கடந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த சிக்கல்கள் மற்றும் கருவுறாமை பிரச்சனைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் எனப்படும் PCOS இருக்கிறது.
PCOS முழு உடலையும் பாதிக்கிறது என்றாலும் நீண்ட நாட்கள் இதை கவனிக்காமல் விட்டால் குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். இனப்பெருக்க ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் PCOS ஏற்படுகிறது. ஹார்மோன்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வு கருப்பையிலும் பிரச்சனைகளை உருவாக்குகிறது மற்றும் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
தற்போது பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான ஹார்மோன் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை காரணமாக 10 பெண்களில் குறைந்தது 3 பேராவது PCOS-ஆல் பாதிக்கப்பட்டு உள்ளனர். PCOS நிலை உள்ளவர்கள் பால் மற்றும் பால் பொருட்கள், பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற சிலவற்றை தங்கள் லைஃப் ஸ்டைலிலிருந்து நீக்க வேண்டும். PCOS உள்ள பெண்கள் ஏன் பர்ஃப்யூம்ஸ்களை (வாசனை திராவியங்கள்) தங்கள் வாழ்விலிருந்து விலக்க வேண்டும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
வாசனை திரவியங்கள் பெண்களுக்கு தீமை செய்பவை. ஏனெனில் இவற்றில் பெரும்பாலானவை ட்ரைக்ளோசன் (TCS)எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட குளோரினேட்டட் நறுமண கலவையை கொண்டவை. Triclosan பர்சனல் கேர் மற்றும் வாசனை சோப்புகள், ஷாம்பு, பற்பசை மற்றும் திரவ கிருமிநாசினிகள் போன்ற வீட்டுப் பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா.? இந்த உணவுகளை முயற்சித்து பாருங்கள்.!
இந்த Triclosan மற்றும் PCOS சிக்கல் இரண்டுக்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்பதை விளக்குகிறார் பிரபல மருத்துவர் மோனிகா சிங். விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் , ஈஸ்ட்ரோஜெனிக், ஆண்ட்ரோஜெனிக் மற்றும் ஆன்டிஆண்ட்ரோஜெனிக் செயல்பாடுகள் மற்றும் தைராய்டு ஹார்மோன் செயல்பாடுகளின் தொந்தரவு உட்பட பல ஹார்மோன்களின் செயல்பாடுகளை பரிந்துரைத்தன. இவை அனைத்தும் PCOS போன்ற நோய் குறியுடன் தொடர்புடையவை என்றார்.
மேலும் PCOS சிக்கலுக்கு இவை பங்களிக்கும் வாய்ப்புகளையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. இதனை தொடர்ந்து அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA),2016 செப்டம்பர் முதல் வீட்டு பயன்பாடுகளுக்கான சோப்பு பொருட்களில் ட்ரைக்ளோசன் உள்ளிட்ட18 ஆண்டிமைக்ரோபியல் கெமிக்கல்களை சேர்க்க கூடாது என தடை செய்தது. எனினும் ட்ரைக்ளோசன் கலக்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துவதில் இந்தியாவில் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை பர்ஃப்யூம்ஸ் எவ்வாறு PCOS உடன் இனிக்கப்பட்டுள்ளது என்பதை பகிர்ந்து கொண்டுள்ள மற்றொரு பிரபல மருத்துவர் டாக்டர் குஞ்சன் குப்தா, நம் உடலில் FSH மற்றும் LH உள்ளிட்ட சில ஹார்மோன்கள் உள்ளன, இவற்றுக்கிடையே சரியான பேலன்ஸ் இருக்க வேண்டும். இதனிடையே பர்ஃப்யூம்ஸ் நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும் கெமிக்கல்கள் உள்ளன. இவை FSH மற்றும் LH க்கு இடையிலான ஹார்மோன் பேலன்ஸை சீர்குலைக்கின்றன. இதன் விளைவாக PCOS போன்ற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிகின்றன.
இத்தகைய பர்ஃப்யூம்ஸ்களை பயன்படுத்தும் நோயாளிகளுடன் ஒப்பிடும் போது, பயன்படுத்தாதவர்களுக்கு PCOS பாதிப்பு சற்று குறைவாக இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே செயற்கை வாசனை கொண்ட எந்த வாசனை திரவியமும் பாதுகாப்பானது என்று கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.