ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

PCOS உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

PCOS

PCOS

காபி அல்லது காஃபின் அடங்கிய பானங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை உயர்த்துகிறது. எனவே காபி குடிப்பது PCOS நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இனப்பெருக்க ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் 10 பெண்களில் இருவருக்கு ஏற்படும் பொதுவான கோளாறாக இருந்து வருகிறது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் எனப்படும் PCOS. இதன் காரணமாக ஏற்படும் சிக்கல்களில் உடல் பருமன், சீரற்ற மாதவிடாய் சுழற்சி, முடி உதிர்வு, கருவுறுதலில் சிக்கல் ஏற்படுவது முதல் இதய நோய்கள், எண்டோமெட்ரிக் கேன்சர், நீரிழிவு நோய், ஹைப்பர் இன்சுலினீமியா போன்ற கடும் நிலைகள் வரை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

PCOS தொடர்பான பல விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் உலா வருகின்றன. இதனால் PCOS பாதிப்புடைய பெண்கள் உண்மையில் டயட்டில் எதை சேர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ரித்திகா சமத்தார் PCOS கொண்ட ஒருவர் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார்.

என்னவெல்லாம் சாப்பிடலாம்?

ஃபைபர் சத்து நிறைந்த உணவுகள்:

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ஃபைபர் சத்து மிக்க உணவுகள் அவர்களின் ரத்த குளுக்கோஸ் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது, அதே நேரத்தில் நச்சுகளை வெளியேற்றுகிறது. அதிக உணவுகள் மற்றும் தேவையற்ற நொறுக்கு தீனி எடுத்து கொள்வதை தடுப்பதன் மூலம் எடை அதிகரிப்பை தடுக்கிறது. ஃபைபர் சத்துமிக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வீக்கத்தைத் தணிக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக்கும்.

சத்தான ஸ்னாக்ஸ்:

கலோரி நிறைந்த ஸ்னாக்ஸ்களை தவிர்த்து பாதாம், ஃபிரெஷ்ஷான சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான ஸ்னாக்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ்களை தினமும் ஹெல்தி ஸ்னாக்ஸாக எடுத்து கொள்ளலாம்.

Also Read : PCOD vs PCOS : பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இடையேயான வேறுபாடுகள் என்ன? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

 அழற்சி எதிர்ப்பு உணவுகள்: PCOS உள்ளவர்களுக்கு அதிக அளவு அழற்சிகள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. PCOS உள்ள பெண்களில் வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்க திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த அழற்சி எதிர்ப்பு உணவுகள் உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அழற்சி எதிர்ப்பு உணவுகளில் பெர்ரி, சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், ப்ரோக்கோலி, அவகோடா, கிரீன் டீ, திராட்சை, தக்காளி, பச்சையிலை கீரைகள், ஆலிவ் எண்ணெய், காளான் , மஞ்சள், ரோஸ்மேரி, இஞ்சி, பூண்டு, துளசி மற்றும் குடைமிளகாய் உள்ளிட்டவை அடங்கும்.

இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள்:

PCOS உள்ள பெண்களுக்கு ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் பல நன்மைகளை கொடுக்கின்றன. எனவே ஃபேட்டி ஃபிஷ் (சால்மன் போன்றவை), நட்ஸ், சீட்ஸ், ஆளி மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை டயட்டில் சேர்க்கவும்.

Also Read : பிசிஓஎஸ் பாதிப்பு பெண்களின் தலைமுடி மற்றும் சருமத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்..?

ஆரோக்கிய ப்ரோட்டின்:

முட்டை, பருப்பு வகைகள், குயினோவா, ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற ஆரோக்கிய உணவுகளில் ப்ரோட்டின் அதிகம் உள்ளது. இது PCOS கொண்ட பெண்களின் எடையை பராமரிக்க பெரிதும் உதவுகின்றன.

என்னவெல்லாம் சாப்பிட கூடாது.?

PCOS சிக்கலால் பாதிக்கப்பட்ட பெண்கள் பின்வரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்...

ரீஃபைன்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் PCOS சிக்கலை இன்னும் மோசமாக்கும். எனவே பிரெட் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற வெள்ளை மாவால் செய்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். அரிசி மற்றும் உருளைக்கிழங்கு நுகர்வை குறைத்து கொள்ள வேண்டும் முடிந்தால் தவிர்க்க வேண்டும்.
வறுத்த உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் எடையை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் நன்கு வறுக்கப்பட்ட உணவுகள் பிசிஓஎஸ் அறிகுறிகளை அதிகரிக்க செய்ய கூடிய அழற்சி உணவுகளாகும்.
பால் மற்றும் பால் பொருட்களில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையிலான கெமிக்கல்கள் உள்ளன. PCOS தீவிரமடைய வழிவகுக்கும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு, ஆண்ட்ரோஜன் உதவும் என்பதால் பால் & பால் பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
காபி அல்லது காஃபின் அடங்கிய பானங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை உயர்த்துகிறது. எனவே காபி குடிப்பது PCOS நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: PCOD, PCOS, PCOS Diet