ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOD vs PCOS : பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இடையேயான வேறுபாடுகள் என்ன? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

PCOD vs PCOS : பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இடையேயான வேறுபாடுகள் என்ன? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

சமீப நாட்களாக பலரும் மாதவிடாய் தள்ளிப்போவதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். இதை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்னென்ன விஷயங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாக காரணமாக இருக்கின்றன என்று பார்க்கலாம்.

சமீப நாட்களாக பலரும் மாதவிடாய் தள்ளிப்போவதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். இதை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்னென்ன விஷயங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாக காரணமாக இருக்கின்றன என்று பார்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது, அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், பி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை மேம்படுத்தவும் உதவும்.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

பருவ வயதில் இருக்கும் இளம்பெண்கள் முதல் மெனோபாஸ் நெருங்கும் பெண்கள் வரை, ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

பி.சி.ஓ.டி என்றால் (PCOD – Polycystic Ovarian Disease), பி.சி.ஓ.எஸ் என்றால் (PCOD – Polycystic Ovarian Syndrome) ஆகும்.

பெண்கள் சந்திக்கும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளில், ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்மந்தப்பட்ட பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் அனைவரையும் பாதிக்கக்கூடியது இந்த நோய்.

பெண்களின் கருப்பையில் இருக்கும் சூலகம் என்று கூறப்படும் ஓவரி, கருமுட்டையை உற்பத்தி செய்யும் உறுப்பு. இது, ஒவ்வொரு மாதமும் இரண்டு கருமுட்டைகளை உருவாக்குகிறது. கருமுட்டைகள் மட்டுமின்றி, சிறிய அளவுகளில், பெண்கள் மற்றும் ஆண்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. (female and male hormones)

பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ், இரண்டுமே, ஹார்மோன் குறைபாட்டால் பெண்களின் ஓவரி மற்றும் கருமுட்டையில் ஏற்படும் சிக்கல்களைக் குறிக்கிறது.

பெரும்பாலும், பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் ஒரே மாதிரியான குறைபாடு போலத் தான் தோன்றும். இருப்பினும், இரண்டு நிலைகளுக்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வேறுபாடுகள் உள்ளன.

பி.சி.ஓ.டி (PCOD) என்றால் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்பது, கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகத்தில் (ஓவரி) ஏற்படும் பாதிப்பைக் குறிக்கிறது. இதிலே, கருமுட்டைகள் முழுவதும் வளர்ச்சியடையாமலே, வெளியேற்றப்படும். முழுமையாக வளர்ச்சி பெறாத முட்டைகள் நாளடைவில் சிறு சிறு நீர்க்கட்டிகளாக மாறிவிடுகிறது.

இதனால், முறையற்ற மாதவிடாய், அல்லது மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, எடை அதிகரிப்பு, மேல் பேட்டர்ன் பால்ட்னஸ் எனப்படும் ஆண்களுக்கு ஏற்படுவது போல முன்பக்க முடி இழப்பு, மற்றும் வயிறு வலி ஆகியவை ஏற்படலாம்.

காலப்போக்கில், பாதிப்படைந்த சூலகங்கள், பெரிதாக வளர்ந்து, அதிக அளவிலான ஆண் (male) ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்.

PCOD ஏற்படுவதற்கான முக்கியக் காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, அதிகளவு ஜன்க் உணவுகள் உட்கொள்வது மற்றும் உடல் பருமன் ஆகும்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) என்பது என்ன?

PCOS என்பது, எண்டோகிரைன் சிஸ்டம் எனப்படும் நாளமில்லா சுரப்பியின் வளர்சிதைக் குறைபாடு ஆகும். அதிக அளவிலான, ஆண் ஹார்மோன்கள் சுரப்பதால், ஓவிலேஷனில் (மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் கருமுட்டை உற்பத்தி, வளர்ச்சி மற்றும் வெளியேற்றம்) முறையற்ற தன்மையை உருவாக்கும். இதனால், ஓவரியில் அதிக எண்ணிக்கையில் நிறைய கட்டிகள் தோன்றும். மாதவிடாய் பாதிக்கும், கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படும்.

பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் வேறுபாடுகள் :

* பி.சி.ஓ.டி-ஐ ஒரு நோய் என்ற அளவில் கூட முழுமையாக கருத முடியாது. ஆனால், பி.சி.ஓ.எஸ் என்பது மிகவும் தீவிரமான குறைபாடு.

* பி.சி.ஓ.டி-ஐ கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம், பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸை சரி செய்ய முடியும்.

* பி.சி.ஓ.எஸ் பொறுத்தவரை, இது வளர்சிதை மாற்றத்தில் உள்ள குறைபாடாகவே காணப்படுகிறது. எனவே, இதற்கு முறையான மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் தேவை.

* தோராயமாக, உலக அளவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பி.சி.ஓ.டி பாதிப்பு இருக்கிறது. அதாவது, பி.சி.ஓ.டி என்பது அச்சப்படக்கூடிய, தீவிரமான பிரச்சனை இல்லை, மிகவும் பொதுவானது தான் என்று அர்த்தம்.

* பி.சி.ஓ.டி பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பி.சி.ஓ.எஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

* பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்பது, உடலின் இருக்கும் ஒரு முக்கிய சுரப்பியான, நாளமில்லா சுரப்பியின் (எண்டோகிரைன் கிளாண்டு) குறைபாடு. ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்பது ஹார்மோனில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் மருத்துவ பிரச்சனை.

* உடலின் முக்கிய அங்கமாக இருக்கும் சுரப்பிகள் பாதிக்கப்பட்டால், அதற்கு சரியான மருத்துவ சிகிச்சை தேவை. நாளமில்லா சுரப்பியின் குறைபாட்டின் விளைவாக பி.சி.ஓ.எஸ், பெண்கள் உடலில் ஹார்மோன் அளவு குறைவதால் உண்டாகிறது. இதுவும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.

* ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பது ஒரு அறிகுறி தான், நோயல்ல. எனவே, ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் உண்டாகும் பி.சி.ஓ.டி என்பதே முறையற்ற மாதவிடாய் அல்லது கரு உண்டாவதில் சிக்கல் ஆகியவற்றை குறிக்கும் ஒரு அறிகுறி ஆகும். அதே நேரத்தில், பி.சி.ஓ.எஸ் என்பது ஒரு உடல்நலக் குறைபாடு.

கர்ப்பம் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் :

* பி.சி.ஓ.டி ஒரு தீவிர நோய் அல்ல என்பதால், இது பெண்களின் கருவுறும் தனிமையை பாதிக்காது. பி.சி.ஓ.டி இருந்தாலும், பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் ஏற்படாது, எனவே, கருத்தரிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை.

* பி.சி.ஓ.டி பிரச்சனையோ பெண்கள் கர்ப்பமாக இருந்தாலும், அது அவர்களின் கர்ப்பகாலத்தை பெரிதாக பாதிக்காது. கர்ப்பகாலம் மற்றும் பிரசவம் ஆகியவற்றை சுலபமாக எதிர்கொள்ள, அவர்களுக்கு குறைந்த அளவிலான உதவியே தேவைப்படும்.

PCOD பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது..? பாலிவுட் பிரபலம் பகிர்ந்துகொண்ட அனுபவம்..!

* மறுபுறம், பி.சி.ஓ.எஸ் ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், குறைபாடு காரணமாக கருத்தரிப்பது கடினமாக மாறுகிறது.

* பி.சி.ஓ.எஸ் பாதிப்பு உள்ள பெண்களின் கருப்பைகள், தொடர்ந்து முட்டைகளை உற்பத்தி செய்ய இயலாது. அத்தகைய பெண்கள் தங்கள் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் எதிர்கொள்கிறார்கள். கர்ப்பம் ஆனாலும், கருச்சிதைவுகளில் ஏற்படும் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.

* கர்ப்பம் ஒவிலேஷன் சுழற்சியோடு தொடர்புடையது. பி.சி.ஓ.எஸ் உள்ள ஒரு பெண்ணின் உடலில், ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான சுரப்பால், பாதிப்படைந்து, ஒவிலேஷன் சுழற்சித் திறனை இழக்கின்றனர். இதனால் அவர்கள் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு.

* மற்றொரு பக்கத்தில், பி.சி.ஓ.டி உடைய பெண்களுக்கு ஒவிலேஷன் பாதிப்பு இல்லை என்பதால், அவர்கள் கர்ப்பம் அடைவதில் சிக்கல்கள் இருக்காது.

* பி.சி.ஓ.எஸ் கருவுறாமை மற்றும் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகம்.

* உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் பி.சி.ஓ.டி ஏற்படலாம் என்றாலும், பி.சி.ஓ.எஸ்ஸில் ஏற்படுவது போன்ற தீவிரமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படாது.

கருப்பை நீர்க்கட்டிகளுக்கு வாழ்க்கை முறைதான் காரணமா..? அப்போ இதையெல்லாம் மாத்திக்கோங்க..!

அறிகுறி :

* பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவாக இளமை பருவத்திலேயே, மிகவும் கவனிக்கத்தக்க அறிகுறிகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.

* வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அல்லது எடை அதிகரிப்பு, உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகத்தில் முடி வளர்ச்சி மற்றும் முகப்பரு ஆகியவை ஆரம்ப கால அறிகுறிகளாகும்.

* பி.சி.ஓ.எஸ் பாதிப்பில் அதிக அளவு சுரக்கும் ஆண் ஹார்மோன்களைப்போல, பி.சி.ஓ.டி வெளியிடாததால், அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றன. சில நேரங்களில், அறிகுறிகள் அறியப்படாமலே போய்விடுகின்றன.

இதற்கான தீர்வு என்ன?

பி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி இரண்டும் நமது கருப்பைகள் மற்றும் ஹார்மோன்களை சார்ந்து ஏற்படும் நோய்கள் என்றாலும், ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன. பி.சி.ஓ.டி.யை விட பி.சி.ஓ.எஸ் மிகவும் கடுமையானது என்றாலும், இரண்டும் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் முறையான சிகிச்சையளிக்க முடியும், நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது, அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், பி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை மேம்படுத்தவும் உதவும். அதிகப்படியான முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் மற்றும் அடிவயிற்று வலி ஆகிய தொந்தரவுகள் இருந்தால், ஒரு மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பேர வேண்டும்.

First published:

Tags: Health issues, PCOD, PCOS, Women Health