முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியுமா..? நிபுணரின் பதில்...

PCOS பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியுமா..? நிபுணரின் பதில்...

காட்சி படம்

காட்சி படம்

இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறால் ஏற்படும் இந்த PCOS பாதிப்புக்கு தகுந்த சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் உடல் பருமன், இதய நோய்கள், எண்டோமெட்ரிக் கேன்சர், நீரிழிவு நோய், ஹைப்பர் இன்சுலினீமியா போன்ற கடும் நிலைகள் ஏற்பட கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் ஒரு பொதுவான ஹார்மோன் பிரச்சனையை இன்று பல பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நம் நாட்டில் 5 பெண்களில் ஒருவருக்கு PCOS பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறால் ஏற்படும் இந்த PCOS பாதிப்புக்கு தகுந்த சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் உடல் பருமன், இதய நோய்கள், எண்டோமெட்ரிக் கேன்சர், நீரிழிவு நோய், ஹைப்பர் இன்சுலினீமியா போன்ற கடும் நிலைகள் ஏற்பட கூடும். முக்கியமாக பெண்கள் கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது PCOS பாதிப்பு. தாய்மை அடையும் போது தான் தங்களின் பெண்மை முழுமையடைந்ததாக பெண்கள் உணர்வார்கள். ஆனால் இந்த கனவை அடைவதில் சிக்கல் ஏற்படுத்தும் PCOS. வளர்சிதை மாற்ற மற்றும் உளவியல் சிக்கல்களின் கலவை PCOS.

PCOS-ஆல் பாதிக்கப்பட்டிருந்தால் கருத்தரிப்பது மிகவும் கடினமா என்ற கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் நிதி கௌதிஷ். PCOS-ஆல் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் கருத்தரிப்பதை சவாலாக்குகின்றன. மகப்பேறியல் நிபுணர்களின் உதவியுடன் தங்கள் ஹார்மோன் சிக்கல்களை சரி செய்து கர்ப்பம் தரிக்க PCOS பாதிக்கப்பட்ட பெண்களால் முடியும் என்றாலும், சாதாரணமாக கர்ப்பம் தரிக்கும் பெண்களை விட இவர்கள் கருவை தக்க வைக்க இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வாழ்க்கை முறையின் அடிப்படையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தவிர PCOS கொண்ட பெண்கள் கர்ப்பத்தின் போது கர்ப்பகால நீரிழிவு மற்றும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பமானாலும் சிசேரியனை நோக்கி செல்ல கூடிய வாய்ப்பு அதிகம். மொத்தத்தில் PCOS உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்னரும் தரித்த பின்னரும் என அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார் நிதி கௌதிஷ். PCOS மரபணு ரீதியாக ஏற்படும் ஒன்று என்பதால் முழுவதும் அதை தடுக்க முடியாது என்றாலும் உரிய சிகிச்சை பெற்றால் தொடர்ந்து அதை நிர்வகிக்க முடியும். குறிப்பாக வாழ்க்கை முறை பழக்கங்களை சீராக வைத்திருப்பது PCOS பாதிப்பை மோசமாக்காமல் தடுக்கும். இந்த பாதிப்பை கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறாமல் விட்டால் அது கருவுறாமைக்கு வழிவகுக்கும் என்றார்.

தேவையற்ற கவலைகள் உடல் நலனையும் பாதிக்கும் : மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்

PCOS- ஐ நிர்வகிக்க செய்ய வேண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்:

- மது மற்றும் புகைபழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்

- ஒருநாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியான உறக்கம் இருக்க வேண்டும்

- தகுந்த உடல் எடையை பராமரிக்க தினசரி 30 நிமிடங்கள் வாக்கிங் அல்லது வொர்கவுட் செய்வது அவசியம்.

- நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதில் உணவின் அளவை குறைத்து 5 வேளையாக சாப்பிடுவது நல்ல பலனை தரும்

- டயட்டில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் சேர்க்க வேண்டும்

- பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் உள்ளிட்டவற்றை தவிர்த்து சுத்திகரிக்கப்படாத உப்பு, சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெயை சேர்த்து கொள்ள வேண்டும்

First published:

Tags: PCOD, PCOS, Pregnancy