முறையான மாதவிடாய் சுழற்சி இல்லாத பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சனை உருவாகிறது. சமீப காலமாக பல பெண்களை பாதித்துள்ள இந்த குறைபாட்டைப் பற்றி நடந்த ஆய்வு, அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. PCOS பாதிப்பு இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்பது பெண்களின் கருப்பையை தாக்குகிறது. கர்ப்பை பைக்குள் உருவாகும் நீர்க்கட்டிகள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணமாக அமைகிறது. இதனால் உடல் எடை கூடுவது, முகம் உள்ளிட்ட தேவையற்ற இடங்களில் முடி வளர்வது, முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் அடிக்கடி மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஏற்பட்டால் குழந்தை பிறப்பில் தாமதத்தை உண்டாக்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக, ஒழுங்கற்ற மாதவிடாய், பிசிஓஎஸ் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை கண்டறிவதற்காக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, பிசிஓஎஸ் பெண்களுக்கு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை உருவாக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன் மற்றும் இருதய நோய்களால் ஆபத்து அதிகரிப்பதற்கு பிசிஓஎஸ் காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் ஆரம்ப கட்டத்திலேயே பிசிஓஎஸ் பிரச்சனையால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பிசிஓஎஸ் பிரச்சனையுடன் பங்கேற்ற மொத்த பெண்களில் 61 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் 5.6 சதவீதம் பேருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பது தெரியவந்தது. ஆய்வில் பங்கேற்ற PCOS பிரச்சனை இல்லாத பெண்களும், தங்களுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இருப்பதாக புகார் அளித்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அதில் 6.2 சதவீத பெண்களின் குடும்பத்தினருக்கு பரம்பரையாகவே இருதய பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : ஆரோக்கியமான முறையில் கர்ப்பமாக இந்த வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ..!
ஹார்வர்ட் சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்-யை ச் சேர்ந்த மருத்துவர் ஸ்ருதி மகாலிங்கய்யா கூறுகையில், "எங்கள் ஆய்வு, மருத்துவரை சந்திக்க செல்லும் போது மட்டுமே பெண்கள் தங்களது உடல் நலனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பதிலாக, வழக்கமான சமயங்களிலும் பெண்கள் பற்றிய தரவுகளை சேகரிக்க அதிகாரம் அளிக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read : Premature menopause குறித்து நீங்கள் அறிய வேண்டியவை!
ஹார்வர்ட் TH சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதில் 12 சதவீத பெண்களுக்கு 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பிசிஎஸ்ஓ பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயத்தில் 14 முதல் 35 வயது வரையிலான பங்கேற்பாளர்களிடமும் இந்த நோய் கண்டறியப்பட்டதால், இது இளமைப் பருவத்திலிருந்தே தொடங்கும் என்பதை ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Heart health, PCOS