முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன..?

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன..?

2. சாப்பிட வேண்டிய உணவுகள்: கொட்டைகள், மீன், வெண்ணெய், ஆலிவ் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படும் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவைப் பின்பற்றுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க சிறந்த வழியாகும். அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பவர்களை விட, அதிக கொழுப்புள்ள உணவை உண்பவர்கள் உடல் எடையை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் மூலம் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது.

2. சாப்பிட வேண்டிய உணவுகள்: கொட்டைகள், மீன், வெண்ணெய், ஆலிவ் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படும் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவைப் பின்பற்றுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க சிறந்த வழியாகும். அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பவர்களை விட, அதிக கொழுப்புள்ள உணவை உண்பவர்கள் உடல் எடையை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் மூலம் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது.

இனப்பெருக்க வயதுடைய அல்லது திருமணமான பெண்களில் சுமார் 10% பேர் இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

பிசிஓஎஸ் (PCOS-பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்பது கருப்பை அசாதாரண அளவு ஆண்ட்ரோஜன்களை உற்பத்தி செய்யும் ஒரு நிலை. இது ஒரு வாழ்க்கை முறை நோயாக குறிப்பிடப்படுகிறது. இனப்பெருக்க வயதுடைய அல்லது திருமணமான பெண்களில் சுமார் 10% பேர் இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹார்மோன் சமநிலையின்மை நிலையின் முக்கிய அறிகுறிகளில் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு, தீவிர மனநிலை மாற்றங்கள், முகத்தில் அதிக முடி வளர்வது மற்றும் எடை சார்ந்த பிரச்சனைகள் அடங்கும். ஆரோக்கிய உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தாலும் கூட இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு நிலை எடை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சிக்கல்கள்..

PCOS மேலும் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது என்பதால் கணையம் அதிக அளவு இன்சுலினை உற்பத்தி செய்யக்கூடும். இது ரத்த சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும். கருவுறாமல் இருக்க அல்லது கருத்தரிப்பில் PCOS சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த வாழ்க்கை முறை கோளாறால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த சரியான உணவை எடுத்து கொள்வது முக்கியம். PCOS-ஆல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவ கூடிய குறிப்பிட்ட உணவுமுறை எதுவும் இல்லை. எனவே PCOS-ஐ எதிர்த்து போராட உதவும் சில பொதுவான டயட் பிளானை பார்ப்போம்.

PCOS இருப்பவர்கள் சாப்பிட வேண்டியவை..

குறைந்த அளவு கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை கொண்டவற்றை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவும். டயட்டில் புரோட்டீன்ஸ், ஃபைபர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது சர்க்கரை அளவை மேலும் நிர்வகிக்க உதவும். PCOS கொண்டவர்கள் தங்களது ஒருவேளை டயட்டில் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் கால் பங்கு, புரோட்டீன் கால் பங்கு, மற்றொரு கால் பங்கு மாவுச்சத்துள்ள காய்கறிகள் அல்லது முழு தானியங்கள் என்ற வீதத்தில் சாப்பிடலாம். டயட் அல்லது ஸ்னாக்ஸில் ஏதாவதொரு பழத்தை மிதமான அளவில் சேர்க்கலாம்.

உங்கள் மாமியாருடன் இணக்கமான உறவு ஏற்பட வேண்டுமா..? இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்!

ஃபைபர்..

போதுமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை டயட்டில் சேர்ப்பது ஃபைபர் சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் எடுப்பதை உறுதி செய்யும். இது இன்சுலின் எதிர்ப்பை குறைக்க, வீக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும். மஞ்சள், ரோஸ்மேரி, இஞ்சி, பூண்டு, துளசி உள்ளிட்ட பிற அழற்சி எதிர்ப்பு உணவுகளையும் PCOS உள்ளவர்கள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். டயட்டில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை சேர்ப்பதும் பெரிதும் உதவும்.

PCOS இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை..

வொயிட் சுகர், கூல்ட்ரிங்க்ஸ், மேப்பிள் சிரப்(maple syrup), இனிப்பு வகைகள், மிட்டாய்கள் மற்றும் துரித உணவுகள் உள்ளிட்டவற்றை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. வறுத்த உணவுகள். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ரீஃபைன்டு கார்போஹைட்ரேட்ஸ், கேக்குகள், ஸ்வீட் யோகர்ட் மற்றும் அதிகப்படியான சர்க்கரை கொண்ட ஐஸ்கிரீம்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்டவற்றை PCOS இருப்பவர்கள் தவிர்ப்பது சிறந்தது.

First published:

Tags: PCOS, PCOS Diet