேலும் நம்மை கட்டுப்படுத்த உதவி, எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உதவும். நம்மை பற்றிய புரிதல் என்பது தொடர் பயிற்சியின் மூலம் நம்மால் சாத்தியப்படுத்தக் கூடியது. நம்மைப் பற்றிய சுய புரிதலை தினமும் தொடர்ந்து எழுதுவதன் மூலம் அறியலாம். மேலும் எழுதியதை அடிக்கடி படிப்பதன் மூலம் நம் எண்ணம், உணர்வுகள், நடத்தை ஆகியவை குறித்து நல்ல புரிதலை பெறலாம். சுய புரிதலை பெறுவதற்கு மூன்று விதமான எழுத்து முறை இருக்கிறது.

வெளிப்படையாக எழுதுதல் (Expressive Writing )

மக்கள் தங்கள் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறைக்கு காரணமான எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவை குறித்து எழுதுவது தான் வெளிப்படையாக எழுதுதல் ஆகும். இதன் மூலம் சுய புரிதல் ஏற்படும். மன அழுத்தம், கவலை அளிக்கக் கூடிய சிந்தனை ஆகியவற்றைக் குறைக்கும்.

Coronavirsu : கோவிட் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு அறிகுறிகள்.!

பிரதிபலிப்பு எழுத்து (Reflective Writing)

இந்த முறை எழுத்தானது டாக்டர்கள், நர்ஸ், ஆசிரியர்கள், சைக்காலஜிஸ்ட், சமூக பணியாளர்கள் ஆகியோருக்கு அவர்கள் பணி செய்ய பெரிதும் உதவும். கற்றல் மற்றும் மேம்பாட்டிற்காக மேற்சொன்ன பணியாளர்கள் தங்கள் செயல்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படையாக மதிப்படுவதே ஆகும். இந்த வகை எழுத்தில் பணியாளர்கள் தங்களைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். மனம் திறந்து எழுத வேண்டும். இதனால் அவர்களுக்கு தங்கள் அனுபவங்களில் இருந்தும், உரையாடல்களில் இருந்தும் கற்றுக்கொள்ள உதவி செய்து, அதன் நம்மைப் பற்றிய சுய புரிதலை அதிகரிக்கும். இதனால் பணி சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும் உதவி புரிந்து, நாம் மேற்கொள்ளும் பணியின் தரத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக நம் மன ஆரோக்கியம் அதிகரிக்கும்.



கிரியேட்டிவ் எழுத்து

அதாவது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதுவது ஆகியவை கிரியேட்டிவ் எழுத்தாக குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் நம் கற்பனை வளம், நினைவுகள் மூலம் நம் கருத்துக்களை வெளிப்படுத்த உதவும். அதாவது நம் உணர்வுகள்,கருத்துக்கள், நம்பிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள கிரியேட்டிவ் எழுத்து உதவும். உதாரணமாக, அறிவியல் புனைவு எழுதும்போது சுற்றுச்சூழல் குறித்த உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். குழந்தைகள் குறித்த கதையில் நட்பு பற்றிய உங்கள் எண்ணங்களை தெரிவிக்கலாம். மேலும் ஆந்தை பற்றிய ஒரு கவிதையில் உங்களது தூக்கமின்மையை ஒப்பிட்டு எழுதலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி எழுத்து என்பது உங்களை கேள்வி எழுப்பி, உங்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்தி உங்களைப் பற்றி உங்களுக்கே புரிதல் அளிக்கும். தினமும் 15 நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்களை பற்றிய புரிதல் பெற்று உங்கள் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். பிறகென்ன கையில் பேனாவை எடுங்கள் . வாழ்த்துகள் !

 
Published by:Sivaranjani E
First published: