பப்பாளி இலை டெங்குவை குணப்படுத்தாதா...? மருத்துவர் விளக்கம்

இதுவரை பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும் என்பதற்கு எந்த வித ஆய்வுகளும், தகவல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பப்பாளி இலை டெங்குவை குணப்படுத்தாதா...? மருத்துவர் விளக்கம்
கஷாயம்
  • News18
  • Last Updated: November 28, 2019, 3:47 PM IST
  • Share this:
டெங்கு வந்தாலும்.. வரும் அறிகுறி தெரிந்தாலும்.. ஏன் காய்ச்சல் வரும் அறிகுறி தெரிந்தாலே அனைவரும் சொல்லும் முதல் குறிப்பு, பப்பாளி சாறு குடிங்க...!

அது உண்மையா... பொய்யா என்று கொஞ்சமும் யோசிக்காமல் பலரும் பப்பாளி சாற்றை குடித்திருப்பார்கள்.. அப்படித்தான் சமீபத்திலும் வாட்ஸப்பில் ”பப்பாளி இலைச்சாறு குடித்தால் டெங்கு வராது. 12 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள பிளேட்ஸ் எண்ணிக்கை 68,000 முதல் 2,00,000 வரை அதிகரிக்கும். எனவே உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இந்தியா முழுவதும் டெங்கு அதிகரித்துள்ளது. எனவே பகிர்ந்து உயிர்களை காப்பாற்றுங்கள்” என்று பரவியது.
இந்த வாட்ஸ் அப் செய்தியை நியூஸ் மினிட் செய்தித்தளம் ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவச் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவிந்திரநாத்திடம் கருத்து கேட்டுள்ளது நியூஸ் மினிட். அதில் அவர் “டெங்குவை ஒழிக்க மருத்துவ ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும் என்பதற்கு எந்த வித ஆய்வுகளும், தகவல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவர்களும், அரசாங்கமும் பரிந்துரைப்பது நிலவேம்புக் குடிநீர் மட்டும்தான் “ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ” இது முற்றிலும் தவறான செய்தி. பொய்யான தகவல் பரவுவதை அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இது உண்மையல்ல என்பதை நிரூபித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

Loading... 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...