ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் கணைய புற்றுநோய் இருக்க வாய்ப்புகள் அதிகம்..!

உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் கணைய புற்றுநோய் இருக்க வாய்ப்புகள் அதிகம்..!

கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

மற்ற புற்று நோய்களைப் போலவே இந்த கணைய புற்றுநோயும் உடல் உறுப்புகளில் ஏற்படும் அதிகப்படியான செல்களின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது மிகச் சிறிய ஒரு சுரப்பி அல்லது ஒரு உறுப்பு எனவும் எடுத்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகவும் அரிதானதும் அதேசமயம் மிக கொடுமையானதாகவும் அறியப்படும் கணைய புற்று நோய் இருப்பதை கண்டறியும் அறிகுறியை பற்றி தேசிய சுகாதார சேவையான NHS தெரிவித்துள்ளது.

மற்ற புற்று நோய்களைப் போலவே இந்த கணைய புற்றுநோயும் உடல் உறுப்புகளில் ஏற்படும் அதிகப்படியான செல்களின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது மிகச் சிறிய ஒரு சுரப்பி அல்லது ஒரு உறுப்பு எனவும் எடுத்து கொள்ளலாம். உடலில் ஹார்மோன்களை சுரக்க வைப்பதற்கும் உடல் முழுவதும் உள்ள ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கும் முக்கிய காரணியாக இந்த கணையம் செயல்படுகிறது. இந்தக் கணைய புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது. ஆனால் இது வந்து விட்டால் இருப்பதிலேயே மிகக் கொடுமையான ஒரு புற்றுநோயாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் ஒரு சில புற்றுநோய்கள் அதன் ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகளை வெளிப்படுத்த துவங்கும். அதன் மூலம் நாம் உரிய நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் அவற்றை கண்டறிந்து ஆரம்பத்திலேயே அதற்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம். ஆனால் இந்த கனவு புற்றுநோயை பொருத்தவரை இது முற்றிப்போன நிலையில் தான் முதல் கட்ட அறிகுறியை வெளிப்படுத்த துவங்குகிறது எனவே இதனை கண்டறிவதில் மிகப்பெரிய ஒரு சிக்கல் ஏற்படுகிறது.

கணைய புற்று நோய்க்கான முக்கிய அறிகுறி:

கணைய புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் அதன் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாக புற்றுநோய் பரவி இருப்பதற்கு ஏற்ற மாறுபடுகிறது. அனைத்திலும் பொதுவாக அதிகப்படியான வலியானது அனைத்து நிலை புற்று நோய்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான வலி ஏற்படுவதற்கு காரணம் இந்த புற்றுநோய் செல்கள் உடலில் உள்ள வாழும் திசுக்களை மொத்தமாக சிதைக்கின்றன.

இந்த 7 அறிகுறிகளை வைத்து உங்கள் கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்..!

அதுமட்டும் இல்லாமல் முதுகுப் பகுதியிலும் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இந்த வயிற்றுப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏற்படக்கூடிய வலியானது எவராலும் தாங்கவே முடியாதபடி மிகக் கொடுமையானதாக இருக்கும். யூகே வின் தேசிய சுகாதார சேவையின் அறிக்கையின்படி இந்த முதுகு வலியானது புற்றுநோய்க்கான காரணமாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மிக அதிகப்படியான வலி காரணமே இல்லாமல் உங்களுக்கு ஏற்படும் போது கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான மற்ற அறிகுறிகள்:

* வயிற்றின் மேல் பக்கம் வலிக்க துவங்கி அப்படியே முதுகு வரை அந்த வலி பரவுவது

* மஞ்சள் காமாலை

* சோர்வு

* பசியின்மை

* வெளிர் நிற மலம்

* கருப்பு நிற மலம்

* உடல் எடை குறைதல்

* உடலில் ஆங்காங்கே ரத்தம் கட்டுதல்

* தோல் வறட்சி மற்றும் அரிப்பு

* நீரிழிவு நோய்

* வாந்தி அல்லது மயக்கம்

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pancreatic Cancer