பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பொதுவாக PCOS என கூறப்படுகிறது. இது இனப்பெருக்க வயது பெண்களை பாதிக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது ஒரு சிக்கலான நிலை ஆகும், PCOS பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு கருப்பைகள் விரிவடைகின்றன மற்றும் வெளிப்புற விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகிறது. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் மற்றும் ஆண்ட்ரோஜன் அதிகரிப்பால் ஆண் ஹார்மோன்கள் தோன்றும் நிலை ஏற்படுகிறது.
மேலும் கருப்பைகள் பல நுண்ணறைகள் உருவாகலாம், இதன் விளைவாக கரு முட்டைகள் வெளியிடுவதில் தடை ஏற்படுகிறது. பிசிஓஎஸ் ஹைப்பர்-வீக்கம், குறைந்த வைட்டமின் டி மற்றும் ஹைபராண்ட்ரோஜனிசம் உள்ளிட்ட சில காரணிகளால் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
PCOS - எச்சரிக்கை அறிகுறிகள் :
பிசிஓஎஸ் அறிகுறிகள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் அல்லது தாமதம் ஏற்படுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். பொதுவாக வாழ்க்கை முறை, உணவு மற்றும் உடலைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், ஒருவர் பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்படுகிறார் என்பதை தீர்மானிக்கக்கூடிய சில அடிப்படை அறிகுறிகள் உள்ளன.
* சில நேரங்களில் மாதவிடாய் வராது.
* அதிகப்படியான ஆண்ட்ரோஜன் உற்பத்தி காரணமாக ஆண்களை போல முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் வழுக்கை கூட ஏற்படும். இவை அனைத்தும் ஆண் ஹார்மோன்கள் அதிக அளவு சுரப்பதன் காரணமாக ஏற்படுகிறது
* பாலிசிஸ்டிக் கருப்பைகள் அதாவது அல்ட்ராசவுண்டில் பார்க்கும்போது கருப்பைகளில் பல சிறிய நீர்க்கட்டிகள் சூழப்பட்டிருக்கும்.
* உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை காட்டுகிறது.
பிசிஓஎஸ் அறிகுறிகள் இருந்தால் மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளின் அறியாமை அதை மேலும் மோசமாக்கி மேலும் கருவுறாமைக்கு வழிவகுக்கும். பெண்களில் மலட்டுத்தன்மையைப் பொறுத்தவரை, பிசிஓஎஸ் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் . இதனை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை பெறுவது அவசியமானதாகும்.
ஆபத்து காரணிகள் :
பிசிஓஎஸ் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது பெரும்பாலும் சில மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகிறது. இதில் சில பொதுவான காரணங்கள் அடங்கும். அவை.
PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முடியுமா..? அதற்கான வழிகள் என்ன?
* பரம்பரை - ஏற்கனவே உங்கள் குடும்ப பெண்கள் யாருக்காவது பிசிஓஎஸ் இருந்தால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* அதிகப்படியான இன்சுலின் - குடும்பத்தில் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கும் பிசிஓஎஸ் உருவாக வாய்ப்புள்ளது. ஏனெனில் அதிகப்படியான இன்சுலின் அண்டவிடுப்பின் செயல்பாட்டைத் தடுக்கிறது
* உடல் பருமன் - அதிக உடல் எடை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக PCOS ஏற்படுகிறது.
* உடற்பயிற்சி - தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யாததாலும் PCOS உண்டாகும்.
சிகிச்சை :
31 வயதான திருமணமான பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கருத்தரிக்க முடியாமல் இருந்தார். மேலும் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, உடல் பருமன், ஹைப்போ தைராய்டு போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டார். கருவுறாமை பிரச்சினைகளைத் தடுப்பதில் வாழ்க்கை முறை மிக முக்கியப் பங்கு வகிப்பதால், வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், 45 நிமிடங்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது மற்றும் மருந்துகள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
பிரா அளவை சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி..? எந்த வகை உங்களுக்கு ஏற்றது.? கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
பிசிஓஎஸ் மூலம் ஏற்படும் மலட்டுத்தன்மையை சமாளிக்க பல வழிகள் இருப்பதால், அவரது கர்ப்பத்தில் சிக்கல்கள் இருந்தாலும் ஐயுஐ சிகிச்சையின் உதவியுடன் கருத்தரிக்க முடிந்தது. PCOSக்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் எடையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
PCOSஐ தடுக்கும் உணவு முறைகள் :
* நார்ச்சத்துள்ள நிறைந்த உணவுகளான முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, முளை கட்டிய பயறு வகைகள் , பாதாம், பீன்ஸ், பருப்பு, பெர்ரி, மற்றும் பூசணிக்காயை அடிக்கடி சாப்பிடலாம். இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க மற்றும் உடலில் செரிமானத்தை தூண்டுவதற்கு நார்ச்சத்து உணவுகள் உதவுகிறது.
* புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், தக்காளி, அக்ரூட் பருப்புகள், கீரை மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவுகளை சாப்பிடலாம்.
* சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெள்ளை ரொட்டி, சர்க்கரை தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
* கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாக உள்ள ரவை, கோதுமை மாவு போன்ற முக்கிய மூலப்பொருளைக் கொண்ட பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக, பருப்பு மாவில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவை சாப்பிடலாம்.
* நமது அன்றாட வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது பிரச்சனைக்கு மிகவும் நல்லது. எனவே, தினமும் குறைந்தது 15 நிமிட உடல் உடற்பயிற்சி தேவை என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்து கொள்வது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது விரைவாக கருவுற உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.