'சிலுசிலுவென காற்று
ஜிலுஜிலுவென நட்சத்திரங்கள்'.
இதென்ன நான் கவிதையே எழுதி விடுவேன் போலிருக்கிறதே!!!
சிரித்தாள் சஹானா!!
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் 29 வயது யுவதி சஹானா!! அம்மா, அப்பா,விருப்பப்படி திருமணம் . நேற்றுதான் பையன் வீட்டார் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு உறுதி செய்தார்கள். ஏராளமான எண்ணக்குமிழ்கள் மனதில். பல சந்தோஷமாகவும் சில சந்தேகமாகவும் .
அலுவலகத்தில் நடுவில் கிடைத்த இடைவெளியில் தோழிகளுடன் பேசும்போது " இர்ரேகுலர் பீரியட்ஸ்னா ,உனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கும், குழந்தையே பிறக்காதுடி!!! ". ஆளாளுக்கு சகட்டுமேனிக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளி விட்டனர். இப்போது சந்தேகக்குமிழ்கள் பெரிதாகி சந்தோஷத்தை மறக்கடித்தன. அடுத்த நாள் மருத்துவரை சந்திப்பதற்கு முடிவு செய்தாள்.
அறிமுகத்திற்கு பிறகு எங்கள் உரையாடல்:
சஹானா: டாக்டர் !!!! எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு. பீரியட்ஸ் ரெகுலரா இருக்காது. எனக்கு ப்யூச்சர்ல ஏதாவது பிரச்சனை வருமா?? பயமா இருக்கு மேம்!!
நான்: எத்தனை நாளைக்கு ஒரு தடவை பீரியட்ஸ் வரும் ??லாஸ்ட் வந்த ரெண்டு பீரியட்ஸ் டேட் ஞாபகம் இருக்கா???
சஹானா: சேம் டேட்டில் வராது டாக்டர். எப்பொழுதும் ஒரு செவன் டேஸ் வரைக்கும் டேட் மாறும்.
நான்: ஒரு வாரம் வரை பீரியட்ஸ் டேட் மாறிவருவது ஒன்னும் பிரச்சனை இல்ல.
சஹானா: எனக்கு பிசிஓடி பிரச்சினை இருக்குமா? இரண்டு வருடத்திற்கு முன்னால் ஸ்கேன் செய்தப்ப எனக்கு நீர் கட்டி இருப்பதாக சொன்னாங்க.
நான்: ஸ்கேன்ல முட்டைப்பைல சின்ன சின்ன நீர்க்கட்டிகள் போல தெரியறது நோய் கிடையாது. இதை" பாலிசிஸ்டிக் ஓவரி" அப்படின்னு சொல்வோம். சாலையில் போகிற ஒரு பத்து பேரை கூப்பிட்டு ஸ்கேன் பண்ணி பார்த்தா அதுல மூணு பேருக்கு இந்த நீர்க்கட்டி மாதிரியான தோற்றம் முட்டைப் பையில் இருக்கும். ஆனா அது ஒரு நோய் கிடையாது. பெரும்பாலும் அதனால மட்டுமே எந்த கோளாறும் வருவதில்லை. ஆனால் அதிகமான எடை, மாதத்தீட்டு பல மாதங்களாக வராமல் இருக்கிறது மற்றும் முகத்தில் ஆண்களுக்கு இருப்பது போல முடி வளர்வது போன்றவை "பாலிசிஸ்டிக் ஓவரி"யோட சேர்ந்து இருக்கும் பொழுது அது "PCOD" ன்னு சொல்வோம். சரியான சிகிச்சை எடுத்தால் குணமாக்க முடியும்.
சஹானா: எனக்கு குழந்தை பிறக்கறதுல எதுவும் பிரச்சனை வருமா டாக்டர்??
நான்: ஸ்கேன் பண்ணி பார்க்கலாம்.
சஹானாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் முட்டைப் பையில் சில நீர்க்கட்டிகள் இருந்தன. வேறு எதுவும் இல்லை.
நான்: உங்களுக்கு கட்டாயமா குழந்தை பிறக்கும் சஹானா!! கவலைப்படாதீங்க!!.
சஹானா: ரொம்ப நன்றி. என்னுடைய சந்தேகம் எல்லாம் தெளிவாகிடுச்சு.
முகத்தில் சந்தோஷ ரேகைகள் மீண்டும் தெரிய சஹானா கல்யாண தயாரிப்புகளில் இறங்கினாள்.
-----_தொடரும் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.