முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஒமேகா 3 : எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஒமேகா 3 : எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட டயட் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட டயட் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட டயட் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

  • 2-MIN READ
  • Last Updated :

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் PCOS நோய் பாதிப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. PCOS அல்லது பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்பது 12 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவதை குறிக்கும். அதேபோல வேறு சில காரணிகளால் இது கருவுறுதல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட டயட் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் ஒருவர் தனது எடையை சீராக பராமரிக்கவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தவும் முடியும். அந்த டயட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள உணவு மூலங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து பேசிய பெங்களூரு (ஒயிட்ஃபீல்ட்) கிளவுட்னைன் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் நிர்வாக-ஊட்டச்சத்து நிபுணர் நினா மரியா சல்தன்ஹா, PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கினார்.

அவர் கூறியதாவது, "ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியமானவை என்று நம்பப்படுகிறது. இந்த அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும், உடல் எடையை குறைக்கவும், ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் கருவுறுதல் வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதுதவிர, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தை போக்கவும், மனநல கோளாறுகளை குணப்படுத்தவும் உதவுகின்றன. சரி ஒமேகா-3 சாது நிறைந்துள்ள உணவுகள் என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் உணவு மூலங்கள்:

* ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் பருப்புகள், கனோலா எண்ணெய் மற்றும் பிற வலுவூட்டப்பட்ட உணவுகள் போன்ற சைவ ஆதாரங்கள்.

* சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற அசைவ உணவுகள் மற்றும் வலுவூட்டப்பட்ட முட்டைகள்.

* ஓரல் சப்ளிமெண்ட்ஸ்

மேலும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் நட்ஸ், உலர்ந்த பருப்புகள்,விதைகள், உலர் பழங்கள் போன்றவற்றை ஒன்றாக கலந்து சாப்பிடலாம். அல்லது அவற்றை ஸ்மூத்தியாக செய்து சாப்பிடலாம். சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல வலுவூட்டப்பட்ட எண்ணெய்யை உணவு சமைக்கும் போதும், சாலட்கள் செய்யும்போதும் சேர்த்துக்கொள்ளலாம். வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் உணவுகளை அப்படியே சமைத்து சாப்பிடலாம் அல்லது மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்

இதேபோல ஒமேகா-3 நிறைந்த அசைவ உணவுகளையும் விதவிதமாக செய்து சாப்பிடலாம். மீனை வறுத்தோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். சூப் அல்லது ஸ்டூவாக கூட செய்து சாப்பிடலாம். வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம். இது உணவில் புரதங்கள் மற்றும் நல்ல அத்தியாவசிய கொழுப்புகளை இணைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். சைவம், அசைவம் தவிர ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை ஓரல் சம்ப்ளிமெண்ட்ஸ் வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

மனநிலையை கட்டுப்படுத்தும்: ஹார்மோன்களின் அதிக ஏற்ற இறக்கங்கள் காரணமாக, நீங்கள் மனநிலை மாற்றங்களை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த ஒமேகா 3 உதவுகிறது.

வீக்கம் மற்றும் கொழுப்பு கல்லீரலைக் குறைக்கிறது: பிசிஓஎஸ் உள்ள பெரும்பாலான மக்கள் கொழுப்பு கல்லீரல் காரணமாக அதிக எடையுடன் இருப்பதைக் காணலாம். ஒமேகா-3 ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், கல்லீரலில் வீக்கத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது.

ஆண்களை காட்டிலும் பெண்களிடையே பக்கவாதம் , மாரடைப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது : ஆய்வு

ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது: தினசரி உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை

சாப்பிடும் போது, அது உங்கள் ட்ரைகிளிசரைடு அளவையும், எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவையும் குறைக்க உதவும். மேலும் இது உங்கள் HDL (நல்ல கொழுப்பு) அளவை அதிகரிக்க உதவும்.

ஆண்ட்ரோஜன் அளவுகளைக் குறைக்கிறது: இது முகப்பரு மற்றும் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது, கூடுதலாக முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் பாலியல் உந்துதலை அதிகரிக்கிறது.

கருவுறுதலை மேம்படுத்துகிறது: நல்ல அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் பெண்கள் கரு முட்டையின் தரத்தை மேம்படுத்தவும், அண்டவிடுப்பின் ஒட்டுமொத்த கருவுறுதலுக்கும் சிறந்த முடிவுகளைக் கொடுக்கும், இது கர்ப்பத்தின் வெற்றிகரமான முடிவுக்கு உதவும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் இன்றியமையாதவை. ஏனெனில் மேற்கூறிய நன்மைகளுக்கு கூடுதலாக; இது குழந்தைக்கு மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சரியாக உட்கொண்டால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி அவற்றை எப்படி, எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

First published:

Tags: Omega 3, PCOS, PCOS Diet, Periods