ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS விழிப்புணர்வு வாரம் : PCOS என்றால் என்ன? பெண்களுக்கு பொதுவாக எழும் கேள்விகளும்..பதில்களும்...

PCOS விழிப்புணர்வு வாரம் : PCOS என்றால் என்ன? பெண்களுக்கு பொதுவாக எழும் கேள்விகளும்..பதில்களும்...

PCOS-க்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்

PCOS-க்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்

PCOS-க்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுவாக இனப்பெருக்க வயது பெண்களை பாதிக்கும் ஹார்மோன்களின் மாற்றமாகும். இது குறித்து பெண்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். PCOS-க்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்

பிசிஓஎஸ் (PCOS) என்றால் என்ன?

கருப்பைகளுக்குள் இருக்கும் ஆண்ட்ரோஜன்கள் நீர்க்கட்டிகளை ஏற்படுத்துகிறது. இவை கருப்பைகளுக்குள் பெரிதாகி, முட்டைகளைச் சுற்றி பல நுண் குமிழ்களை உருவாக்கி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன. இது ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தி, ஆண்ட்ரோஜன்கள், இது கருப்பையில் நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படும் பல திரவத்தால் நிரப்பப்பட்ட சாக்குகளால் வகைப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கருப்பைகள் பெரிதாகி, முட்டைகளைச் சுற்றியுள்ள பல நுண்குமிழ்களைக் கொண்டிருக்கின்றன, இது ஒரு ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகள், முகப்பரு, முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

PCOS-க்கு என்ன காரணம்?

இதற்கு தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், சிறு வயதில் ஏற்படும் உடல் பருமன் பி.சி.ஓ.எஸ்க்கு முக்கிய காரணம் என கூறுகின்றனர்.

பெண்களை வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?

ஆண்ட்ரோஜன் அளவுகள் அதிகரிக்கும்போது முடி உதிர்தல் மற்றும் முகத்தில் முடி வளர்தல் அதிகமாகும். இது ஒரு பெண்ணின் முக அழகை பாதிப்பதால் மன உளைச்சலை ஏற்படுத்தும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சர்க்கரையின் அளவுகளும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இதனால் பெண்களிடையே மன நிலை மாற்றங்கள், எரிச்சல், பதட்டம் உருவாகும்.

உடல் பருமனின் பங்கு என்ன?

அதிக எடை இருக்கும் பெண்கள் அதிகமாக பி.சி.ஓ.எஸ் பாதிப்பை எதிர்கொள்வது பொதுவானதாக இருக்கிறது என்றாலும், மெலித்த உடலமைப்பை கொண்ட பெண்களும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஒப்பீட்டளவில் உடல் பருமன் இருக்கும் பெண்களே, பி.சி.ஓ.எஸ் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கின்றனர். உடல் பருமனாக இருக்கும்போது வளர்ச்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றத்தால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

PCOS உள்ளவர்கள் கருத்தரிக்க முயற்சி செய்ய சரியான நேரம் இதுதான்..!

தோல் பிரச்சினைகள் :

பிசிஓஎஸ் உள்ள பெண்களிடம் தோல் பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. ஏனென்றால், ஆண்ட்ரோஜன்கள் அதிகரிப்பு காரணமாக பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்ட்ரோஜன்கள் சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, முகப்பருக்களை உண்டாக்குகிறது. பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருக்கும் பெண்களின் சருமத்தில் செபோரியா, ஹைட்ராடெனிடிஸ் சப்பர்டிவா ஆகிய பிரச்சனைகள் இருக்கும். கழுத்தின் பின்புறம், அக்குகள், மார்பகங்களுக்கு அடியில் இந்த சரும பாதிப்புகளை காணலாம்.

தொற்றுநோய்கள் - பி.சி.ஓ.எஸ் தொடர்பு :

கொரோனா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பி.சி.ஓ.எஸ் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் மன நல கோளாறுகளை எதிர்கொள்வார்கள். வாழ்க்கை முறையில் முடிவு எடுப்பதில் தொடங்கி, உணவு சாப்பிடுவது வரை என அனைத்திலும் ஒரு குழப்பமான மனநிலையுடன் காணப்படுவார்கள்.

பி.சி.ஓ.எஸ் கண்டறிதல்

முறையற்ற மாதவிடாய், தாமதமான மாதவிடாய் பி.சி.ஓ.எஸ் இருப்பதற்கான அறிகுறிகள். ஏற்கனவே கூறியதுபோல் முடி உதிர்தல், முகப்பரு, முகத்தில் முடி வளர்தல் ஆகியவை பி.சி.ஓ.எஸ் பாதிப்பால் ஏற்படும்.

பி.சி.ஓ.எஸ் பெண்கள் கருத்தரிக்க முடியுமா?

பி.சி.ஓ.எஸ் இருக்கும்போது கருத்தரிக்க முடியாது என சிலர் கூறுகின்றனர். இது உண்மையல்ல. கருத்தரிப்பு என்பது சவாலாக வேண்டுமானால் இருக்கலாம். ஹார்மோன் சமநிலையை பேணும்போது கருத்தரிப்பு சாத்தியம். அதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருக்கும் பெண்கள் கருத்தரித்தவர்களும் உண்டு.

சிகிச்சை :

கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் ஹார்மோன்களை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பி.சி.ஓ.எஸ்-ஐ கட்டுப்படுத்த இது நிரந்தர தீர்வு அல்ல. மருத்துவரை அணுகி முறையான சப்ளிமென்ட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாலிசிலிக் அமிலம் / மாண்டெலிக் அமிலத்துடன் லேசான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தலாம். சருமத்தில் கிரீம்கள், மசாஜ் மற்றும் எண்ணெய்களைத் தவிர்ப்பது அவசியம். மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரைப்படி டயட் கடைபிடிக்க வேண்டும்.

பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க...

உணவு முறை :

வாழ்க்கை முறையை முதலில் ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களின் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. பருப்பு வகைகள், முட்டை, மீன், மோர், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உணவில் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :

சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட திண்பண்டங்கள், உணவுப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில பெண்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Irregular periods, Menstruation, PCOD, PCOS, PCOS Diet, Periods