ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாத்திரைகள் PCOS- ஐ குணப்படுத்தாதா..? 7 கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

மாத்திரைகள் PCOS- ஐ குணப்படுத்தாதா..? 7 கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்)

பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்)

மருத்துவர்களின் கூற்றுபடி, , 20% ஆரோக்கியமான பெண்களில் பாலிசிஸ்டிக் கருப்பைகள் அதிகமாக உள்ளன. மறுபுறம், PCOS உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் சோனோகிராஃபியில் நீர்க்கட்டிகள் இருப்பது இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்பது இன்றைய பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளில் ஒன்றாகும். பத்து பெண்களில் குறைந்தது மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கண்டறியப்பட்ட பத்து பெண்களில் ஆறு பேர் பதின்வயதினர் என்ற அதிர்ச்சி தகவல்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பிசிஓஎஸ் என்பது வாழ்க்கை முறை நோய்க்குறியாகும், இதில் முறையற்ற மாதவிடாய், குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு, முகப்பரு, உடலில் அதிகமாக முடி வளர்தல், எடை அதிகரிப்பு, மற்றும் தோல் கருமையாதல் மற்றும் அதிக இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிகப்படியான ஆண் ஹார்மோன்கள் உள்ளிட்ட ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் அடங்கும். சில அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், பல இளம் பெண்களுக்கு PCOS க்கு பதிலாக PCOD இருப்பது தவறாக கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக, PCOS பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன.

கட்டுக்கதை 1: PCOS உள்ள அனைத்து பெண்களுக்கும் நீர்க்கட்டி இருக்கும்?

மருத்துவர்களின் கூற்றுபடி, , 20% ஆரோக்கியமான பெண்களில் பாலிசிஸ்டிக் கருப்பைகள் அதிகமாக உள்ளன. மறுபுறம், PCOS உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் சோனோகிராஃபியில் நீர்க்கட்டிகள் இருப்பது இல்லை.

கட்டுக்கதை 2: PCOD கருப்பைகள் வயிற்று வலியை ஏற்படுத்துகின்றன:

PCOD என்பது கருப்பையில் உருவாகும் சிறிய நீர்க்கட்டிகள் ஆகும். கருப்பையின் சுற்றளவில் முத்து நெக்லஸ் வடிவத்தில் உருவாகின்றன. அவை எந்த அசௌகரியத்தையும் வேதனையையும் ஏற்படுத்தாது. வலியை ஏற்படுத்தும் கருப்பை நீர்க்கட்டிகள் குறைந்தது மூன்று சென்டிமீட்டர் விட்டம் கொண்டவை மற்றும் PCOD இல் கண்டறியப்படவில்லை.

கட்டுக்கதை 3: PCOS அதிக எடை கொண்ட பெண்களை மட்டுமே பாதிக்கிறது:

மாறி வரும் மோசமான வாழ்க்கைமுறை காரணமாக பிசிஓஎஸ் உள்ள பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. பிசிஓஎஸ் பெண்களில் 80% முதல் 85% வரை அதிக எடை கொண்டவர்கள். சாதாரண எடை கொண்ட மற்றும் குடும்ப வரலாற்றில் ஏற்கனவே பிசிஓஎஸ் பிரச்சனைகளைக் கொண்ட பெண்களைத் தாக்கும்.

டைட்டாக ஜீன்ஸ் அணிவதால் கேன்சர் ஆபத்தா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

கட்டுக்கதை 4: முகப்பரு உண்டாக பிசிஓஎஸ் காரணம்:

முகத்தில் முகப்பரு அல்லது கொப்புளங்கள் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அதில் பிசிஓஎஸும் ஒரு காரணமோ தவிர அதுவே பிரதான காரணம் கிடையாது. முகப்பரு உருவாக தோல் பிரச்சனைகள், ஒவ்வாமை, பொடுகு தொல்லை என பல பிரச்சனைகள் உள்ளன.

கட்டுக்கதை 5: மருந்துகள் PCOS ஐ குணப்படுத்தும்:

மலட்டுத்தன்மை அல்லது மாதவிடாய் முறைப்படுத்தல் போன்ற தேவையான சிகிச்சையைப் பொறுத்து, PCOS இன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த மருத்துக்கள் அடிப்படை சிக்கலை தடுக்காது என்பதால், முழுமையாக குணப்படுத்தக்கூடியது அல்ல. PCOS என்பது ஒரு வாழ்க்கைமுறை நோயாகும், இது வழக்கமான உடற்பயிற்சி, உணவுமுறை மாற்றங்கள் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படலாம்.

மாதவிடாய் சுகாதார தினம்: பீரியட்ஸ் நாட்களில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

கட்டுக்கதை 6: உடல் எடையை குறைப்பது PCOS ஐ முற்றிலும் குணப்படுத்தும்:

PCOS என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நோயாகும். ஹைப்பர் இன்சுலினீமியா மற்றும் கூடுதல் ஆண் ஹார்மோன்களைக் குறைப்பதுடன், எடை குறைப்பும் 10 சதவீத அறிகுறிகளை குறைக்க உதவும்.

கட்டுக்கதை 7: PCOS பெண்களுக்கு கருத்தரிப்பதை கடினமாக்குகிறது:

பிசிஓஎஸ் பெண்களுக்கு கருத்தரிப்பதை கடினமாக்குகிறது, ஏனெனில் இது அனோவுலேஷன் ஏற்படுகிறது, இது ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை உற்பத்தியைத் தடுக்கிறது, ஆனால் அதை முற்றிலும் தடை செய்யாது. பிசிஓஎஸ் பெண்களுக்கு ஒழுங்கற்ற மற்றும் தாமதமான அண்டவிடுப்பை ஏற்படுத்துகிறது, ஆனாலும் அவர்கள் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: PCOS, Women Health