முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பானி பூரியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? இப்படி சாப்பிட்டால் ஆகாது..!

பானி பூரியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? இப்படி சாப்பிட்டால் ஆகாது..!

பானி பூரியில் அதிக கலோரி உள்ளது.

பானி பூரியில் அதிக கலோரி உள்ளது.

சில காரணங்களுக்காக நீங்கள் கோல்கப்பாஸ் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால், மீண்டும் சாப்பிடத் தொடங்குவதற்கான சில காரணங்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா முழுவதும் தெருக்கடைகளில் கிடைக்கும் சிற்றுண்டி உணவுகளில் ஒன்றான பானி பூரியைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும். துவக்கத்தில் இது வட இந்தியாவில் பிரபலமாக காணப்பட்டாலும், தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான உணவுகளில் ஒன்று. இதை, பானி பூரி, கோல்கப்பா, புக்ச்சா, கப்சுப் என பல பெயர்களில் கூறுவதுண்டு. ஆனால், நம்மில் பலர் இதை ஆரோக்கியமற்ற உணவாக கருதி, அதை சாப்பிடுவதை நிறுத்தியிருப்போம்.

குறிப்பாக அனைத்து உணவிலும், நல்லது கேட்டது என இரண்டும் இருக்கும். அந்தவகையில், பர்கர், பீஸ்ஸா போன்ற சீஸியான ஜங்க் உணவுகளை விட பானி பூரி மிகவும் ஆரோக்கியமான விருப்பமாக உள்ளது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம், ஒரு நாளைக்கு வெறும் 6 பானி பூரி சாப்பிட்டால் உங்கள் எடையை குறைக்கலாம் என கூறப்படுகிறது. கோல்காப்பாவை எப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம் என இங்கே காணலாம்.

எடையை குறைக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே பானி பூரி செய்து சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம். வீட்டிலேயே, கோதுமை மாவை பயன்படுத்தி, குறைந்த எண்ணையில் பானி பூரி தயாரிக்கவும்.

புதினா, சீரகம், கீல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே பூரிக்கான தண்ணீரை தயாரிக்கவும். அது செரிமானத்திற்கு உதவும். தனியா அல்லது கொத்தமல்லி இலைகளையும் பயன்படுத்தலாம், ஏனெனில் அவை வீக்கத்தைத் தடுக்கின்றன.

அத்துடன் இதில் சேர்க்கப்படும் சீரகம் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும், இது வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது. மிளகுக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவும்.

உடல் எடையை குறைக்க பானி பூரியை இப்படி சாப்பிடுங்க…

1. கோல்கப்பாவுடன் மீத்தா சட்னி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

2. இனிப்பான தண்ணீர் அல்லது மீத்தா பானிக்கு செல்லாமல், கட்டா/புதினா தண்ணீரை தேர்வு செய்யவும். சில விற்பனையாளர்கள் ஹிங், அஜ்வைன் அல்லது ஜீரா போன்ற பல்வேறு கோல்கப்பா பானி விருப்பங்களையும் வழங்குகிறார்கள். இவை செரிமான விருப்பங்களாகவும் இருப்பதால் இவற்றை முயற்சி செய்யலாம்.

Also Read | நீண்ட நாள் உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

3. பானி பூரியில் உருளைக்கிழங்கின் அளவைக் குறைக்கவும் அல்லது மசித்த கொண்டைக்கடலை, மாதுளை அல்லது இனிப்பு உருளைக்கிழங்கு, மூங் முளைகள், பச்சை பட்டாணி போன்ற ஆரோக்கியமானவற்றைப் போட்டு பானி பூரியை ஆரோக்கியமானதாக மாற்றவும்.

4. சூஜி பூரிகளைத் தவிர்த்து, அட்டா பூரிகளுக்குச் செல்லவும்.

5. பானிபூரி தண்ணீரைக் குடிப்பது குமட்டல், வாயு அல்லது அஜீரணம் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்த ஜல்ஜீரா, புதினா, தனியா போன்ற செரிமான பொருட்களைப் பயன்படுத்தி பானிபூரி தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.

6. நீங்கள் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர் என்றால், வாரத்திற்கு இரண்டு முறை பானிபூரி குடிக்க வேண்டும். இருப்பினும், அசிடிட்டிக்கு வழிவகுக்கும் என்பதால், பானிபூரி தண்ணீர் அதிகம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதாவது, புளி, புதினா, பெருங்காயம், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் குடலுக்கு சிறந்தது. நல்ல குடல் ஆரோக்கியம் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.

Also Read | இந்த 10 இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்..!

7. உங்கள் பானிபூரிக்கு ஆரோக்கியமான ட்விஸ்ட் கொடுக்கலாம். ஆனால், விரைவான முடிவுகளுக்கு, உங்கள் அன்றாட உணவில் பல ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும், நீங்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமாக இருக்க நடைபயிற்சி, ஓட்டம் அல்லது யோகா போன்ற சில உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பானி பூரியில் உள்ள சத்துக்கள்:

பானி பூரியில், நார்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, மினரல், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி மற்றும் டி ஆகியவை நிறைந்திருக்கின்றன.

First published:

Tags: Food recipes, Health Benefits, Weight loss