Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 11 : குழந்தையிலிருந்தே இதய பாதிப்பு இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாமா..? மருத்துவரின் பதில்

பெண்குயின் கார்னர் 11 : குழந்தையிலிருந்தே இதய பாதிப்பு இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாமா..? மருத்துவரின் பதில்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

எக்கோ பரிசோதனையில் இதயத்தில் எந்தவிதமான மாறுதல்களோ, குறைபாடுகளோ இல்லை என்பதை அறிந்து கொண்டால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை, கர்ப்ப காலத்தில், பிரசவ சமயத்தில் சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
லலிதா அரசு பணியில் இருப்பவர் அன்று பணியை முடித்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு வந்திருந்தார். 30 வயது.

"டாக்டர்!!!! உங்களுடைய யூடியூப் வீடியோக்களை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இதுவரை யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை. உங்களிடம் பேசினால் தெளிவாகும் என்று தோன்றியது" என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கைபேசியின் ஒரு நல்ல உபயோகமாக உருப்படியான உண்மைகள் தேவையானவர்களுக்கு போய் சேருகின்றன. "பாராட்டுதலுக்கு மிக்க நன்றி லோலிதா!!! சொல்லுங்கள். உங்கள் சந்தேகக்கணைகளை தொடுங்கள்!" என்றேன்.

டாக்டர் குழந்தையாக இருக்கும்போது எனக்கு இதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான எந்தவிதமான மருத்துவமனை சீட்டுகளும் என்னிடம் இல்லை. இதுவரை எந்தவிதமான பிரச்சனைகளையும் நான் சந்திக்கவில்லை. இப்பொழுது திருமணத்திற்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு திருமண வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் வருமா? குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? மாப்பிள்ளை வீட்டாரிடம் என்னுடைய அறுவை சிகிச்சையை தெரிவிக்கலாமா? இதுதான் என்னுடைய சந்தேகங்கள் என்றார். சரி, ஒவ்வொன்றாக பார்ப்போம்.

சிறுவயதில் இதயத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சை எதற்காக இருக்கும் டாக்டர்?

இரண்டு பிரச்சினைகள் சிறு வயதில் இருக்கலாம் அதை PDA (பேட்டன் டக்டஸ் ஆட்ரியோசிஸ்) மற்றும் ASD(ஏட்ரியல் செப்டல் டிவெக்ஃட்)இந்த இரண்டு பிரச்சினைகளுக்காக ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கலாம். இந்தக் குறைபாட்டிற்கான இருதய அறுவை சிகிச்சை பூரணமாக இருக்கும். முழுமையாக இருதயத்தை குணப்படுத்தி, நாளடைவில் ஆரோக்கியமான இருதயத்தின் பெற்றுவிடும் . அதனால் அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் இருப்பதில்லை.

அது தவிர TOF போன்ற சிக்கலான இருதய குறைபாடுகளுக்கும் ஆப்ரேஷன் செய்யப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு முழுமையான குணம் கிடைக்காது. ஆனால் அதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யும் பொழுது தொடர்ந்து மருத்துவரிடம் கண்காணிப்பில் இருக்க வேண்டிய தேவை இருக்கும். வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். , அடிக்கடி நெஞ்சில் சளி தொற்று அல்லது வேறு ஏதாவது ஒரு தோற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். சில தொற்று ஏற்படாமல் இருக்க கூடிய மருந்துகளையும் பரிந்துரை செய்து இருப்பார்கள்.ருமாடிக் ஆர்த்ரைடிஸ் என்ற இதய வாதநோய் குழந்தைப்பருவத்தில் தாக்கலாம். இந்த நோய் தொண்டையில் ஆரம்பித்து கை கால் மூட்டுகளை லேசாக பதம் பார்த்து இதயத்தை மொத்தமாக சிதைத்துவிடும். முக்கியமாக இருதயத்திலிருந்து வெளியேறக் கூடிய உடலுக்கு செல்லக்கூடிய ரத்தத்தின் உடைய அளவு குறைந்து அவர்களுக்கு கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் சிக்கல்கள் உண்டாகலாம்.

சில சமயங்களில் ரத்த ஹீமோகுளோபின் அளவு பல வருடங்களுக்கு தொடர்ந்து குறைவாகவே இருக்கும் பொழுதும் அவர்களுடைய இருதயம் பலவீனமடையும்.

பெண்குயின் கார்னர் 10 : திருமணத்திற்கு முன்பு இந்த தடுப்பூசியெல்லாம் கட்டாயம் போடனுமா..? மருத்துவரின் பரிந்துரை

இதயத்தில் பிரச்சனை இருக்குமென்றால் எந்த அறிகுறிகள் உண்டாகும் டாக்டர்?

பொதுவாக இருதய நோய்க்கான அறிகுறிகளாக பார்ப்பது மூச்சு விட சிரமம் நெஞ்சில் படபடப்பு மூச்சு வாங்குதல் எளிதில் சோர்வடைதல் முக்கியமாக மாடிப்படி ஏறுவது அல்லது தொடர்ந்து வேலை செய்கையில் இதுபோன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.

வெளுப்புத்தன்மை மற்றும் கை விரல் நகங்கள் வீங்குதல், அதிகமாக வேலை செய்தால் விரல்களும் கை கால் விரல்கள் நீலநிறமாதல் போன்றவை உண்டாகலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு இதிலும் மாறுதல்கள் இருக்கலாம்.என்ன பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

ECG , X ray நெஞ்சுக்கூடு , ரத்தத்தில் பொதுவான பரிசோதனைகள், -- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மற்றும் சிறுநீரகத்தின் வேலை கல்லீரலின் வேலை, சர்க்கரை, தைராய்டு மற்றும் கொழுப்பு சத்து, சிறுநீரில் உப்பு சர்க்கரை மற்றும் தொற்று,

இருதயத்தின் ஸ்கேன் பரிசோதனை எக்கோ (ECHO) என்று கூறுவர். அதில் துல்லியமாக இருதயத்தின் ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு வால்வையும் பரிசோதிக்கும்போது ஏதேனும் ஓட்டை இருக்கிறதா அல்லது வால்வு சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். அதுபோல இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லக்கூடிய ரத்தம் சரியாக செல்கிறதா, அதனுடைய ரத்த அழுத்தம் போன்றவையும் முக்கியம்.

பெண்குயின் கார்னர் 9: சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? மருத்துவரின் விளக்கம்

என்ன என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

முக்கியமாக எக்கோ பரிசோதனையில் இதயத்தில் எந்தவிதமான மாறுதல்களோ, குறைபாடுகளோ இல்லை என்பதை அறிந்து கொண்டால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை, கர்ப்ப காலத்தில், பிரசவ சமயத்தில் சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எக்கோ பரிசோதனையில் ஏதேனும் பிரச்சினை இருக்குமெனில், அவர்களுடைய ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜனை எந்த அளவுக்கு பாதிக்கிறது??? என்பதைப்பொறுத்து கர்ப்ப காலத்திலும் பிரசவ சமயத்திலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தாம்பத்திய உறவில் எந்த சிக்கலும் இருக்காது.

எப்படி இருந்தாலும் லலிதா நீங்கள் மேற்சொன்ன பரிசோதனைகளை முடித்து கொண்டு இதய நோய் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்து உங்களுடைய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாப்பிள்ளை வீட்டாரிடம் உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து இருப்பதை தெரிவித்து விடுங்கள்.

வெற்றிகரமான மணவாழ்க்கை அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!

மன திருப்தியுடன் புன்னகையுடனும் விடைபெற்றார் லோலிதா.
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease, Heart health, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி