ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பேலியோ டயட்டால் இறந்த நடிகரின் மனைவி... பக்கவிளைவுகளும்... காரணங்களும்..!

பேலியோ டயட்டால் இறந்த நடிகரின் மனைவி... பக்கவிளைவுகளும்... காரணங்களும்..!

பேலியோ டயட்

பேலியோ டயட்

பொதுவாக பேலியோ டயட் உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டயட் முறையில் புரோட்டீன் சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது மீன், இறைச்சி , காய்கறிகள் மற்றும் பழங்களை இந்த டயட்டில் சாப்பிடலாம். ஆனால் தானிய உணவுகள், பால் சார்ந்த அனைத்து உணவுகளும் தவிர்க்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி பேலியோ டயட்டால் இறந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை கட்டுப்படுத்துவதற்காக பேலியோ டயட் பின்பற்றியுள்ளார். இறுதியில் அந்த டயட்டே நீரிழிவு நோய் அதிகரிக்க காரணமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  பொதுவாக பேலியோ டயட் உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டயட் முறையில் புரோட்டீன் சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது மீன், இறைச்சி , காய்கறிகள் மற்றும் பழங்களை இந்த டயட்டில் சாப்பிடலாம். ஆனால் தானிய உணவுகள், பால் சார்ந்த அனைத்து உணவுகளும் தவிர்க்கப்படும். இப்படி உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும் பேலியோ டயட் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா என அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே அதன் உண்மை தன்மை என்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரை.

  பேலியோ டயட் ஆரோக்கியமானதா..?

  பேலியோ டயட் குறித்த தெளிவான ஆய்வு இன்னும் இல்லாததால் அதன் நன்மை, தீமைகள் குறைந்த அளவிலேயே கிடைக்கப்பெறுகிறது. இந்த டயட்டில் புரோட்டீன் சத்துதான் அதிகமாக எடுத்துக்கொள்வதால் விட்டமின் சத்துக்களின் குறைபாடு உள்ளது. குறிப்பாக பால் பொருட்களை தவிர்ப்பதால் கால்சியம் சத்து மற்றும் விட்டமின் டி சத்து இரண்டுமே கிடைக்காமல் போகிறது. இவை இரண்டுமே எலும்புகளின் உறுதியை பலப்படுத்தும் என்பதால் எலும்பு பலவீனமடையலாம். அதோடு புரதச்சத்து அதிகமாக உட்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு சில வகை புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.

  Also Read :  இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் பெண்களின் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

  கார்போஹைட்ரேட் மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லதா..?

  இன்றைய ஃபிட்னஸ் உலகம் கார்போஹைட்ரேட் உணவுகளை வில்லனாக பார்க்கிறது. ஆனால் அதுவும் உடலின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாதது. முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மூளையின் ஆரோக்கியம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு அவசியம்தான் என்றாலும் கார்போஹைட்ரேட்டும் உடலின் ஆற்றல் சக்திக்கு அவசியம் தேவைப்படுகிறது.

  பால் பொருட்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பதால் அவற்றின் மூலம் அதிகமாக கிடைக்கக் கூடிய கால்சியம் சத்தை பெறமுடியாமல் போகிறது. கால்சியம் சத்தை பெற பாலை விட சிறந்த மாற்று உணவு இருக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். எனவே இந்த டயட்டை இருப்பவர்களுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. பேலியோ டயட்டில் பால் பொருட்கள் நோய் அழற்சியை ஏற்படுத்துவதாக கூறுகிறது. ஆனால் சில ஆய்வுகள் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நோய் அழற்சியை குறைப்பதாக கூறுகிறது.

  Also Read : மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடுகிறீர்களா..? உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறது..!

  பேலியோ டயட்டால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்னென்ன..?

  பொதுவாக எந்த டயட்டாக இருந்தாலும் அதை நீண்ட நாட்களுக்கு பின்பற்றுவது எதார்த்ததில் சாத்தியமில்லாதது. பேலியோ டயட்டை நீண்ட வருடங்களுக்கு பின்பற்றினாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்பதற்காக மட்டும் பின்பற்றினாலும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கருதி அதை நீண்ட நாட்களுக்கு பின்பற்ற பரிந்துரைப்பதில்லை.

  காரணம் அதன் அளவுக்கு அதிகமான புரோட்டீன் நுகர்வு ஒரு கட்டத்தில் கொழுப்புச் சத்தை அளவுக்கு அதிகமாக சேர்த்துவிடும். அதுவும் கெட்ட கொழுப்பின் சேமிப்பு அதிகமாகி இதயத்தை கடுமையாக பாதிக்கும்.

  அதேபோல் பால் பொருட்களை தவிர்ப்பதால் உண்டாகும் கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்புப் புரை , எலும்பு முறிவு மற்றும் எலும்பு சார்ந்த இனும் பிற நோய்களை அனுபவிக்கக் கூடும். உடலின் ஆற்றலுக்கு தேவைப்படும் கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பதால் உடல் புரோட்டீன் கொழுப்பை ஆற்றலுக்கு பயன்படுத்தும். இது ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்றவை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த பேலியோ டயட்டை தேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையில் பின்பற்றுவது நல்லது.

  யாரெல்லாம் பேலியோ டயட்டை தவிர்க்க வேண்டும்...?

  யாராக இருந்தாலும் பேலியோ டயட்டை பின்பற்ற நினைத்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது. பொதுவாக இதய நோய், சிறுநீரக பாதிப்பு , டைப் 1 நீரிழிவி நோயாளிகள் பேலியோ டயட்டை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Paleo Diet, Side effects, Weight loss