Grief Therapy : துக்க சிகிச்சை என்றால் என்ன? தற்போது ஏன் அவசியம்?

துக்க சிகிச்சை

கொரோனாவுக்கு பிறகு இந்த சிகிச்சையின் தேவை அதிகரித்திருப்பதாகவும், நீண்ட சோகத்துக்குள்ளாகியிருப்பவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது எனத் தெரிவிக்கிறார்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை, நேசத்துக்குரியவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் ஞாபகத்துடன் இருக்கும் அவர்கள், தொடர் சோகத்துக்குள்ளாகி, அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். ஏக்கம், கோபம், தனிமை, வெறுமையான உணர்வு என எதிர்மறை உணர்ச்சிகளின் சங்கமமாக பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மாறி விடுகிறது.

இதுபோன்றவர்களுக்கு பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு முறையான சிகிச்சை அவசியம். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இயற்கையானது என்பதை அவர்கள் உணர்ந்து, அந்த விஷயத்தில் இருந்து கடந்து செல்வதற்கான வழியை துக்க சிகிச்சையில் அளிக்க முடியும். கடந்த ஆண்டு தாய், தந்தையரை இழந்த ஐ.டி ஊழியர் சலோனி, கடும் துக்கத்துக்குள்ளாகியிருக்கிறார். வேலையில் இருந்து விலகிய அவர், தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

பெற்றோரை இழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், ஒருகட்டத்தில் அந்த துக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டுள்ளார். பின்னர் துக்க சிகிச்சயை எடுத்துக்கொண்ட அவர், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், துக்க சிகிச்சை என்பது கடினமான விஷயங்களை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.



சோகத்துக்கு தீர்வு அளிப்பதில் நிபுணராக இருக்கும் மருத்துவர் ருச்சி மிஸ்ரா, இழப்புகள், அதனால் ஏற்படும் வலி இயல்பானது என்கிறார். ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை பலராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, குறிப்பாக அவர்களால் அதில் இருந்து வெளியேவர முடியவில்லை என கூறும் அவர், இதுபோன்ற நீண்ட நாள் சோகம் தொடர்ந்தால் இதயம் சார்ந்த பாதிப்புகள், மனநிலை பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர் ருச்சி மிஸ்ரா கூறுகிறார்.

Gaslighting | எமோஷனல் துஷ்பிரயோகம் பற்றி தெரியுமா? நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

34 வயதான சுஜாதா ஸ்ரீனிவாஸ் பேசும்போது, தனது தந்தையை கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்டதை வேதனையுடன் பதிவு செய்கிறார். அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த அவர், ஒருகட்டத்தில் தனக்கு மருத்து உதவி தேவை என்பதை உணர்ந்திருக்கிறார். பின்னர், முறையாக துக்க சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு பேசும்போது, தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்ததாகவும், அது உடல் மற்றும் மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே தன்னால் இயல்பாக இருக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவர் பிரியதர்ஷினி பேசும்போது, 2018 ஆம் ஆண்டு வரை துக்க சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நாடு முழுவதும் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை எனக் கூறுகிறார். கொரோனாவுக்கு பிறகு இந்த சிகிச்சையின் தேவை அதிகரித்திருப்பதாகவும், நீண்ட சோகத்துக்குள்ளாகியிருப்பவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது எனத் தெரிவிக்கிறார். மருத்துவமனைகளுக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் வழியாக க்கூட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் விளக்குகிறார்.



சிகிச்சையில் என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவர்களின் இழப்பு குறித்த வேதனையை முழுமையாக பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களின் வேதனையை, குமுறலை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும். அவர்களின் குணாதிசயத்தை அலசாமல், அவர்களுக்காக சப்போர்டாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் என கவுன்சிலிங் வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: